Back

Poem

December 3, 2017

கவிதை

SHARE

கவிதை

சிலப்பதிகாரத்தின் மீதுள்ள சிநேகத்தினாலோ என்னவோ என் வாழ்வில் நான் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணும் மாதவி கண்ணகி என்று மதிப்புக்குரிய வகையிலே தெரிகிறார்கள்.

ஆமாம் இந்த கதையும் பெண் சார்ந்ததே.

#கல்யாணம்_ஆகாத_கண்ணகிகள்.

"ஏய்... எவ்வளவு நேரமா try பண்றேன்... யார் கூட டி பேசிட்டு இருந்த?"
" என் பக்கத்து விட்டு அக்கா டா "
" ஓ.... நல்லா இருப்பாங்களா... கல்யாணம் ஆகிடுச்சா... பேரு என்ன? "
" டேய்... செருப்பு... 👠👠👠👠அக்கா னு சொல்றேன்.. "
" அக்கா சொக்காலாம் உனக்கு தான். என்க்கு இல்ல... சரி சரி பேரு என்ன னு சொல்லு.. அப்படியே அவங்க போன் நம்பரையும் குடு "
" டேய்.... அவங்க ரொம்ப பாவம் டா."
"ஏய்..... என்ன டி......... எப்பவும் போல மத்தவங்கள வச்சு பொலம்ப ஆரம்பிச்சிட்டியா...? அம்மா தாயே... நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. வா... நாம ரொமான்ஸ் பண்ணலாம்"
"ரொமான்ஸ் லாம் அப்பறம் பண்ணலாம்... சொல்றத கேளு டா..."
"எப்படியும் சொல்லாம விடப் போறதில்ல நீ... சரி சரி சொல்லி முடி.. நான் போய் brush பண்ணிட்டு வரேன்"
"...... (மௌனம்)"
"ஹலோ...."
".... (no response) 😨😨😨"
" ஐ லவ் யூ டி தங்கம் "
"ம்ம் "
" அடியேய்... ஏன் இவ்வளவு சலிப்பு... இப்போ என்ன....... நான்.... நீ சொல்றத கேட்கனும்...... அவ்வளவு தான.... சொல்லு... கேட்க்றேன்"
"ம்ம்ம்ம்ம்...(ஒரே சந்தோசம்) ஐ லவ் யூ டா என் பூனை குட்டி😺😺"
"பூனை குட்டி😺 நாய் குட்டி லாம் அப்பறம் இருக்கட்டும்.. முதல்ல அந்த கதைய சொல்லி முடி டீ.. நான் இன்னும் பல்லே விளக்கல... பசிக்குது.."
" ம்ம் கொஞ்ச நேரம் சொல்லி முடிச்சதும் சாப்ட போய்ட லாம் "
" ம்ம்ம்ம்ம் "
" சொல்றேன் "
" சீக்கிரம் சொல்லுடி "

