Back

Poem

May 23, 2017

கவிதை

SHARE

கவிதை

கடலும் வானும் கலக்கும் இடத்தை கைத்தொட்டு பார்க்க வேண்டும். உடலும் உயிரும் புணரும் இடத்தை உணர்ந்து அறிய வேண்டு்ம். பேதம் பேசும் மனிதரிடத்து சமத்துவம் பேச வேண்டு்ம்.
ஆதியும் அந்தமும் அற்ற ஆன்மாவை கண்ணால் காண வேண்டும். நடப்பதை மட்டும் நினைக்கும் நல்ல மனம் வேண்டும். கடந்ததை எண்ணி கலங்காத கண்கள் ரெண்டு வேண்டும். வரவு செலவு கணக்கு
பார்க்கா வாழ்க்கை வாழ வேண்டும். உறவுகள் யாவும் துறந்த ஒரு உயர்ந்த வாழ்க்கை வேண்டும். பிரிவுகள் இல்லாத உற வொன்றும் வேண்டும். பரிவுகள் இல்லாது பாசம் செய்ய வேண்டும்.
வஞ்சரையும் வாழ்த்தும் நன்நெஞ்சும் வேண்டும். கஞ்சம் இன்றி யாரையும் காதல் செய்ய வேண்டும். பாரபட்சமின்றி யாரிடத்தும் பழகி பார்க்க வேண்டும். கோர முகம் கண்ட பின்னும் கொஞ்சம்
நெருங்கி பழக வேண்டும். பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள பேதம் நீக்க வேண்டும். மண்ணுக்கும் விண்ணுக்கும் ஒரு பாலம் பார்க்க வேண்டும். உணர்ச்சிகள் கொன்று விட்ட உறுப்புகளும்
வேண்டும். காழ்ப்புணர்ச்சிகள் இல்லாத மனிதர் காண வேண்டும். தவறதை தட்டி கேட்கும் தைரியமும் வேண்டும். எவரையும் துணை நாடா துணிவுமே வேண்டும். உள்ள போது இல்லார்க்கு உதவிட
வேண்டும். இல்லையென்ற போதும் அவர் மீது இரக்கம் காட்ட வேண்டும். முன்னொன்றும் பின்னொன்றும் பேசாத திரு நாவும் வேண்டும். நான் நினைத்தவுடன் உயிர் தழுவும் ஒரு சாவும் வேண்டும்.
நான் வேண்டுவன யாவும் வேண்டிய பொழுதில் கிடைத்திட வேண்டும். ஆண்டவனை அன்பின் வழி அடைந்திட வேண்டும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...