Article
June 7, 2019
கட்டுரை
SHARE

எல்லோரும் முறையான கல்வியையும் பகுத்தறிவையும் பெறாத வரை சாதியை ஒழிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதன் தாக்குதலையாவது குறைக்கப் பாடு படுவோம். எதனடிப்படையிலோ தோன்றி இப்போது பிறப்போடு ஒன்றி
கிடக்கிறது . சாதியத்தை எதிர்க்க எவ்வளவு வலுவான காரணத்தை முன் வைத்தாலும் அதைவிட வலுவான மற்றும் #முட்டாள் தனமான காரணத்தை முன் வைக்கிறார்கள் சாதிய வெறியர்கள். இவர்களை சாதிய ஆதரிப்பாளர்கள் என்று
கூட சொல்லி இருக்கலாம்? ஏன் வெறியர்கள் எனச் சொல்ல வேண்டும்?. காரணம் இருக்கிறது . சாதி தொழில் முறையிலான அல்லது வேற எதனடிப்படையிலான பாகுபாடாக மட்டும் இருந்திருந்தால் வெறியர்கள் என்று சொல்ல
வேண்டிய அவசியமிருந்திருக்காது. ஆனால் இப்போது தான் சாதி பிறப்பு அடிப்படையிலான பாகுபாடாகி மனிதனை மனிதனே தீண்டத்தகாதவனாக மாற்றி வைத்திருக்கிறதே. அறிவே இல்லாத விலங்குகள் கூட இது போலான கேவலமான
பாகுபாடுகளை கடைபிடிக்கிறது இல்லை. தீண்டாமை உளவியல் ரீதியான பாதிப்புகளை உண்டு பண்ண கூடியது. வாளினும் கூரியது.
//. //
ஒரு நாள் "சாதியும் இட ஒதுக்கீடும்" பற்றி உரையாடிக் கொண்டிருந்த போது என் நண்பன் தனக்கு நேர்ந்த ஒரு துயரத்தை அழுது கொண்டே சொன்னான்.
அவன் தன்னோடு படித்த ஒரு சிநேகிதியின் விட்டு போயிருக்கிறேன். அங்கு அவனை வீட்டின் வெளித் திண்ணையிலே உட்கார வைத்து உபசரித்தோடு மட்டுமல்லாமல் அங்கிருந்து அவன் எழுந்த உடனயே அவன் உட்கார்ந்திருந்த
இடத்தை நீருற்றி கழுவி இருக்கிறார்கள்.
இதை சொல்லி முடிக்கும் முன் அவன் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது.
அவன் இப்படியாக சொல்லி மேலும் அழுதான்.
" ஏன் மாமா.. நானும் மனுச சாதி தாண்ட. அவனுக வந்த வழில தான் டா நானும் வந்தேன். நான் அங்க இருந்து வந்த பிறகு கூட அவனுக கழுவி இருக்கலாம்."
எனக்கு அப்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை. அழுபவனிடம் அறிவுரை சொல்ல எனக்கு உடன்பாடில்லை. ஆவின் கூட்டிச் சென்று ஆற்று படுத்தி அனுப்பி விட்டேன்.
//. //
நிற்க,
இப்போது எல்லோர்க்குமாக சொல்கிறேன்.
நிரகாரிக்கப்படுகிற இடத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக போய் நிற்க வேண்டும். நாளைக்கே நீங்கள் வட்டாட்சியராகவோ மாவட்ட ஆட்சியராகவோ போய் நின்றால் உங்களை திண்டதகாதவனாய் நினைத்தவர்கள் எல்லாம் உங்கள்
முன்னே கை கட்டி நிற்க வேண்டும். கல்வி தான் சாதிய வன்முறைக்கு எதிரான மற்றும் வலுவான ஆயுதம்.
அவன் சொன்னான்
"இட ஒதுக்கீடு இருக்கறதால தான் என்னைய மாதிரி யான ஆட்கள் எல்லாம் இந்த மாதிரியான இடத்துக்கு படிக்க வர முடியுது. இல்லான நாங்க பள்ளிக்கூடத்துக்கு வரதும் தீட்டு னு ஒதுக்கி வச்சிருப்பானுக"
அது என்னமோ சரி தான். அதை(கல்வியை) பயன்படுத்தி கொண்டு உங்களை எவ்வளவு வலிமையானவனாய் உருக்க முடியும் என்று நினைக்கிறீர்களோ அவ்வளவு வலிமையான சக்தியாக உருவாக்கிக் கொள்ளுங்க்கள். தன்னை கல்வியளவில்
மேலுயர்த்திக் கொள்வதே சாதி சிக்கலில் இருந்து விடுபடுவதற்கான ஆகச் சிறந்த வழி.
மேலும்,
சாதிய வெறியுடைவர்களுக்கு, நான் சொல்ல விரும்புவது யாதெனில் உங்கள் சாதியப் பெருமைகள் எல்லாம் கல்வியில் தேர்ந்த ஒருவனின் அக்குள் மசுரு க்கு சமானம். சேற்றிலே முளைத்தாலும் மல்லிகை மணக்கத் தான்
செய்யும். எந்த சாதியில் பிறந்தவனாய் இருந்தாலும் கல்வி கற்றவன் உங்களை விட உயர்ந்தவனாகவே இருப்பான். வீர சூர கவுன்டன் வன்னியன் வெள்ளாளன் சத்திரியன் என்று சாதியை பெயரின் முன்னொட்டாய் வைப்பதை
விட்டு விட்டு கற்க கசடற.
என்னை பொறுத்த வரை
அன்பும் கல்வியுமே உலகில் மகத்தானதும் மேலானதுமான மதம்
மற்றும் சாதி. அதை கடை பிடியுங்கள். பரப்புங்கள்.
❤️ ❤️ ❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...