" முன்ன என் கூட phone ல பேசிட்டு இருந்தாங்கல்ல .. அந்த அக்கா பேரு... கீதா. வயசு ஒரு 32 இருக்கும் னு நெனைக்கறேன். இன்னுமே கல்யாணம் ஆகல."
"கல்யாணம் ஆகல யா... வயசு தான் கொஞ்சம் அதிகமா இருக்கு பரவால அட்ஜஸ்ட் பண்ணிக்றேன்"
"டேய் விளையாடாம மூடிகிட்டு சொல்றத கேளுடா.. 😷😷என் கோவத்தை கிளறாத"
"என்ன டி ஆம்பள பையன மூடிகிட்டு இரு னு லாம் சொல்ற? பொட்ட புள்ள மாதிரி பேசுடி"
"சரி டா சொல்ற கேளு டா... அவங்கள நெனைச்சா எனக்கு அழுகையா வருது"
" சரி சொல்லு டி தங்கம் "
" அவங்களுக்கு இன்னுமே கல்யாணம் ஆகல. அவங்களுக்கு கல்யாணம் ஆகலன்றத விட அவங்க கல்யாணம் பண்ணிக்கல. "
" ஏன் living together ன்ற மாதிரியான idea ல இருக்காங்களா? அப்படி னா நான் ரெடி "
" டேய் தொடப்ப கட்டை... ஏன் டா என்ன இப்படி பேச வைக்ற அப்பறம் நெசமா அழுதிடுவேன் டா "
" சரி.... சரி... உடனே coin girl மாதிரி அழ ஆரம்பிச்சிடாத...சொல்லு... நான் பேச ல.. 🙊🙊🙊"
" அவங்க சொந்த ஊர் திருச்செந்தூர். ஆனா சில வருசமா எங்க ஊர்ல அதுவும் எங்க தெருல தான் இருந்தாங்க. பாத்திரக் கடை வச்சிருந்தாங்க. கடை வச்சிருந்தா லும் நெறய கடன். இப்போ கூட என் பாட்டி கிட்ட
வாங்கின 5000 விசயமா பேச தான் கூப்டாங்க. பாவம். என் ஊர்ல தான் இருக்காங்களாம். பாட்டி திட்ட போறாங்க
நான் காச கொஞ்சம் கொஞ்சமா a/c ல போட்டு விட்றேன் னு சொல்ல தான் கூப்டாங்க. "
"......."
"டேய் line ல தான் இருக்கியா?"
"ம்....இருக்கேன்... இருக்கேன் இப்போ என்ன பண்றாங்க... எங்க இருக்காங்க.. எதுக்கு உங்க ஊருக்கு வந்தாங்க... எப்படி அவ்வளவு கடன்.. ஏன் அவங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கல "
"டேய்... டேய் பதறாத........ நீ இவ்வளவு நேரம் line ல தான் இருந்த... நான் சொன்னத எல்லாம் கேட்டேனு நம்புறேன்"
"ம்ம்.... ஐ லவ் யூ டி அழகி... உம்மா..."
"எரும உடனே mood அ மாத்தாத சொல்ற கேளு"
"சொல்லு"
"அவங்க இப்போ ஒரு ஸ்கூல் ல டீச்சர் ஆ இருக்காங்க. டீச்சார இருந்து என்ன பண்றது. பாவம் எவ்வளவு கடன். எவ்வளவு கஷ்டம். எல்லாம் அந்த அண்ணா வால தான்"
" யாரு.... எந்த அண்ணா.. அவங்க அண்ணா வா.... என்ன பண்ணாங்க.. "
" அவங்க அண்ணா இல்ல டா....எனக்கு தான் அண்ணா. "
" உங்க அண்ணா வா... உனக்கு அண்ணா இருக்றத சொல்லவே... இல்ல..ஏன் சொல்லல... ஒரு வேள அந்த அக்கா கிட்ட எதாவது அப்படி இப்படி பண்ணி... ஹா ஹா... "
" டேய் டேய் நிறுத்து டா... ஏன்டா.. எப்பவும் அதுலயே இருக்க... என் அண்ணாவும் இல்ல அவங்க அண்ணா வும் இல்ல.. கீதா அக்கா ப்ரண்டோட தம்பி... அந்த அக்கா விட சின்ன பையன் தான்... ஆனா ரெண்டு
பேருக்கும் Love... ரெண்டு பேருக்கும் இல்ல... இந்த அக்கா தான் லூசுத் தனமா அவன நம்பி இருக்காங்க.. ஆனா அவன் சும்மா செக்ஸ் க்காக மட்டும் யூஸ் பண்ணிகிட்டான் (தேம்பல்) "
" ஏய் இதுக்கு எதுக்கு டி நீ அழற "
" இல்ல டா பொண்ணுங்க எல்லாம் பாவம் டா..."
" பொண்ணுங்க பாவமா... கல்யாணம் ஆகறது க்கு முன்னாடி இடம் குடுத்தது அவங்க தப்பு டி"
"தப்பு தான்.. கட்டிக்க போறவன் னு நெனைச்சு கட்டில்ல இடம் கொடுத்தாங்க பாரு அவங்க தப்பு தான்... எங்க வீட்டு போய்டுவானோ னு நெனைச்சு தான் டா இடம் கொடுத்துருக்காங்க.. ஆனா கடைசி ல தான
தெரிஞச்சிருக்கு ... அவன் அதுக்காக மட்டும் தான் பழகி இருக்கான்... அவன் அவங்க கிட்ட மட்டும் இல்ல பல பேரோட இப்படி தான் பண்ணிருக்கான் இப்போ தான் அந்த அக்கா க்கு தெரிஞ்சிருக்கு... கேவலமான அவன் லாம்
அடுத்த வாழ்கைய தேடி போய்ட்டான் ஆனா இந்த அக்கா... (விசும்பல்)"
"அழாதடி"
"அந்த அக்கா தான் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இத்தனைக்கும்... அவங்களுக்குள்ள .. அப்படி ஒன்னு நடத்தது அந்த அக்காவ தவிர அவன தவிர எனக்கு மட்டும் தான் தெரியும்..என் கிட்ட மட்டும் தான்
சொன்னாங்க.. அப்படி ஒன்னு நடந்தது க்கான சாட்சியா என்ன தவிர வேற எதும் இல்ல.. இப்படி இருக்கும் போது அந்த அக்கா ஏன் கல்யாணம் பண்ணிக்கல..பாவம் டா.... "
" சரி... அழாத டி... பொண்ணுங்க எல்லாரும் பாவம் தான்டி... அடிக்கடி நீ சொல்ற மாதிரி.. பொண்ணுங்க எல்லாம் சிலப்பதிகாரத்துல வர மாதவியாவும்.. ஜெயகாந்தனோட... சில சில நேரங்களில் சில மனிதர்கள் ல வர
கங்காவாவும்... பாலச்சந்தர் படத்துல வர கதாநாயகி கள் மாதிரி அப்பாவி யாவும் தான் இருக்காங்க... ஆனா இதுலாம் கூடிய சீக்கிரம் மாறும் டி...நீ அழாத.. "
"(மூச்சை மேலிழுத்து கொண்டு) அவங்க மாதவியா..இல்ல டா அவங்க கல்யாணம் ஆகாத கண்ணகி டா... கண்ணகி..."
"சரி... கண்ணகி தான் அழாத டி தங்கம்..ஐ லவ் யூ"
" ஐ லவ் யூ சொல்லாத... நீ கூட அவன் மாதிரி தான் டா.. முன்ன என்ன சொன்ன... கல்யாணம் ஆகறது க்கு முன்ன இடம் கொடுத்தது அவங்க தப்பு...ம்ம்ம்ம்.... நாளைக்கு நானும் உனக்கு இடம் கொடுத்துட்டா இப்படி
நான் சொல்லுவ இல்ல"
"ஏய் என்ன டி இப்படி பேசற"
"இல்ல சொல்லு அப்படி தான் சொல்லுவ ல்ல... போடா.."
"நமக்குள்ள அப்படி எதும் நடக்காது டி... நான் அப்படி பண்ண மாட்டேன்... அப்படி பண்ணிட்டு விட்டுலாம் போக மாட்டேன் டி"
"ஓ... அப்போ அப்படி எதும் நடக்கல னா விட்டு போவ அப்படி தான....எனக்கு வேணும் டா... ஆம்பளைகள பத்தி தெரிஞ்சும் உன்ன காதலிச்சேன் பாத்தியா... எனக்கு தேவை தான் டா... எனக்கு தேவை தான்"
"ஏய் கோவத்துல
எப்படி வேணா பேசாத டி. என்னையும் கொஞ்சம் பேச விடு டி please "
"வேணாம் நீ பேச வேணாம்... அந்த அக்கா வ போலவே நானும் இருந்திட்டு போறேன்.இனி எனக்கு call பண்ணாத Bye. "
" ஏய் இரு டி.... நான் சொல்ற..."
"................"

