Back

Article

May 3, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

விருப்பமிருப்பின் விடை சொல்லுங்கள்!

❣️இந்த
பெருந் தோற்ற வெளி
தோன்றிய ஆண்டு?
❣️இன்றென்பதும் நேற்றென்பதும்
இருப்பவை தானா?
இல்லை மனிதக் குறியீடுகளா?
❣️யார் யாரை படைத்தது?
கடவுள் மனிதனையா?
மனிதன் கடவுளையா?
❣️கடவுள் மனிதனை என்றால்
கடவுளை படைத்தது யார்?
❣️மனிதன் கடவுளை என்றால்
முதல் மனிதன் எப்படி வந்தான்?
❣️உடை அணிவது ஏன்?
அம்மணத்தை மூடவா?
இல்லை தன்னை அலங்கரித்துக் கொள்ளவா?
❣️ஒளியை உணர இருள் அவசியம் தானே?
❣️இட ஒதுக்கீடு இருப்பதால் தான்
சாதி இன்னும் ஒழிய வில்லை என்பது சரியா?
இப்படியாகச் சொல்கிற
கெட்ட வார்த்தைக்கு உரியவர்களை
எப்படித் திட்டுவீர்கள்?
❣️தேவதை கதைகளை நம்புகிறீர்களா?
தேவதைகளுக்கு சில சமயம் மீசையும் இருக்குமாமே.
பார்த்திருக்கிறீர்களா?
❣️உங்கள் மனைவிமார்களை
எப்படி நடத்துவீர்கள்?
வலுக்கட்டாயமாக படுக்கச் சொல்வதுண்டா?
இல்லை அவர்கள் இஷ்டப்படி விட்டு விடுவீர்களா?
❣️இது கவிதையா?
❣️என்னை பொறுத்தவரை
தாழ்தலும்
தாழ்த்தப்படுதலும் பெருங் குற்றம்.
உங்களுக்கு எப்படி?
❣️முலை என்பது கெட்டவார்த்தையாமே.?
உண்மையா?
என் தாய் எனக்கு பாலுட்டியது "அந்த கெட்ட உறுப்பால் தான்".
❣️காமம் என்பது என்ன?
நான் சொல்வேன்
காமம் இன்றி ஒன்றுமில்லை.
காமம் என்பது ஒன்றுமே இல்லை என.
❣️நாளைய வாழ்வு நிச்சயமில்லை என்பதால்
அடுத்த வேளைக்கு என்று கூட
எதையும் நான் எடுத்து வைப்பதில்லை.
நீங்கள்?
❣️பிச்சைகாரர்கள்
பிறப்பிலேயே பிச்சைகாரர்களா?
அல்லது
பிறந்த பின் அப்படி ஆகிறார்களா?
ஆகிறார்கள் என்றால்
அந்த நிலைமைக்கு நீங்களும் ஒரு காரணம் என்பதை ஒப்பு கொள்வீர்களா?
❣️மாதவிடாய் தீட்டா?
அது மனித உடற் செயலியல் என்கிறேன் நான்.
❣️சாதி, மதம் என்பவை அவசியம் தானா?
ஆமாம் நீங்கள் என்ன சாதி?
❣️பணம் இல்லாமல் வாழ முடியுமா.?
என்னால் முடியும். ஆனால் கொஞ்சம் சிரமம்.
❣️உங்கள் வீட்டில்
எத்தனை வருசத்துக்கான
அரிசி, பருப்பு, கோதுமை அல்லது
சமையல் பண்டங்கள் இருக்கிறது.?
இருப்பின் அது திருட்டு/பதுக்கல் பொருட்கள் என்கிறேன் நான்.
❣️நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்களா?
இல்லை
படித்து முடித்து விட்டு வேலைக்கு போகிறீர்களா.?
படித்து முடித்து விட்டு
வேலைக்கு போ என
எந்த பாடத்திலாவது சொல்லப்பட்டிருந்ததா?
❣️இதை எல்லாம் கேட்டதும் எழுதியதும்
நான் இல்லை என்கிறேன்.
ஏற்பீர்களா.?

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...