Poem
November 22, 2015
கவிதை
SHARE

ஆண்:"கள்ளிக் காட்டு வழி
கால் நடையா போறவளே
முள்ளிருக்கும்
பாத்துப்போடி
முடியாட்டி முதுகேறிக்கடி
முல்லைப் பூ
உன்ன நானும்
சேருமிடம் சேத்துடுறேன்"
பெண்:"ஒன்னும் வேணாயா
ஒதுங்கி நில்லாய்யா
ஒங்கி விட்டனா
ஒடஞ்சிடும் பல்லாய்யா"
ஆண்:"கொய்யாப் பழமே
கோவம் வேணாண்டி
ஒத்துக்கிட்டா
உன்ன நானும்
காயமில்லாமா
கரசேர்த்து விடுறேன்டி"
பெண்:"காயம் பட்டாலும்
கவல இல்லாய்யா
உன் கை மட்டும்
எம் மேல பட்டிடக்கூடாது"
ஆண்:"எங்கைபட்டா பெண்ணே
உன் பூந்தேகம் வாடாது
பூவே உன் அழகிற்கு
பூமியில ஈடேது "
பெண்:"சாமி ஆளவிடய்யா
கவித பேசினாலும்
கத்தி வீசினாலும்
சாமந்தி பூ இது
சாயாது"
ஆண்:"ஒத்துகிட்டா சரி தான்டி
நீயும் பூதானு
இப்படி நிக்காமா போறியே
நீ ஏன்டி"
பெண்:"அந்தி ஆக ஆக பொந்தியில பயங்கூடுது
புல்லி மானு இது
புலி உன்ன பார்த்து ஓடுது"
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...