Back

Poem

June 4, 2018

கவிதை

SHARE

கவிதை

❣️உன் மடியினில் துயிலத் தான்
நான் நொடிக்கு நூறு முறை வேண்டுகிறேன்.
❣️நீயென எண்ணித் தான் - நான்
நித்தமும் தலையணை தீண்டுகிறேன்.
❣️உன்னாசை வார்த்தைகள் கேட்கத்தான்
நான் ஆயுள் கொண்டதை போல் உணர்ந்தேன்.
❣️நீ கொஞ்சி முத்தம் வைக்க தான்
நான் கோவம் வந்தததை போல் நடிப்பேன்.
❣️நீ பிணக்கு கொண்டு பின் சென்றால்
உனக்காய் கவிகள் தினம் வடிப்பேன்
❣️உன் கை பிடித்து வாழத் தான்
நான் வாழும் வரம் பெற்று வந்தேன்.
❣️உன் பெண்மை நிரப்பத் தான்
நான் ஆண்மை கொஞ்சம் பெற்றிருக்கேன்.
❣️உன் சுகம் நாளும் கூட்டத் தான்
காமம் நானும் கற்றிருக்கேன்.
❣️உணர்ச்சி மிகுந்த நாட்களில்-உன்
உள்ளாடை தாண்டி நுழைவேன்.
❣️புணர்ச்சி செய்து முடித்த பின்னும்
உன்னில் புதுசுகம் தேடி அலைவேன்.
❣️உன் கூந்தல் வாரி விட
நான் பல்லில்லா சீப்பாவேன்.
❣️நீ குளிக்கும் போதெல்லாம்
உன் மேனி உரசும் சோப்பாவேன்.
❣️உன் நெத்தி சூடிக் கொள்ள
நான் வைர சூட்டி போலாவேன்.
❣️நீ முட்டி விளையாட
குட்டி பூனை நானாவேன்.
❣️உன் சமையல் ருசிக்கத் தான்
நான் நாவும் வாயும் கொண்டிருக்கேன்.
❣️நீ "போ" என்று சொல்லி விட்டால்
நான் ஈ மருந்து உண்டிறப்பேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...