Article
September 17, 2021
கட்டுரை
SHARE

❣️நீயறியா பொழுதொன்றில்
நான் இறந்திருக்க கூடும்.
❣️ஏதேதோ
நினைவுகளின் நெரிசலினிடையில்
என்னை நினைக்க மறந்திருப்பாய்
அல்லது என் சாவுக்கு
அஞ்சலி செலுத்த உனக்கு நேரமிருந்திருக்காது. .
❣️மீண்டுமென் ஞாபகம் வரும் அல்லது
நேரம் கிடைக்கும் வேளையில்
என்னை தேடுவாயா? என்பதும்
நேரமிருந்தாலும் என் ஞாபகம்
உனக்கு மீளுமா என்பதும்
எனக்கு இதுவரையில் தெரிந்திருக்க வில்லை.
❣️இறந்த பின்னும்
உன்னிந்த கண்டுகொள்ளாமை எண்ணி
என் ஆத்ம
சில காலம் அழுது தீர்க்கும்.
❣️ஏன் சாந்தியடையா
ஆத்மாக்கள் பேயாய்
அலைவதுண்டாமே...
அப்படி நானும் அலைந்தாலும் அலை வேன்.
❣️பயப்படாதே
உன்னை எதாவது
செய்வதெல்லாம் என் ஆசையாயிருக்காது..
❣️நீ பயந்து நடுங்குமந்த பேய் பொழுதிலேனும்
என்னை நினைத்து கொஞ்சம்
அழுது விடு.... அவ்வளவுதான்...
உன் அன்பிலுறிய
அந்த துளிகளை எண்ணி பார்த்து எண்ணி பார்த்தே
என் ஆத்மா சாந்தி அடைவேன்.
- மீள்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...