Poem
February 8, 2019
கவிதை
SHARE

#பெண்களுக்கானது. #பெண்களுக்கு_மட்டுமானதில்லை. பெண்கள் தன்னை அழகு படுத்திக்றத ஒரு வேலையாகவே வச்சிருக்காங்க. தன்னை யாரேனும் அழகா இருக்க னு சொல்லனும் ஏங்கி கிடக்குறாங்க.
சொல்லிட்டா உருகிடுறாங்க. அப்படியா நெசமாவா னு கேள்விகள அடுக்கி தன்னை தானே அந்த வார்த்தை போதைக்கு ஆளாக்கிக்றாங்க. (பெரும்பாலும்) பெண்கள் மென்மையானவர்கள் தான்.
அழகானவர்களும் கூட.ஆனா தன் புகழ் பாடனும் அப்படி னு நெனைக்ற தும் ஏங்கறதும் முட்டாள் தனம். பலவீனம். ஏன் கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து இப்போது வரைக்கும்
கவிதைக்கான பாடு பொருளாக பெண்கள் தான் இருக்காங்க. இனியும் இருப்பாங்க. (பெண் இல்லனா பெரும்பாலான இலக்கியங்கள் இல்லனு நெனக்கிறேன்.) என் வண்டி கூட அப்படி தான் ஓடுது. நிலா
முகம் என்பான் பூ இதழ் என்பான் கனி காய் முலை என்பான் கருங்கூந்தல் அருவி என்பான் நெற்றி வியர்வை பனி என்பான் தொடச் சருக்கும் தொடை என்பான் தொட்டால் ஓடியும் இடை என்பான்
ஆலிழை வயிறென்பான்.. நல் அரவின் படம் போலும் வாழைப்பூ போலும் அல்குல் என்பான்.. எதையும் நம்பாதீர் னும் பாடுவான். எல்லாத்தையும் வார்த்தை ஜலம் னு நெனைச்சு அல்லது கற்பனை நயம்
னு நெனைச்சு கடந்திடனும். ஆனால் நம்ம பொண்ணுங்க இவ்வளவு சொன்னாலும் எதையும் நம்பாதீர் னு எழுதறான். இவன் நல்லவனா தான் இருப்பான் னு நம்ப ஆரம்பிச்சிடுவாங்க. Worst Fellows.
காலத்தால் மாறாதவர்கள். உடைல இருந்து நடைல இருந்து எல்லாத்துலயும் update ஆன பொண்ணுங்க அந்த அழகு ன்ற ஒற்றை மமதை ல முட்டாள் தனத்துல இருந்து இன்னும் விடுபடாம இருக்காங்க.
இந்த post க்கு எதிரா கூட சில பெண்ணியப் பெண் புலிகள் /அல்லது தவளைகள் சத்தமிடக் கூடும். ஆனால் அவங்களோட ஆழ்மனசுலயும் அழகு அப்படின்ற ஒரு ஏக்கம் எதிர்பார்ப்பு இருக்கும். //
\\ நகையா இருந்தாலும் தங்கம் தங்கம் தான். கட்டிய இருந்தாலும் தங்கம் தங்கம் தான். அப்டி தான் ஆணும் பெண்ணும். இன்னும் தெளிவா சொன்னா கவிதை உரைநடை இரண்டிலுமே வார்த்தைகள்
தான். என்ன பயன்பாட்டு விதம் மாறுபடும். அளவு மாறுபடும். சொற் செறிவும் அர்த்தப் பிரயோகமும் மாறுபடும். உரைநடைக்கும் கவிதைக்குமான வேறுபாடு தான் ஆணுக்கும் பெண்ணுக்கும்
இருக்கு. இரண்டுமே தசையால ஆனா உடல். புண்ணாகி மண்ணாகி போக கூடியது . என்ன டிசைன் லயும் features லயும் கொஞ்சம் different ஆகுது. உடல உடலாக மட்டும் பார்க்கிற எண்ணத்தை பெண்கள்
வளர்த்து கொள்ள வேண்டும். பெண்களை வைத்து தான் ஏகப்பட்ட MNC களின் பொழப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. Fairness cream, lipstick, eyeliner,nail polish லொட்டு லொசுக்கு வெங்காயம்