#முற்றும்.

கதையின் வாயிலாகவே சில விசயங்கள் தெளிவுற விளங்கி இருக்கும். இருந்தாலும் தவறான புரிதல் ஏற்பட்டு விட கூடா தென்பதற்காக இந்த சிறு விளக்கம்.
கதையில் உரையாடி பெண்ணாகட்டும் உரையாடலில் பேசப்பட்ட பொண்ணாகட்டும் இருவருமே கதையின் முடிவில் ஆண்களால் கைவிடப்பட்டவர்களே.
1)கீதா 👇
👉அன்பிற்கு அடைக்குந் தாழ் இல்லை என்றாலும் கொஞ்சம் எல்லையோடிருந்திருக்கலாம்.
👉 மேலும் தைரியமாய் அவனை தேடி பிடித்து கணவனாக்கி இருக்கலாம் அல்லது அவனுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுத்து விட்டு தன்னை மறுவாழ்விற்கு ஆயத்த படுத்தி இருக்கலாம்.
அடுத்து
2) இரண்டாம் பெண்...👇
👉 இந்த கதையின் சம்பாஷசணையில் வந்த பெண் ஆண்கள் என்றாலே தவறானவர்கள் என்ற புரிதலை ஏற்படுத்திக் கொண்டாள்.

பெண்களே பேரன்புக்குரிய பெண்ணிய வாதிகளே உடனே விட்டு போன அந்த ஆணை பற்றி ஒன்றும் சொல்ல வில்லை என வாளை போல நாக்கை சுழற்றி கொண்டு வர வேண்டாம்... அவனை தேடிப் பிடித்து தண்டணை வாங்கி தந்திருக்கலாம்
என்ற எனது வார்த்தையை கவனிக்கவும்.
தண்டனை எப்படிப் பட்டது என்பதூ பொறுத்து அந்த ஆண் போன்ற அயோக்கியர்கள் குறை வார்கள்.

மேலும் அந்த பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாக அவளின்(கீதா) மனதில் இருந்த தற்தாழ்வு மனப்பான்மையும் தைரிய மின்மையும் முக்கிய காரணங்கள் ஆகும்.

நன்றி

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...