Article
October 21, 2016
கட்டுரை
SHARE

கண்ணகி
கதையை கொஞ்சம்
கவிதை நடையில் எழுதுகிறேன்.
மாநாய்கன் மகளாம்
மாநிற மங்கை
கைச் சுற்றும் இடையழகி
கண்ணகி அவளோ
மாபெரும் வணிகன்
மாசாத்துவான் மகனை
மணந்து
ஊழ்வினையால்
ஊர்விட்டு
ஊரோடி
வயிற்றுக்கு
வழியில்லாமல்
காற்சிலம்பு
கடைவிற்க
காரிகை அவளும்
கணவனை அனுப்ப
கள்ளக் கொல்லன் அவன்
கொற்கை வேந்தின்
பொற்கொடியரசி
முத்துச்சிலம்பதை
களவாடியவன்
கோவலனென
கை காட்ட
ஆத்திரத்தில் அறிவிழந்த
கோவேந்தன் அவனும்
கோபத்தில் வாய்உளற
"கொண்டு வா"
"கொன்று வா" வென
காதேற
காவலாட்கள்
உடை வாளுருவி
உத்தமப்புருஷன் அவன்
உயிரெடுக்க
பத்தினி மனையாள் அவளும்
பத்திரகாளியாய்
அறந்தவறிய அரசனை
புறந்தள்ளும்
ஊசி வார்த்தைகளால்
உயிர்த்துளைத்தும்
உள்ளுள்ள
தழல் கோபம்
தணியாது போக
நான் மாற்றான்
எவனையும் நினையாதது
நிஜமென்றால்
எரிக மதுரை
என்றவள் உரைக்க
நின்றெரிந்தது
மதுரை மாநகரம்.
கடைசியில்
கடைசல் இடைக்காரிகை
அவள் வாழ்விலிருந்து
தவளும் கவி நான்
கண்டது யாதென்றால்
"உத்தமிச் சாபம்
சத்தமில்லாமல்
சாம்பலாக்கும்
தீங்கிழைத்தோன்
செங்கோல் வேந்தே
என்றாலும்".
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...