Poem
April 10, 2020
கவிதை
SHARE

#இந்து_என்பது_முட்டாள்களின்_மதம்
இந்து என்கிற ஒரு மதமும், அதன் வேத புராணக்கதைகளும் ஒழிக்கப்பட்டாலே சாதிய வன்முறைகள் பெருமளவில் குறையக் கூடும். தீண்டாமையும் குறையக் கூடும். ஒரு மதத்திற்கான எந்த ஒரு தகுதியும் கொண்டிராத இந்து
மதத்தின் வேராக உள்ள வேதங்களையும், நான்கு வர்ணம் எனப்படுகிற சதுர் வர்ணமும் ஒழிக்கப்பட்டால் தீண்டாமை ஒழிப்பு சாத்தியப்படக்கூடும். ஆனால் இது எளிதில் நடந்தேறக் கூடிய காரியமா? இந்து மதத்தைத்
திருத்துவதென்பது நூறு ரஷ்ய பரட்சி க்கு ஒப்பான காரியம். ஏனெனில் இந்து மதத்தைத் திருத்த வேண்டுமானால் இந்து மதத்தைப் பற்றிக் கொண்டிருக்கிற முட்டாள்களை முதலில் திருத்த வேண்டும். முட்டாள்களின்
எண்ணிக்கை மில்லியன் கடந்து பில்லியன் கணக்கில் இருக்கிறது. இவர்கள் வெறும் முட்டாளாய் இருந்தால் கூட ஏதோ திருத்தி விடக் கூடும். ஆனால், தான் முட்டாளாய் இருப்பதையே உயர்வாக கருதிக் கொண்டு, தன்னை
முட்டாளாய் அடிக்கிற கொள்கையையும் வேத புராணங்களையும், கடவுள் புராணக்கதைகளும் கட்டிக் கொண்டு அழுகிறார்கள் இவர்கள் . ஆக இவர்களைத் திருத்துவது சுலபத்தில் நடக்கிற காரியமில்லை. எனவே, இந்து என்கிற
ஒரு மதத்தையே புறந்தள்ளுவது ஒன்றே இதற்கான தீர்வு. இந்து மதத்தைத் தூக்கி தூர எரிந்து விட்டு கல்வியையும் அன்பையுமே மதமாய் கொண்டு இயங்கினால் தீண்டாமை ஒழிவுக்கு வரும்.
அல்லது
மேற் சொல்லப்பட்ட பில்லியன் கணக்கான முட்டாள்களும் தான் செய்வது, செய்து கொண்டிருந்தது, செய்து கொண்டிருப்பது எல்லாம் தவறு என்று உணர்ந்து, தன் மதமே பொய் மற்றும் புனைவுகளின் குப்பைக் கிடங்கு என்று
உணர்ந்து, அடிமை ஆண்டான் மேல்சாதி கீழ் சாதி என்று பிரித்து இருந்ததற்கான குற்ற உணர்வுக்கு ஆளாகி அன்பையே மதமாய் கொண்டு இயங்கினால் தீண்டாமை ஒழியும்.
இந்தத் திருந்துதலுக்கும் கல்வி வேண்டும். ஆனால் எனக்கு தெரிந்து இந்துக்கள் தான் கற்றதைக் கொஞ்சம் கூட யோசிப்பதோ பிரயோகிப்பதோ இல்லை. அவர்கள் மூளைக்கு காவி முலாம் பூசப்பட்டு பாதுகாப்பாக வீட்டு
பூஜையறையில் கழட்டி வைத்து விடப்படுகிறது போல.அவர்கள் தன் மதத்திற்கு கீழ் படிந்து நடக்கிற இயந்திரங்கள். தனக்கு என்று மனமோ அறிவோ இல்லாதவர்கள். இவ்வாறு இல்லாமல் இருந்திருந்தால் தன் மதத்தால்
தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைப்பட்டிருக்கிற மக்களின் நிலை கண்டு நொந்து, மனங்குமுறி ஏன் எப்படி எதனால் இப்படி என்று யோசித்து எதாவது மாற்றத்தை முன்னெடுத்திருப்பார்கள். ஆனால் இதுவரை
நூற்றுக்கு ஒருவர் கூட அப்படி புறப்படவில்லையே? இதிலிருந்து என்னத் தெரிகிறது. நூற்றுக்கு ஒரு இந்து கூட முறையான பகுத்தறிவுப் பூர்வமான கல்வியை கற்பதில்லை. அவ்வாறு கற்றாலும் அதை பிரயோகிப்பதில்லை.
ஆக இந்து மதம் முட்டாள்களை மட்டுமே உருவாக்கி கொண்டிருப்பது புலனாகிறது. அதனால் நான், "இந்து என்பது முட்டாள்களின் மதம்" என்று சொன்னதிலும் "இந்து மதத்தைத் தூக்கி தூர எரிந்து விட்டு
கல்வியையும் அன்பையுமே மதமாய் கொண்டு இயங்கினால் தீண்டாமை ஒழிவுக்கு வரும். " என்று சொன்னதிலும் துளியும் தவறில்லை என்று கூறி முடிக்கிறேன்.
மேலும் உரையாடுவோம்.
நன்றிகளுடன் ர. அஜித்குமார் (பித்தன்)
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...