Article
May 21, 2018
கட்டுரை
SHARE

ஓயாமல்
நாயைப் போல்
ஊளையிடும்
என் உள்மனது
கிளையின் பிடியில் இருந்து
உதிர்ந்து சருகாகி
காற்றின் போக்கில்
உருண்டோடும் இலையை போல
என் பிடிப்பில் இருந்து விலகி கொண்டது
நிரம்பிய
ஒன்றிரண்டு நிமிசத்தில்
காலியாக்கப்படுகிற
டீ கோப்பையை போல
யார் வந்து நம்பிக்கை சொல்லினும்
இரண்டொரு நிமிசத்தில்
இல்லாமல் போய்
வாழ்தலை வெறுக்க வைத்து விடுகிறது
தீர்க்கப்பட்ட அந்த டீ கோப்பையொத்த
எனது மனதின் ஆழத்தில்
எஞ்சி இருக்கும்
கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும்
எந்த கணத்தில் வறளுமோ..
எந்த கணத்தில் உருண்டோடி உடையுமோ.
உடைந்த பின்
மனதினை சூழ்ந்து நிற்கும்
மௌனச்சாகரம்
என்னை இழுத்து தன்னில் முழுக்கி கொள்ளும்.
உடைந்த சிதறியிருந்த மனத்துணுக்குகளை
ஒன்றுபடுத்தி
மறு ஆக்கம் பெற்ற மனது
காலவெளியில்
உலவித் திரியுமென்
திமிர் தனங்கள் உடைக்கும் .
உயிரிழந்த பொருளை ஒதுக்கி தள்ளும்
அலை கடலென
எனக்காகா தனைத்தையும்
புறம் தள்ளும்.
எதனையும் கொண்டாடாத
கொள்கை தரும் .
நீயே நிரந்தரமில்லை
இதன் இடையில
சொந்தமும் சொத்தும் எதற்கென்று
வேதங்கள் போதிக்கும்.
சோகச் சம்பவங்கள்
இயல்பென சொல்லித் தரும்.
சோகித்து வாடி
பருத்த உதடுகள்
வறண்டு வெடித்தமர்ந்திருக்கிற
ஒரு பொழுதில்
படிமங்கள் தேடி
இப்படி கவிதையும் எழுத சொல்லும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...