Back

Poem

February 6, 2019

கவிதை

SHARE

கவிதை

ஒரு ஆண் பெண்ணியம் பேசுறான் அப்படினா அவன் யோக்கியனா இருப்பான் ன்ற எண்ணத்த முதல் ல விட்டொழிங்க.( நான் யோக்கியவான் இல்ல) அவன் பேசுற சொல்ற கருத்துகளை பாருங்க. அவன்
பெண்களுக்காக குரல் தரான் நல்லவன் அப்படியான ஒரு பிரமையை உங்களுக்குள்ள நீங்களே உண்டாக்கிக்க வேணாம். எந்த ஆணும் யோக்கியவான் இல்ல. நான் உட்பட. எல்லா ஆணுக்குள்ளும் ஆதிக்கம்
அப்படின்ற பொதுபுத்தி இருக்கு.எங்க அந்த கூமுட்டை தனம் எனக்குள்ள இருந்து வெளிப்பட்டுருமோ அல்லது இந்த ஆண் சமூதாயம் நம்மலயும் அந்த ஆதிக்க மனப்பான்மையை அடிமைபடுத்ற வீரியத்தை
எனக்குள்ளயும் விதைச்சிடுமோ னு பயமா இருக்கு. ஏன்னா நானும் ஆண் தானே. // \\ Facebook wtsp Twitter போன்ற சமூக பொதுதளங்கள் ல பெண் விடுதலை அது இது னு கூவி தன் மேல ஒரு நல்ல
பிம்பத்தை உண்டாக்கி கொள்கிறார்கள் அவ்வளவே. மற்றபடி அவர்கள் சொல்கிற கருத்து படி தான் வீட்டில் நடந்து கொள்வார்களா என்றால் சந்தேகம். ஆக ஆண்வர்க்கமாயினும்
பெண்வர்க்கமாயினும் அவர்கள் சொல்கிற கருத்தில் உள்ள நியாதர்மங்களை நம்புங்கள் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். // \\ அடுத்து பெண்ணுக்கு சுதந்திரம் தர இவனுங்க யாரு?
சுதந்திரம் ன்றது அவரவர் பிறப்புரிமை. என்னைய கேட்டா அடிமை படுத்துறத விட அடிமைப்பட்டு கிடக்குறது தான் தப்பு. ஆமா பெண்கள் மேல தான் தப்பு.. தன்னோட சுதந்திரத்த ஆண்கள் கையில
குடுத்துட்டு, தாங்க தாங்க னு ஏங்கி கிடக்குறது முட்டாள் தனம். உங்கள் சிறகு உங்கள் வானம் அப்பறம் என்ன பறக்க வேண்டி தான. உங்க சுதந்திரத்தை உங்கள தவிர யாராலும் அடகு வைக்கவோ
மீட்டுத் தரவோ முடியாது. அதாவது அவரவர் சுதந்திரம் அவரவர் கையில். // \\ தாலி புருசன் போன்ற செண்டிமெண்ட்ஸ் இருக்கலாம். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் ன்றத
மதிக்றதுங்கறது கூட சரி னு வச்சுப்போம்.ஏன்னா இது பாரம்பரியம் கலாச்சாரம் ன்ற பழைய சோத்து சமாச்சாரங்கள் அதுல நான் தலையிடல. ஆனா தன்னோட சுயமரியாதைக்கும், சுதந்திரத்துக்கும்
சுய விருப்பதுக்கும் இடையூற இருக்கறது தாலியா இருந்தாலும் சரி புருசனா இருந்தாலும் சரி தூக்கி தூரக் கடாசிடனும். இருக்றது ஒரு வாழ்க்கை. சரி தப்பு னு நம்ம மனசாட்சி நம்மல
வழிநடத்தும். நம்ம ஆசைகள தணிக்கை பண்ணும். அது சரி. ஆனா மத்தவங்களுக்காக நம்ம செய்யற நம்ம ஆசைப்படுற ஒவ்வொரு விசயத்தையும் ஏன் தணிக்கை பண்ணனும் னு கேட்கறேன்? நமக்கு பிடிச்சத
நம்ம மனசாட்சியோட நியாய தர்மத்துக்கு உட்பட்டு பண்ணுவோம். அவ்வளவு தான். அந்த மனசாட்சியும் பழசையே கட்டிகிட்டு அழுதா.. விட்டுத் தள்ளுங்க.தோன்ற செய்ங்க. அடுத்த நொடி
நிச்சயமில்லாத வாழ்க்கை. இருக்கற வரைக்கும் இஷ்டம் போல வாழ்வோம்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...