Back

Poem

June 17, 2020

கவிதை

SHARE

கவிதை

பச்சிலை முகம் வாடி
உள்ளுக்குள் அழுது நிற்குமொரு மரத்திற்கு
நீருற்று போதெல்லாம்
பிள்ளைக்கு முலை யூட்டும்
தாயின் நிலையுணர்கிறேன்.
// //
காற்றில் அசைந்து
கை நீட்டி அழைத்து
நிழல் முத்தம் தந்து
நீருற்றி வளர்த்த எனக்கு
தாயாகி சிரிக்கிறது
அந்த வேப்பம் மரம்.
// //
ஒரு வீணையை மீட்டும் விரலாய்
மரங்களை எல்லாம்
மீட்டிக் கொண்டிருந்தது காற்று.
தந்திக் கம்பிகளில் இருந்து
அதிர்ந்தெழும் இசையாய்
இலையும் பூவும்
மாறி மாறி உதிர்கிறது.
இதுவரையிலும்
இசையை கேட்டு மயங்கினவன்
இப்போதும் கண்டு மயக்கி
கட்டிலில் கிடக்கிறேன்.

💙

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...