Poem
April 16, 2018
கவிதை
SHARE

யாரோ ஒருவருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கிற அல்லது மாற்றி அமைக்கிற எழுத்துகளே இலக்கியம் எனப்படுகிறது. இந்த நூலின் ஒவ்வொரு வரியும் என்னையும் என் வாழ்க்கையையும் பிரதிபலிப்பது
போல் ஒரு பிரம்மை எனக்கு.. இதன் முடிவே என் வாழ்க்கையின் முடிவு என்று நினைத்து கொண்டு வாசிப்பை தொடந்தேன்.....சலுப்பூட்டும் இடங்களை சமாளிக்க தான் இப்படி ஒரு
முடிவெடுத்தேன்.. என்னை நானே அதலொரு பாத்திரமாய் உருவகித்து கொண்டேன்... கதையில் இடையிடையே குறிப்பெடுத்துக் கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை இயல்பாக
கதையோட்டத்தோட சொல்லி வைத்திருக்கிறார்... உதரணமாக " அழகாக வாழக் கற்றுக் கொள். முடிந்தால் வாழ்க்கையை அழகு படுத்து. முடியாவிட்டால் அதை அசிங்கப்படுத்தாமலாவது
இரு." "கலைஞனுக்கு மனமே மூலதனம்" "கல்யாணம் அல்லது துறவு" இரண்டில் ஒன்றை முடிவு செய். இப்படி இடையிடையே வாழ்க்கையை புரட்டுகிற விசயங்களை
வார்த்தைகளாக அங்கங்கே மையுதறலாக விட்டு வைத்திருக்கிறார்... எப்படியோ..நாவல் இனிதே முடிந்தது... இனித்தே முடிந்தது... கண்ணில் நீர் பனித்தே முடிந்தது... பயந்து பயந்து தான்
கடைசி பத்து பக்கங்களை வாசித்தேன்.. கதையின் முடிவு என் வாழ்க்கையின் முடிவு என்று எண்ணிக்கொண்டதால் நாவலின் கடைசி பக்கங்களை நெருங்க நெருங்க அதிகமான பயம் என்னை
ஆட்கொண்டது... ஆரம்பத்தில் இருந்து சோகத்தில் ஆழ்த்தி அழவிட்டவர் ... இறுதி அத்தியாயத்தில் அமுதள்ளி ஊட்டி விட்டார்... அழுது சிவந்த கண்களுக்கு ஆயிரம் முத்தங்களை தந்ததை
போன்ற தணிந்த உணர்வை தந்து விட்டார். "ஆனந்தி" யான அவளுக்கும் "அண்ணாமலை" யான எனக்கும் வாழ்க்கை நன்முறையிலமையும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
நன்றி.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...