Article
March 25, 2022
கட்டுரை
SHARE

பெண்கள் வரதட்சிணை கொடுமை பற்றி பேசும்போது எல்லாம் ஆண்கள் "பெண்கள் நல்ல வேலை, வீடு எல்லாம் ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்கள் அது சரியா?" என்ற வாதத்தை எடுத்து கொண்டு வருகிறார்கள். All men
என்று சொல்லும்போது not all men என்று சொல்லி பிரச்சனையை நீர்த்து போக வைப்பது போன்றதே இதுவும்.வரதட்சிணையும் சரி நல்ல வேலை போன்ற எதிர்பார்ப்புகளும் சரி patriarchy அமைப்பின் மூலம் விளைந்த தீமைகள்
தான். ஆணாதிக்கம் பெண்களை மட்டும் பாதிப்பது இல்லை. இது ஆண்களையும் பாதிக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதுதான்.ஆணாதிக்கம் என்பது ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற சித்தாந்தம். அது ஆண் எப்படி
இருக்க வேண்டும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்கிற விதிமுறைகளையும் கட்டமைக்கிறது. ஒரு ஆண் என்பவன் வீரம் மிகுந்தவனாக இருக்க வேண்டும், அவனது வீட்டு பெண்களை காப்பாற்ற வேண்டும், தனது உணர்ச்சிகளை
வெளிக்காட்ட கூடாது முக்கியமாக அழ கூடாது, தனது சாதி, நிலம், உடமைகளை காப்பாற்ற வேண்டும். இந்த குணங்கள் இல்லாத ஆணை patriarchy சமூகம் ஒரு ஆணாக ஏற்றுக்கொள்வது இல்லை. அவன் ஒரு பொட்டை என்று
இழிவுபடுத்துகிறது.ஒரு patriarchy சமூகத்தில் ஆண் என்பவன் நல்ல வேலையில் இருக்க வேண்டும், சொந்தமாக நில புலன் வைத்து இருக்க வேண்டும். (ஏனென்றால் ஒரு பெண் ஆணாதிக்க சமூகத்தில் வேலைக்கு செல்ல
முடியாது, அவள் சொத்துக்கள் வைத்து இருக்க முடியாது. எப்படி ஆம்பிளை அழ கூடாது அழுகுறது பொம்பிளை வேலை என்று சொல்லப்படுகிறதா அதே போல வேலை இல்லாத வீடு இல்லாத ஆண் பெண் என்று ஆணாதிக்க சமூகத்தால்
வரையறுக்கப்படுகிறது) இந்த ஆணாதிக்க சிந்தனையில் வளர்ந்த பெண்கள் (internalized misogyny) தன் கணவனாக வரப்போகும் ஆணிடத்தில் இதை எதிர்பார்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எல்லா ஆண்களும் patriarchy
சமூகத்தால் பலனும் அடைகிறார்கள். பாதிப்பும் அடைகிறார்கள். எப்படி ஒரு சாதிய சமூகத்தில் இடை நிலை சாதிக்காரர் பலனும் அடைகிறார் பாதிப்பும் அடைகிறாரோ அதுப்போல. ஆனால் patriarchy சமூகத்தில் பெண்கள்
தலித்களை போல பாதிப்பு மட்டுமே அடைகிறார்கள்.இடைநிலை ஆண்கள் (not all men என்று குரல் கொடுப்பவர்கள்) பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு அமைதி காத்து patriarchy சமூகத்தை வளரவிட்டு அதன் மூலம்
வரும் நன்மைகளை அறுவடை செய்பவர்கள். நான் dowry கேக்கல எங்க வீட்டில் தான் கேக்கிறார்கள். என்பார்கள் ஆனால் dowry யாக வந்த காரை ஓட்டி செல்வார்கள். நீ modern dress போடுறது எனக்கு ஒண்ணும் பிரச்சனை
ஆனா பொறுக்கி பசங்க உன்ன எதாவது சொல்லுவாங்க என்று பழியை வேறு பக்கம் போட்டு அதன் பலனை அனுபவிப்பார்கள். Good guys can continue being good because bad guys keep women from being bad.இவர்கள் தான்
நாங்கள் வரதட்சிணை கேட்கவில்லை ஆனால் பெண்கள் நல்ல வேலை வேண்டும் என்கிறார்களே என்பவர்கள். அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி தனக்கு வந்தா ரத்தம் கதை.இந்த இடை நிலை ஆண்கள் நல்லவன் என்று பெயர்
எடுப்பது சுலபம். ஒரு வேளை பாத்திரம் கழுவி கொடுத்தாலே அவர்கள் நல்லவர்கள் ஆகி விடுகிறார்கள். ஏனென்றால் இந்த ஆணாதிக்க ஆண்கள் சமையல் அறையில் கூட நுழைய மாட்டார்கள். ஒரு அடிப்படை மனிதனாக இருப்பது
ஒரு ஆணை "நல்ல ஆண் விருதுகளுக்கு" தகுதியுடையவனாக ஆக்குகிறது, ஏனென்றால் patriarchy சமூகம் நல்ல ஆணை ஒரு அரிய பொருளாக ஆக்குகிறது. அதனால்தான் தோழர்கள் friend zone ஆக்கப்படும் போது
வருத்தப்படுகிறார்கள் (அவர்கள் நல்ல ஆணாக இருப்பதால் பெண்கள் அவர்களை விரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்). அதனால்தான் அப்பாக்கள் தங்கள் சொந்த குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதற்காக சூப்பர்
