Back

Poem

October 14, 2021

கவிதை

SHARE

கவிதை

மன்னிப்பு கோரி
உன் இன்பாக்ஸ் தட்டும்
என் அத்தனை
குறுஞ்செய்திகளையும்
வாசிக்க கூட செய்யாமல்
நீ அழித்து விடுவது
தெரிந்தும் தான்
தினமும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
ஐ லவ் யூ க்களையும்
ஆயிரம் ஆயிரம் sorry களையும்.
ஏனெனில்
உனக்கு தெரியுமா என்று தெரிய வில்லை
பிரியம்
கொடுப்பதால் குறைந்து போவதும் இல்லை
வேண்டாமென மறுப்பதால் மறையப் போவதும் இல்லை.

,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...