Back

Poem

May 18, 2021

கவிதை

SHARE

கவிதை

இது எழுதி, record பண்ணி நாலஞ்சு மாசமாகுது. ஆனா வெளியிட முடியல. அதனால இங்க ஷேர் பண்றேன். கண்பேசும் பாடலுக்கு எதிர் பாடலா அந்தக் கதாநாயகி பாடுறதா எழுதின வரிகள். குரல் :-
ப்ரசூன் வரிகள் :- நானே. ஒரு சரணம் மட்டும் பாடப்பட்டிருக்கும். மொத்த வரிகளும் கீழே பெண் நெஞ்சின் ஆழம் தெரிவதில்லை பெண் அன்பு யாருக்கும் புரிவதில்லை சதை கொண்ட மார்பில்
புதை யுண்ட மனது கண்ணுக்கு தெரிவதில்லை அது யாருக்கும் புரிவதில்லை காதல் வந்து பூத்த பிறகும் கன்னி சொல்லிட உரிமை இல்லை காலம் கோடி ஆன போதும் பெண்ணின் தடைகள் உடைவதில்லை
மங்கையராய் வந்து பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமென்றார் மங்கையராய் இங்கு பிறந்துவிட்டு இவள் படுகின்ற வலிகளை யாரறிவார் பெண் நெஞ்சின் ஆழம் தெரிவதில்லை பெண் அன்பு
யாருக்கும் புரிவதில்லை சதை கொண்ட மார்பில் புதை யுண்ட மனது கண்ணுக்கு தெரிவதில்லை அது யாருக்கும் புரிவதில்லை கண்ணுக்கு தெரியா விலங்கு கழட்டி விட யாருமில்லை காதலை மறுத்திட
கூட பெண்ணுக்கு இங்கே உரிமை இல்லை ஆடையில் மூடிய மார்பில் ஆசைகள் மூடி வைத்தேன் கூண்டுக்குள் மாட்டிய கிளியாய் ஆனேன் பறக்க வழியுமில்லை பழி உனக்கு சொந்தமடி வலிகளது பிறவி
பந்தமடி மலர் வாடி உதிர்ந்த பின்னும் மணத்தல் மட்டும் தீர்வதே இல்லையடி பெண் நெஞ்சின் ஆழம் தெரிவதில்லை பெண் அன்பு யாருக்கும் புரிவதில்லை சதை கொண்ட மார்பில் புதை யுண்ட மனது
கண்ணுக்கு தெரிவதில்லை அது யாருக்கும் புரிவதில்லை மனதினில் காதல் மலர்ந் துள்ளது அதை உறவுகள் தானே தடுத்துள்ளது உன்னோடு வந்திட மனம் ஏங்குது என் கண்ணோடு காதல் வழிகின்றது
உன் சொற்கள் என்னை தாக்கியதால் என் உள்ளம் உடைந்து தூளானது பொய்யென்று நீயும் சொன்னதனால் என் பூமனம் ஏனோ புண்ணாது ஏ உறவிருந்தால் பிரிவிருக்கும் பிரிவினில் ஏக்கம் பெருகி
வரும் கோபம் வரும் கொஞ்சம் தாபம் வரும் புரிந்து கொண்டால் காதல் வளர்ந்து வரும் உறவுகளால் நான் உறுந்துயரம் உனக்கு தான் ஏனோ புரியவில்லை காதலிலும் சிறு மோதலிலும் வதை படும்
மனது தாங்கவில்லை

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...