Poem
February 5, 2019
கவிதை
SHARE

ஆணும் பொண்ணும் சமம் நிகர் னு மாறி மாறி கூவுனா போதாது. ஒரு பொண்ணு ஒரு பையன் கிட்ட இன்னைக்கு வெளில வர முடியாது டா. நான் periods ஆகிட்டேன். கால் இடுப்பு லாம் வலியா இருக்கு னு வந்து சொன்னா அத
பிரமிப்பா பாக்ற மனநிலைய மாத்தனும். அத விட்டுட்டு பேத்தனமா சொல்லக் கூடாத விசயத்த, ஏதோ ரகசியத்த சொன்ன மாதிரி அத தூக்கிகிட்டு திரியக் கூடாது. இங்க உடல் ன்றது ஆண் பெண் எல்லோருக்கும் ஒன்னு தான்.
Periods ங்கறது human physiology. அத மறைக்க வேண்டிய விசயமாவோ சொல்லக் கூடாத விசயமாவோ சித்தரிக்கறதுங்கறது படு முட்டாள் தனம். இத விட அத தீட்டாவும் periods ஆன பொண்ண தொட தகதவளாவும் அவ தொட்ட பொருள
ஒதுக்கி வைக்றதும் ஆகச் சிறந்த லூசுக்கூ தனம். இதையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு. உடல உடலாவும் அதுல நடக்ற விசங்கள தேவையில்லாத கற்பிதங்கள் இல்லாம உடற்செலியலாகவும் பாக்ற பக்குவத்த வளர்த்துக்கனும்.
முக்கியமா ஆண்களுக்கு இத பெண்கள் தான் புரிய வைக்கனும்(அம்மா, அக்கா) ஆணாதிக்கத் தனம் ன்றதும் பெண் அடிமைத் தனம்ன்றதும் சின்ன வயசில இருந்தே புட்டிபால் மாதிரி புகட்டிட்டு வரப்படுது. முதல்ல வளர்ப்ப
மாத்தனும். ஒரு பெண் குழந்தை க்கு ஜட்டி போட்டு விட்டு, அதுக்கு மூச்சா வந்தா பாத்ரூம் அல்லது மறைவான எதாவது இடத்துல போக சொல்றோம். ஆனா ஆண் புள்ளன இப்படியா வளர்த்துறோம். இல்ல. அதுபாட்டுக்கு மணிய
ஆட்டிக்கிட்டு திரியும். கண்ட இடத்துல மூச்சா போகும். கேட்டா ஆம்பள பையன் தான் னு சாதரணமா பதில் சொல்றது. இப்படியான மனநிலை ல இருந்து எல்லோரும் வெளிய வரனும். தொட்டில் பழக்கம் சுடு காடு மட்டும் ன்ற
மாதிரி இப்போ வரைக்கும் travel சமயத்தில அல்லது கழிவறை இல்லாத இடத்துல ஒரு பொண்ணு தன்னோட அவசரத்த அடக்கிகிட்டு தான் இருக்க வேண்டி இருக்கு. ஏன்னா அவள் உடம்பு மேல அத்தனை கலாச்சார பாரம்பரிய கன்றாவி
முட்டாப்பூ தனமான தினிப்புகள். ஆனா ஆண் இப்படி அடக்கி வைக்க வேண்டிய அவசியமில்ல. ஒரு சந்து அல்லது ஏதோ ஒரு சுவரு போதும். ஜிப் அ கழட்டி ப்ரீயா போலாம். என்ன மூட்டாப் பூ தனம் டா இது. ஆம்பள பொம்பள
எல்லாரும் யாரோ ரெண்டு பண்ண காமத்தோட கழிவு. எலும்பு தோல் தசை ரத்தம் இவ்வளவு தான். இதுக்கு போய் எவ்வளவு பெரிய முட்டாள்தனமா கற்பு கன்றாவி னு கண்டதையும் போட்டு தினிச்சு வச்சிருக்கோம்?
இந்த periods அ போலத் தான். Hand job யும். Human physiology. அது எதோ செய்யக் கூடாத விசயம் மாதிரி என்னென்னத்தலாம் சொல்லி பயமுறுத்தி வச்சிருக்காங்க. இது செய்யக் கூடாது தப்பு னு ஒரு மதம் வேற
போதிக்குது. கூமுட்டைக்கூ களா இருக்காங்க எல்லோரும்.
விந்து வெளியேறதுங்கறதும் அத வெளியேத்தறதுங்கறதும் சாதாரண விசயம். கட்டாயமான விசயமும் கூட. இத ஏன் எல்லோரும் தப்பா சித்தரிக்கறாங்க னு தான் தெரியல.? காலை எழுந்த உடனே பாத்ரூம் போற மாதிரி இயல்பான
விஷயம். இயற்கை உபாதை.அவ்வளவு தான்.
ஆண் பெண் உடல் மேல இருக்கற போலியான முட்டாள் தனமான கற்பித தினிப்புகள மாத்தனும். மாறனும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...