Poem
August 14, 2017
கவிதை
SHARE

#கொஞ்சம்_காதல்_நிறைய_காமம். #18- தலைப்பை பார்த்து தவிர்க்க வேண்டாம். இந்த பதிவு உங்களுக்கானது தான். பதின்ம பருவத்தில் காதலை போன்ற வேடமிட்டு கொண்டு ஒரு இனம் புரியாத
ஈர்ப்பு தன் வயதொத்த எதிர் பாலினத்தின் மேல் வரும். இது ஒரு மாயை. இது ஹார்மோன்களின் அனாவசிய வேலை. பாலின ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கும் காலம் பதின்ம பருவம். அதன் விளைவு
தான் இது போன்ற உணர்வு. இதை காதல் என்று சொல்வதை விட காமம் என்று சொல்வது தான் சரியாகப் பொருந்தும். ஏனென்றால் காதல் என்பது ஹார்மோன் சார்ந்த விஷயமல்ல. அது இரு உள்ளங்களின்
புரிதலால் நிகழ்த்தப்படும் அதிசயம். அற்புதம். ஆனால் இந்த பதின்ம பருவத்தில் வரும் உணர்வு கொஞ்சம் காதல் நிறைய காமமே. இந்த உணர்வு பதின்ம பருவத்தில் எல்லோர்க்கும் வரக்
கூடியதே. ஆனால் அதை எப்படி கடப்பது என்பதில் தான் இருக்கிறது வாழ்வின் வெற்றி. தனக்குள் எழும் இந்த உணர்வு எதிர்பாலினத்திடமும் இது போல் ஒரு இது இருக்காதா.... அந்த ஜீவன்
நம்மை பார்க்காதா... பேசாதா என்று ஏங்க விடும். எதிர்பார்க்க வைக்கும். ஆனால் இது தான் நம் எதிர்காலத்தை புரட்டிப்போடும். ஆக பார்த்து பயணப்பட வேண்டும். அதற்கென்று இந்த
உணர்வு வரவேக் கூடாது என்று சொல்லவில்லை. நம்மில் எழும் இந்த உணர்வை எதிர்பாலினத்திடமும் வெளிப்படுத்தி அந்த உயிரையும் அவஸ்திக்க வேண்டாம். இந்த உணர்வை ஆராயுங்கள். உங்கள்
சூழ்நிலையும் எதிர்பாலினத்தின் சூழ்நிலையும் எப்படிப்பட்டது என யோசியுங்கள். காதல் என்பது தன்னை சார்ந்து மட்டும் சிந்திப்பதல்ல. உங்கள் அன்பால் எதிர்பாலினத்தின்
எதிர்காலமும் உங்கள் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. உங்கள் அன்புக்குரிய அந்த நபரோடு ஒரு நட்புறவை ஏற்படுத்துங்கள். அவரை பற்றிய நல்ல புரிதல் பெறுங்கள். அப்போது
தான் கொஞ்சம் காதல் நிறை காமமாய் இருந்த உணர்வு கொஞ்சம் காமம் நிறைய காதலாய் மாறும். ஏனென்றால் காமம் என்பது அதீத அன்பின் அதீத காதலின் வெளிப்பாடு. அதீத காதலால் தான் காமம்
மலர் காம்பினும் மென்மையுறுகிறது. இப்போது புரிந்திருக்கும் முகம் பார்த்து வருவதல்ல அகம் பார்த்து வருவதே காதல் என்று. (ஆனால் இன்றைய காலத்தில் காதல் என்பது உடல் சார்ந்த
விஷயமாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.) இனியேனும் கொஞ்சம் காதல் நிறைய காமம் செய்யாமல் நிறைய காதல் கொஞ்சம் காமம் செய்யுங்கள். நன்றி. வாழ்க காதல் வளர்க காதல்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...