Back

Poem

September 16, 2021

கவிதை

SHARE

கவிதை

அஜித்குமாருக்கு,
என் அநேக வணக்கங்கள் ...! அன்புள்ள அன்பில்லாத என்ற சம்பிரதாயங்கள் இங்கு தேவை இல்லை. இதை நான் கோவத்தோடு எழுதுகிறேன்.
தாடியும் தப்புமாக நீ நன்றாகத் தான் இருக்கிறாய் என்றே நினைக்கிறேன். நானும் மூக்கும் மூக்குத்தியுமாக நன்றாகவே இருக்கிறேன். இதை நீயே அடிக்கடி சொல்லியும் இருக்கிறாய்.
எப்படி இருந்தது உன் கல்கத்தா பயணம்? நான்காம் தேதி கிளம்பினாயல்லவா? நேற்று (15/ 09 /2021) தானே வீடு வந்து சேர்ந்தாய். ஏறத்தாழ இரண்டு வாரங்களை ஓசியில் உண்டு ஓசியிலே ஊர் சுற்றி கழித்திருக்கிறாய்.
எத்தனை நாட்களுக்கு இப்படி உலகம் அன்பால் நிறைந்தது என்று ஊரை ஏமாற்றிக் கொண்டு திரிவதாக உத்தேசம்? உனக்கு வேலைக்கு போய் சம்பாதிக்கற எண்ணமே இல்லையா? உனக்காக அவர்கள் செலவு செய்கிற ஒவ்வொரு ரூபாயும்
அவர்களின் வியர்வையில் விளைந்ததே. ஏன் அன்பு அன்பு என்று அவர்களின் நேரத்தையும் உழைப்பையும் சுரண்டித் தின்கிறாய்.? யோசித்துப் பார்.
இப்போது கூட அன்பின் பொருட்டுத் தான் இதை எழுதினேன் என்று நீ சொன்னாலும் சொல்லு வாய். ஆமாம் அப்படித் தான் என்றே வைத்துக் கொள்வோம். உன் கூற்று படி உலகம் அன்பால் நிறைந்தது தான். என்றாலும், தான்
தோண்றி தனமாக நையா பைசாவுக்கு வழியில்லாமல் எத்தனை நாட்களுக்கு பிறரை அண்டி பிழைப்பாய்.? எல்லா நேரத்திலும் உன்னை ஆதரிக்கவும் அனுசரிக்கவும் ஆள் இருந்து கொண்டே இருக்க மாட்டார்கள் அஜி. நீ மிதம்மீறி
பிறரை நம்புகிறாய் எனத் தோன்றுகிறது. இத்தனை நம்பிக்கை கூடாது. உன் நம்பிக்கை பொய்த்துப் போகிற கணத்தை எப்படி எதிர்கொள்வாயென யோசித்து பார். எனக்கு அந்த கணத்தை நினைத்தால் மிக அச்சமாயிருக்கிறது .ஏன்
உன் இந்த பயணத்தையே எடுத்துக் கொள். நீ நம்பி போனவர் நல்லவராய் இல்லாமல், தினசரிகளில் பார்க்கிறதைப் போல எதாவதொரு வகையில் மோசமான ஆளாய் இருந்திருந்தால் அதை நீ தாங்கிக் கொண்டிருந்திருப்பாயா? அப்படி
யாராலேனும் ஏமாந்து போகிற சமயத்தில் நீ கொண்டிருக்கிற நம்பிக்கையே உன்னைக் கொன்று விடுவோமோ என்று பயமாய் இருக்கிறது அஜி. உலகம் எந்த அளவு அன்பாய் நிறைந்தது என்று நம்புகிறாயோ அதே அளவு இங்கு கோபம்,
வன்மம், பொய், துரோகம் எல்லாம் இருக்கிறது. கொஞ்சம் எதார்த்தத்திற்கு வா. நீ எதார்த்தத்திற்கு வர வேண்டும் என்பதற்காக தான் மேலே அப்படி எல்லாம் எழுதினேன். எப்படியோ இதுவரை உன் வாழ்வில் வந்தவர்கள்
எல்லாம், உன் நம்பிக்கை படியே நல்லவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருந்து விட்டார்கள். ஆச்சர்யம் தான். ஆனால் இனியும் அப்படியே இருக்குமா? இருக்குமானால் உன்னை விட எனக்கே மகிழ்வதிகம். ஒருவேளை,
அப்படி இல்லாத பட்சத்தில் நீ எந்த அளவு உடைந்து போவாய் என்று நினைக்கவே கஷ்டமாய் இருக்கிறது. நீ சென்னை புத்தகத் திருவிழாவுக்கு போய் வந்த போது உன் போனை யாரோ திருடிக் கொண்டதை ஏற்கவும் ஒப்புக்
கொள்ளவும் முடியாமல் தொலைச்சிட்டேன் என்று நீ சொன்ன சொல்லில் இருந்த ஏமாற்றத்தின் வேதனையை யார் உணர்ந்தார்களோ, ஆனால் நான் உணர்ந்தேன் அஜி. உன்னை மீறி நீ உலகை நம்புகிறாய். அது தவறு. கொஞ்சம் உன்
நம்பிக்கையை மீளாய்வு செய்.
அன்புடன்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...