Back
Poem
June 6, 2019
கவிதை
SHARE

நட்சத்திரக் காட்டில் வசிக்கிறேன் நான்.
என்னை சுற்றிலும் ஒரே ஒளி மழை.
உறக்கம் வந்தால் இலை இலையாய்
உதிர்ந்த நட்சத்திரங்களை பொறுக்கி குவித்து மெத்தை ஆக்கி
படுத்துக் கொள்வேன் .
குளிரென்றால் காய்ந்துலர்ந்த நட்சத்திரங்களில் கனல் மூட்டி குளிர்காய்வேன்.
எழுத வேண்டுமென்றால்
நட்சத்திரங்களை காவல் வைத்து
கவிதை என்று எது எதையோ
இப்படி சகட்டுமேனிக்கு கிறுக்குவேன்.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...