Poem
August 26, 2021
கவிதை
SHARE

கடிதம் - 03 அன்புள்ள சகி, உனக்கு கடிதம் எழுதி நெடு நாளாகி விட்டதில்லையா? ஆமாம், இன்றோடு ஒரு மாதம் நிறைவடைகிறது. சகி ஏதோ வெறுமையாக இருக்கிறது. எழுதலாம் என்று
நினைத்தாலும் கூட எழுத்து வர மாட்டேன் என்கிறது. உன்னோடு பேசாமல் நான் நானாகவே இல்லை சகி. உன் அன்பின் நிழலற்ற நிமிடங்கள் என்னை வாட்டி வதைக்கிறது சகி. நம் ஆதி உரையாடலின்,
நம் ஆதி நாட்களின் நம் ஆதி காதலின் நினைவுகள் என்னை அரித்துண்கிறது. நான் கரைந்து கொண்டிருக்கிறேன். செல்லாக்காசாகிக் கொண்டிருக்கிறேன். நீ என் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம்.
ஒரு பேரன்பின் ஊற்று நீ. என்னை மாற்றிக் கொள்ள மால் ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தவள் நீ. எனும் போதும் உன் அன்பினால் என்னை, எனக்கே தெரியாமல் மாற்றிக் கொண்டிருந்தாய் நீ. என்
தப்புகளை எல்லாம் நீ "சரி" செய்து கொண்டிருந்தாய். சகி, நீ வேரினை மட்டுமில்லை, ஒரு கோடாரிக் காம்பினையும் கூட பூப்பிக்க வல்லவள். ஆனால் சகி உன் இன்மை என்னை
வதைக்கிறது. நீ தந்த நெற்றி முத்தங்களின் ஈரம் என் கண்ணில் கண்ணீராய் வடிகிறது. சகி "காலத்துக்கும் பிரியக் கூடாத உறவு நீ" என்று சொல்லி விட்டு எப்படி உன்னால்
பிரிந்திருக்க முடிகிறது? சகி, நீ மட்டும் என்னைக் காதலிக்கவில்லை நானும் தான் உன்னை காதலித்தேன். காதலிக்கிறேன். இனியும் காதலிப்பேன். எல்லா உயிர்களைப் போலவும் நான்
சுதந்திரமானவனாய் இருக்க ஆசைப்படுபவன் தான். ஆனால் அந்த சுதந்திரத்தை விட என்க்கு உன் அன்பு மிக மிக வேண்டியதாக இருக்கிறது. உன் அன்பிற்காக, உன் அனுக்கத்திற்காக என்
வாழ்க்கையை என் உலகத்தை உன்னளவில் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்று கூட எண்ணியிருக்கிறேன். சகி யாரையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பாதவன் நான். ஆனால் உன்னை என் ரட்சகியாய்
பார்த்தேன். என் வாழ்வின் அத்தனை சாபங்களுக்கும், காயங்களுக்கும் அன்பினை தந்து என்னை அரவணைக்கும் ஒரு தேவதையாய் கண்டேன். ஆனால் காண்பதும் பார்ப்பதும் நிஜமில்லை என்பதை தீ
நிரூபித்துக் காட்டி விட்டாய். சகி நீ அனுப்பிய கவிதை போல நான் மிகை உணர்ச்சிகளின் கலைஞன் தான். என்னால் புறக்கணிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் யாரும், ஏன் நீயே
என்னை கண்டு கொள்ளாத போதும் கூட உலகம் அன்பால் நிறைந்திருக்கிறது என்று அதாவது உலகத்தார் எல்லோரும் என்னை நேசிப்பது போல் என்னால் எழுத முடியும். நான் கற்பனையில் மிதப்பவன்.
என் அன்பின் கோப்பைகள் நிரம்பும் முன்னே அவற்றை குடித்து விட்டு போட்டுடைத்து அன்பின் கிறக்கத்தில் ஆடிக் களிப்பவன். (இங்கு கோப்பை நீ தான்.) கோப்பை இழந்தவன் மறு மிடறு
அன்புக்கு மண்டியிட்டு கையேந்தி தானே ஆக வேண்டும்? நான் அப்படித்தான் இப்போது கையேந்திக் கொண்டிருக்கிறேன். சகி ஐ லவ் யூ சகி. I need you சகி. I am beg you. Stay with me
please. Don't leave me Alone. சகி அநாவசியமாக ஆங்கிலமும் அழுகையும் இப்போது ஏன் வருகிறது என்று தெரியவில்லை சகி. நீ யற்ற வெறுமை பாரேன் எனக்கு வராத பிடிக்காத விசயங்களை
எல்லாம் செய்ய வைக்கிறது. சகி, இப்போது அந்தச் சந்தன நிறத்து சதைத்திட்டுகளுக்கு மத்தியில் முகம் புதைத்தழ வேண்டும் போலிருக்கிறது சகி. வாயேன். வந்தென்னை அணைத்து ஆச வா
சப்படுத்தி அன்பு செய்யேன். வா நாம் காதலித்து கரைந்து போகலாம். வா சகி.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...