Poem
January 27, 2020
கவிதை
SHARE

சாதியத்தின் மறைமுக தாக்கம் /ஆதிக்கம்
நிகரென்று கொட்டு முரசே! - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்; /தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச் சாதி வகுப்பினை யெல்லாம். /அன்பென்று கொட்டு முரசே! - அதில் ஆக்கமுண் டாமென்று கொட்டு; /துன்பங்கள் யாவுமே போகும் - வெறுஞ் சூதுப்
பிரிவுகள் போனால். - பாரதி.
பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை - இந்தப் பிழை நீக்குவதே உயிர் உள்ளாரின் கடமை - பாரதி தாசன்.
இவை எல்லாம் நம் பள்ளி காலங்களில் இருந்து படித்த பாடல்கள் ( பாடங்கள்). சாதிகள் வேண்டாம், தவிர்க்க /தகர்க்க ப்பட வேண்டியவை என்று நமக்கு, நம் பள்ளி பருவத்தின் ஆதியிலிருந்தே போதிக்கப்பட்டு
வருகிறது. ஆனால் சாதி ஒழிந்த பாடில்லை. ஒழியவும் ஒழியாது. ஒழிக்கவும் விட மாட்டார்கள்.( என்றாலும் அதை ஒழிக்கின்ற முயற்சிகளை கைவிட்டு விடக் கூடாது) ஏனெனில் இந்த சமூகக் கட்டமைப்பு அப்படி. இந்திய
மக்கள் தொகையில், 20 சதவீத மக்கள் பட்டியலின சாதியைச் சேர்ந்தவர்கள். புரியும் படி சொன்னால் நீங்கள் கடந்து போகிற 100 பேரில் 20 பேர் அல்லது 5 பேரில் ஒருவர் பட்டியலினத்தவர் ஆவர். இவர்கள் எல்லாம்
இந்துக்களால் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்டடவர்கள். இந்த கணக்கு எதற்கு என்று கேட்கிறீர்களா? இந்தக் கணக்குக்கும் சாதிய ஒழிப்புக்கும் என்ன சமந்தம் என்று கேட்கீறீர்களா? நிற்க.
எனது ஆரம்ப கால பள்ளி வாழ்க்கையை - எட்டாம் வகுப்பு வரை - என் ஊரில் காந்தி நகர் என்று சொல்லப்படுகிற ( பறையர் என்று சொல்லப்படுகிறவர்கள் வசிக்கிற ) இடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
முடித்தேன். பிறகு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு வரை என் ஊரிலே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளை மாசிலாபாளையத்தில் உள்ள ஜீ. வி மேல்நிலைப்
பள்ளியில் படித்தேன். வெறும் சாதாரணக் கணக்குப்படி பார்த்தாலே, என் நண்பர்கள் பட்டியிலில் அல்லது எனக்கு தெரிந்தவர்கள் பட்டியிலில் 5 பேருக்கு ஒருவர் பட்டியலினத்தவராய் இருக்க வேண்டும். இதிலும் நான்
படித்ததே பட்டியலினத்தவர் வசிக்கிற இடத்தில் உள்ள பள்ளியில். அப்படியானால் என் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. இதில் நான் சாதிக்கு எதிர் குரல் கொடுத்து
கொண்டிருக்கிறேன்.
என்னுடைய நட்பு பட்டியலில் தான் இப்படியா என கேள்வி எழுந்து என் கல்லூரி நண்பர் சிலரிடத்தில் உங்களின் நெருக்கமாக உள்ள முதல் இருபது நண்பர்கள் பட்டியிலில் எத்தனை பேர் பட்டியலின சாதியை சேர்ந்தவர்கள்
என்று கேட்டேன். அவர்கள் ஒரு நீண்ட நேர யோசனைக்குப் பிறகு அப்படியாக யாரும் இல்லை அல்லது ஒருவர் அல்லது இருவர் என்கிற பதிலைத் தான் சொன்னார்கள்.
எனக்கு தெரிந்து நானோ அவர்களோ சாதி பார்த்து பழகவில்லை. இத்தனைக்கும் நான் மற்றும் அவர்கள் எல்லாம் சாதி எதிர்ப்புடையவர்கள். அப்படி இருக்கும் போதே அவர்களில் இருந்து நம்மை அல்லது நம்மிலிருந்து
அவர்களை நாசூக்காக நமக்கே தெரியாமல் விலக்கி வைத்திருக்கிறது. இன்னும், சாதி பார்த்துப் பழகி இருந்தால்?
இந்தச் சமூதாயக் கட்டமைப்பு எத்தனை வல்லாதிக்கத்தோடு சாதியத்தைப் பற்றி பிடித்து வைத்திருக்கிறது என்று பாருங்கள். அதிலும் சாதியத்தைப் பார்க்காத நமக்குள்ளே ஒரு மறைமுக ஆதிக்கம் செலுத்தி
வந்திருக்கிறது சாதியம். கொஞ்சம் உங்களுடைய நட்பு வட்டாரத்தையும் அலசி பாருங்கள்.
"உன்னோட நட்பு வட்டாரம் மட்டும் தான் டா இப்படி எங்களோடது ல அப்படி இல்லடா.." என்று சொல்வீர்களானால் மிகுந்த சந்தோசம்.
ஆமாம் அப்படி தான் இருக்கிறது என்றால் எங்கோ தப்பு இருக்கிறது. சாதியம் பார்க்கவில்லை பார்த்ததில்லை என்று சொல்கிற நாமே தப்பான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் அல்லது நமக்கு தப்பான வாழ்க்கை முறை
போதிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய தவறான வாழ்க்கை முறை நமக்கே சுட்டிக்காட்டப்படவில்லை. இனியேனும் உணருங்கள். உணர்த்துங்கள். இந்த சமூகத்தின் வாழ்க்கை முறையிலேயே மாற்றம் வேண்டி இருக்கிறது என்று
அர்த்தம். மாற்றுங்கள். மாறுங்கள். சாதியப் பெருமை சோறு போடாது என்பதை சொல்லுங்கள். சாதியப் பெருமை சவரம் செய்துகொள்ளக் கூட உதவாது என்று சொல்லுங்கள். சாதி என்பது படித்தவனின் மசுரு க்கு சமானம்
என்று உணர்த்துங்கள். உணருங்கள். உங்களையும் உங்களைச் சார்ந்தவரையும் உயர்த்துங்கள். உயருங்கள்.
நன்றி.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...