Poem
May 2, 2021
கவிதை
SHARE

பெண் உடல், பெண் சுதந்திரம் என்று இவ்வளவும் பேசுகிற நான் யோக்கியனா அயோக்கியனா என்பதை விட நான் பேசுகிற அல்லது முன் வைக்கிற விசயம் சரியா தவறா என்று யோசியுங்கள். மேலும்
நானும், ஆணுக்கு சாதகமாக கட்டமைக்கப்பட்ட இந்த ஆணாதிக்க சமூதாயத்தில் பிறந்து முழுக்க முழுக்க பெண்ணின்/களின் தயவில் வளர்ந்தவன் தான். அவளை அடிமைபடுத்துவதால் கிடைத்த
சொகுசில் வளர்ந்தவனே நான். பெண் தான் எனக்கு சமைத்து போட்டு, துணிகளை துவைத்து தந்து, என்னை குளிப்பாட்டி விட்டு வளர்த்தவள். இப்போது சில பல ஆண்டுகளாகத் தான் வாசிப்பின்
வழியாகவும் யோசிப்பதன் வழியாகவும் அது எல்லாம் தவறென்றும், மாற மற்றும் மாற்ற வேண்டியது என்றும் உணர்ந்து என்னை மாற்றிக் கொள்ளவும் மாற வேண்டியவர்களுக்காக எழுதவும் பேசவும்
செய்கிறேன். உடலை மூடி மூடி மறைத்து வாழும், ஆடைக்குமேல் ஆடைகளோடு இறுக்கத்தின் பிசு பிசுப்போடு வாழும், மாதவிடாய் நேரத்திலும் உதிரப்போக்கோடும் வலி வேதனையோடும் வீட்டு வேலை
செய்து வாழும், மாதவிடாய் தீட்டு என்று வீட்டுக்கு வெளியில் குளிரிலும் வெயிலும் கிடந்து வாழ்ந்த, இன்னும் எத்தனையோ கற்பு கலாச்சார பண்பாட்டு கட்டுப்பாடுகளின் ஆதிக்க
நிலைக்குட்பட்டு வாழ்ந்த, வாழும் பெண்களின் மத்தயில், அன்பின் அரவணைப்பில் வளர்ந்தவன் நான். என் வட்டாரத்தில் பெண்கள் உண்மையிலே அதிகமான இடத்தை பிடித்திருக்கிறார்கள். எனக்கு
நெருக்கமானவர்களின் பட்டியில் பெண்களே அதிகம். அதனால் மற்ற (என் வயது) ஆண்களை விடவும் கொஞ்சம் கூடுதலாகவே பெண்களின் வலியும் வேதனையும் தெரியும் எனக்கு. எனவேதான், இத்தனை
அழுத்தத்தோடும் வேதனையோடும் கொஞ்சலோடும் மிரட்டலோடும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். உங்கள் வீட்டுக் பெண்களைக் கொஞ்சம் கேளுங்கள், உடல் என்பதும் அது கொண்டிருப்பதாய் சொல்கிற
கற்பும், அதன் மீதிருக்கு பண்பாட்டு கலாச்சார அழுத்தங்களும் அவர்களுக்கு எத்தனை பத்திரக் குறைவான உணர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவரும். நண்பர்களே, பெண் உடலை
உடலாய் பார்ப்பது, பகுத்தறிவு என்பதையும் தாண்டி அது நாம், நம் தாய்க்கும் மகளுக்கும் தோழிக்கும் தருகிற குறைந்தபட்ச நம்பிக்கையும் சுதந்திரமும் ஆகும். கற்பென்பது கடவுளைப்
போல பொய்யான கட்டுக்கதை.அது உடலில் இருப்பதாகச் சொல்வது மிகப்பெரிய முட்டாள் தனம். உடல் என்பது வெறும் சதையும் எலும்பும் மட்டுமே. மேலும் கலாச்சாரம் பண்பாட்டு விதிகள்
எல்லாம் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப மாற வேண்டியவை. மாற்றப் பட வேண்டியவை. (ஆ.உ. தா.கோவணத்தில் இருந்து ஜட்டிக்கும், வேஷ்டியில் இருந்து பேண்டுக்கும் மாறியதை போல. // பெ. உ.
தா:- துணியில் இருந்து pad களுக்கு மாறியதைப் போல, சுடிதாரில் இருந்து ஜீன்ஸ் டீ சர்ட்டுக்கு மாறியதைப் போல ) தோழிகளே, இதைப் பற்றி தமையன்களிடத்தில் பேசுங்கள். தாய்மார்களே
இதைப்பற்றி மகன் மற்றும் கணவன்களிடத்தில் பேசுங்கள். தோழர்களே இதைப் பற்றி உங்கள் காதலி/ மனைவியிடம் பேசுங்கள். பேசத் தயக்கமாக இருந்தால் யோசியுங்கள். யோசிக்கும் அளவுக்கு
அறிவில்லை என்றால் வாசியுங்கள். இது எது செய்தாலும் மாற மாட்டேன் என்று சொல்வீர்களானால் தயக்கமே வேண்டாம் செத்துப் போங்கள். 💙🖤❤️ - பைத்தியக்காரன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...