ஹீரோக்களாக பார்க்கப்படுகிறார்கள். வீட்டு வேலைகளைச் செய்யும் கணவனை கொண்டிருப்பதற்கு பெண்கள் "அதிர்ஷ்டசாலி" என்று கூறப்படுகிறார்கள். பெண்கள் "அவர் என்னை அடிக்காதவரை, நான் அவருடன்
இருப்பேன்" என்று கூறுகிறார்கள் ."நல்ல ஆண்கள்" இன்னும் ஆணாதிக்கத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அது தெரியும். பெண்களுக்கும் அது தெரியும். ஒரு நல்ல ஆண் திடீரென்று
வீட்டு வேலை என்னால் செய்ய முடியாது என்று முடிவெடுத்தாலும் அவனை யாரும் குறை சொல்ல போவது இல்லை. ஏனென்றால் எல்லா ஆண்களும் ஆணாதிக்கத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள். பெண்ணியவாதிகள் "all
men" என்று கூறும்போது அதுதான் அர்த்தம். ஆணாதிக்கத்தின் கீழ் ஒரு ஆண் குறைவாக சம்பாதித்தாலோ அல்லது சொந்தமாக வீடு இல்லாமல் இருந்தாலோ அவன் ஆணாக கருதப்படுவது இல்லை ஏனென்றால் அதெல்லாம்
பெண்களுக்குகானது. நீங்கள் போர்கொடியை தூக்க வேண்டியது ஆணாதிக்கத்துக்கு எதிராக தானே ஒழிய பெண்களுக்கு எதிராகவோ அல்லது பெண் வீட்டிற்கு எதிராகவோ அல்ல. ஆணாதிக்கத்தை நாம் அகற்றும்போது ஆண்களும்
பெண்களும் சுதந்திரமாக இருக்க முடியும்.இன்னும் பெண்கள் சுயமாக சம்பாதிக்க முடியாத போது financial independence என்று ஒன்று இல்லாத போது. வரதட்சிணையாக கொண்டு வரும் நகை பணமும் கணவன் வீட்டாரால்
செலவிடப்படும் என்ற நிலை இருக்கும்போது தனது மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கணவன் நல்ல வேலையில் இருக்கவேண்டும் சொந்தமாக வீடு வைத்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு
இருந்துவிட முடியும்?மருமகளின் நகையை வைத்து மகளின் திருமணத்தை நடத்தும் குடும்பங்கள் உண்டு. மருமகளின் நகையை வியாபாரத்தில் போட்டு நஷ்ட கணக்கு காட்டுபவர்கள் உண்டு. திருமணத்திற்கு பின் அடகு கடைக்கு
சென்ற நகையை கடைசி வரை பார்க்காதவர்கள் உண்டு. இப்படி இருக்கையில் தனது வீட்டில் இருந்து கொண்டு வரும் நகையும் பணமும் கூட எப்போது வேண்டுமானாலும் கையை விட்டு போகலாம் என்ற சூழலில் கணவனின் நல்ல வேலை
தானே பெண்களுக்கு இருக்கும் security. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பிரச்சனையை முன்வந்து சொல்லும்போது நானும் தான் கஷ்டப்படுறேன் என்று பிரச்சனையை திசை திருப்பாதீர்கள்.அதற்கு பதில் அந்த பிரச்சனையை
எப்படி சரி செய்வது இந்த உலகை இன்னும் எவ்வாறு மேம்படுத்துவது என்று சிந்தியுங்கள். இதெல்லாமும் போக, விலங்குகளில் அனைத்திலுமே பெண் தான் தனக்கு வேண்டிய ஆணாய் பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளூம்.
நல்ல வலிமையான ஆணாய் பார்த்து தான் பெண் விலங்கு புணரும் அப்போது தான் அடுத்த சந்ததி வலிமையாக பிறக்கும் உலகில் தாக்குப்பிடித்து வாழ முடியும். (sexual selection). பறவைகள் கூட்டை சிறப்பாக
கட்டிவிட்டு தன் துணையை அழைத்து தன்னை தேர்ந்தெடுக்க வைக்கிறது. சிறந்த கூடு வைத்திருக்கும் பறவையை தான் இன்னொரு பறவை தேர்ந்தெடுக்கிறது. சில பறவைகள்/விலங்குகள் அழகை காண்பித்து காதல் செய்ய
வைக்கிறது. பாம்புகளில் ஒரே ஒரு பெண்ணுடன் சேர்வதற்கு 100 ஆண்கள் போட்டி போடுகிறது. இப்படி இருக்க மனிதர்களில் ஒரு ஆணை பெண் தேர்வு செய்ய ஏன் நல்ல வேலை ஒரு காரணியாக இருக்க கூடாது? போட்டி மிகுந்த
இந்த உலகத்தில் survive பண்ண ஒரு சிறந்த வேலையை தேடி கொள்ளும் அளவிற்கு உனக்கு திறமை இருக்கிறதா?என்று பெண்கள் பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? ஒரு பெண்ணை கவர்ந்து காதல் செய்ய முடியாத
பட்சத்தில், பெற்றோர்களால் arranged marriage என்று வரும்போது அதிலும் நான் எந்த வித தகுதிகளையும் கொண்டு வர மாட்டேன் என்பது என்ன நியாயம்?
- ஸ்வாதிகா
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...