Back

Poem

January 13, 2018

கவிதை

SHARE

கவிதை

❣️கார் குழல் மோதிடும்
காதிலே நானுமே
கம்மலாய் ஆடவோ?

❣️மார் வரை ஆடிடும்
தாலியில் நானுமே
நூலென ஆகவோ?

❣️நேர் வர வாரிய
சிகையினில் நானுமே
பூவென ஏறவோ?

❣️தார் வழிச் சாலையை
தடவிடும் பாதத்தில்
செருப்பென மாறவோ?

❣️மார்கழி பனியினில்
நனைந்திடும் உடலை
ஆடையாய் மூடவோ?

❣️கூர்விழி நாணிட
குளிர் பனி நீங்கிட
ஆசையாய் கூடவோ?

🎶தாநந்ந தனநந்ந
தாநந்ந தனநந்ந
தாநந்நே தனநந்நநே 🎶

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...