பெருங்காயம் னு ஆயிரம் இருக்கு. அழகு ன்றது இயல்பு ல இருக்கு. பூ, கிளி, மரம் செடி, கொடி, முயல் எதுவும் இயல்புக்கு அதிகமா எதையும் எடுத்துக்றதில்ல. டிசைன் டிசைனா உடை போட்டு
அரிதாரம் பூசி அலங்காரம் பண்ணிக்றதில்ல. இருந்தாலும் அவை அழாக இல்லையா. அழகுன்றது புறத்தோற்றத்தில இல்ல. அது ஆத்மக்குள்ள ஒளிஞ்சு கிடக்கு. அதை தேடுங்க. புழுவுக்கும்
கழுகுக்கும் இரையாக போற இந்த பொய்யுடல போற்றிப் பேணிக் காத்து ஒரு மயிரும் ஆகப் போறதில்ல. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் னு உடம்பை வளருங்க. திடமாக்குங்க. ஆனா இப்படி
அழகு படுத்தி நேரத்தையும் உழைப்புயும் விரயப்படுத்தாதிங்க. // \\ நம்ம டிசைன் ஆகிட்டோம். இனி நம்ம புறத்தோற்றத்தை மாத்தறதுலயும் மாத்த முயற்சிக்கறதுலயும் ஒரு புண்ணியமும்
இல்ல. மூக்கு இப்படி இருந்திருக்கலாம். முடி இன்னும் அடர்த்தியா இருந்திருக்கலாம், பல்லு நல்லா இருந்திருக்கலாம், உதடு சிவப்பா இருந்திருக்கலாம், தோல் இன்னும் கொஞ்சம்
வெள்ளையா இருந்திருக்கலாம், குண்டா இருந்திருக்கலாம், ஒல்லியா இருந்திருக்கலாம், உயராம இருந்திருக்கலாம், முலை பெருசா இருந்திருக்கலாம், இடுப்பு சின்னதா இருந்திருக்கலாம்,
கன்னம் குண்டா இருந்திருக்கலாம் (சொல்லி கிட்டே போகலாம்) ஏங்கி தவிக்றதுல என்ன இருக்கு.. உடல் ஒரு மாயை. பொத்தி பொத்தி போற்றி பேணி காத்தாலும் காலம் சீரழிக்கும். தோல
சுருங்கச் செய்யும். பல்லு முடி எல்லாம் கொட்டி போகும். முலை தளர்ந்து போகும். கையெல்லாம் நடுங்கும். நடை தளரும். ஆண்மை பெண்மை ரெண்டும் மழுங்கும். உணர்ச்சிகள் செத்து
போகும். அப்பறம் எதுக்கு இந்த ஏக்கமும், அலங்கராச் செய்கைகளும்? முன் சொன்னதை போல் அழகு என்பது ஆத்மப் பூர்வ மானது. பிடித்த ஒரு பொருள் அன்புக்குரிய ஒரு பொருள் மனதுக்கு
அழகாகத் தெரியும். தாய் கருப்பாக சிவப்பாக இருந்தாலும் பிள்ளைக்கு பிடிக்கும். உடன் பிறப்புகளும் அப்படி தான். தன் புற அமைப்பு இப்படி தான் இருக்கனும் யாரும் முடிவு பண்ண
முடியாது. ஆக அன்பால் அழகு பெறுவோம். பிடித்தவர்கள் ஆவோம். புறத் தோற்ற புகழ்ச்சி கடப்போம். அன்பு மாறாது. அழகு மாறும் என்பதை அடிக்கடி நினைப்போம். அன்பு செய்வோம். அழகு
பெறுவோம்.இன்புறுவோம். அன்பே அழகு. அன்பே சிவம். அன்பே யாவும். // \\ கடைசியா ஒரு தடவ சொல்லிக்றேன்.. யாராச்சும் உங்கள அழகா இருக்க னு சொன்னா அப்படியா சரி னு கடந்து
வந்திடுங்க. "அப்டி யா, என்ன அழகா இருக்கு, எவ்வளவு அழகா இருக்கு" னு கேட்டிங்க நீங்க அவுட்டு. அதுல நோ டவுட்டு. #வாழிய_பெண்குலம்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...