Poem
May 16, 2020
கவிதை
SHARE

கடவுளைப் போல அர்த்தமற்ற அபத்தமான விசயம் உலகில் வேறு இல்லை.
மேலும், கடவுள் தான் உலகத்தை படைத்து இப்படியான சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் இன்ன பிற விசயங்களையும் படைத்தது என்கிற கருத்தை உடைக்க வேண்டுமாயின் கடவுள் உண்டு என்கிற பொது புத்தியை அழிக்க வேண்டும்.
அது பொய்யானது என்பதை உணர வேண்டும்.
இந்த உலகின் எல்லா படைப்புகளும் சூழ்நிலையை பொறுத்து உருவாகி மாறுதலைடைந்து வந்திருக்கின்றனவே ஒழிய கடவுளால் படைக்கப் பட்டவை இல்லை. இதற்கு ஆதாரங்கள் நிறையவே உண்டு. ஆனால் கடவுள் தான் உலகை படைத்தது
என்று சொல்கிறவர்களிடத்தில் கேட்டு பாருங்கள். ஒரு ஆதாரத் தரவும் இருக்காது. அவதார புருடாக்களையும் கட்டுக்கதைகளையும் வேண்டுமானால் நிறையச் சொல்லுவார்கள்.
எங்கோ காட்டிலும் மேட்டிலும் கிடந்தக் கல்லை எடுத்து வந்து வைத்து குடமுழுக்கு செய்த உடன் அதற்கு சக்தி வந்து விட்டது என்கிறார்கள். இது சாத்தியமானாதா என்ன? சரி அப்படியே சக்தி வந்து விட்டதாக
வைத்துக் கொண்டாலும் அந்தச் சக்தியை அந்த கல்லுக்கு கொடுத்தது மனிதன் என்று தானே ஆகிறது. இப்படி இருக்கும் போது எங்கிருந்து கடவுள் உலகைப் படைத்து நொட்டினார் என்பது தெரிய வில்லை.
எனக்கென்ன என்று இந்தக் கடவுள் சமாச்சாரத்தை விட்டுவிட்டு போய் விட முடியும். ஆனால், நீங்கள் முட்டாளாய் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கல்லுக்கு எந்த சக்தியும் இல்லை என்பதை உணர்கிற சாதாரண
பகுத்தறிவு கூட இல்லை என்பதை நினைக்கும் போது உங்கள் மீதெனக்கு ஆழ்ந்த அனுதாபத்தோடான கோவம் உண்டாகிறது. ஆனால் இங்கு கோபத்தால் ஒரு பலனும் இல்லை. அதன் விளைவாகவே இப்படி விளக்கிக் கொண்டிருகுகிறேன்.
ஏனெனில் நானும் என் சிறு வயதில் கடவுள் உண்டு என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்.இப்போது கொஞ்சமாய் பகுந்தாய்ந்து பார்க்கிற போது தான் தெரிகிறது. அது எல்லாம் சுத்தமான கட்டுக்கதைகள் என்பது. நான் அறிந்து
புரிந்து உணர்ந்ததை உங்களுக்கும் உணர்த்தவே முயலுகிறேன். ஆனால் நீங்கள் காதைப் பொத்திக் கொண்டுத் திரிகிறீர்கள்.
மேலும் இந்தக் கடவுள் என்கிற இல்லாத ஒரு விடயத்தால் பாதிக்கபடுவது தினக் கூலிகளும் அன்றாடங்காய்ச்சிகளும் தான். ஏனெனில் இவர்களுக்கு உழைக்கத் தெரிந்த அளவிற்கு எதையும் பகுந்தாய்ந்து யோசிக்க
தெரிவதில்லை. இன்னும் சொல்லப் போனால் கடவுளை நம்புகிறவன் பகுத்தறிய தெரியாத /முடியாதவனாக இருப்பதன்றி மனச் சாந்தியும் பண பலமும் இல்லாதவானாகவே இருப்பான். இதில் என்னக் கொடுமை என்றால் தான் போவதே நூறு
ஐநூறு சம்பள வேலைக்கு. இதில் கடவுளுக்கு செய்கிறேன் கடவுள் கேட்டார் என்று சொல்லிக் கொண்டு பாலு பழம் தேங்காய் என்ற செலவழித்து கடனாளி ஆகி வறுமையுற்று சாகிறார்கள். இதைச் சொன்னாலும் புரிந்து கொள்கிற
அறிவு கூட இல்லாத நிலையில் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் அவர்களை படைத்ததாகச் சொல்லிக் கொண்டு அவர்கள் கும்பிடுகிற கடவுளின் லட்சசயணத்தையும் அவர்களின் லட்சணத்தையும்.
- மேலும் உரையாடுவோம்.
கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை.
நன்றி.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...