Letter
October 26, 2022
கடிதம்
SHARE

வணக்கம், இது எல்லோருக்குமான கடிதம். நான் நலம். அவ்வண்ணமே நீங்களும் நலமாய் இருக்க வேண்டியன செய்யுமாறு பேரியற்கை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு ஒரு கேள்வி
எழலாம் எதற்காக இந்தக் கடிதம் என்று. நிற்க. இந்த கடிதத்தை ஏன் எழுதுகிறேன் என்றால், உங்கள் எல்லாரின் மீதும் நான் அன்போடிருக்கிறேன். ஏனென்றால் நான் என்னளவில் என்னை
அன்புள்ளவன் என்ற உளப்பூர்வமாக நம்புகிறேன். புரிகிறதா? நான் நம்புவது தானே நான். அதே போலவே நீங்கள் எதை நம்புகிறீர்களோ அல்லது நீங்கள் யார் என்று நம்புகிறீர்களோ அதுவே
நீங்கள். சரி விசயத்திற்கு வருவோம். இந்த நவீன யுகத்தில் நாமெல்லோரும் ஒருவரோடு ஒருவர் இணையத்தின் வழியாகத் தான் இணைய வேண்டி இருக்கிறது. இப்படி இணையத்தில் வழியாக இணைய -
வாட்சப், பேசுபுக், டெலிகிராம், இன்ஸ்டாக்ராம் - என பல சமூக வலைத்தளங்கள் இருக்கிறது. அப்படியான எதாவது ஒரு சமூக வலைத்தளயத்தில் தான் இதை வாசித்துக் கொண்டிருப்பீர்கள்.
அதில், என் சொற்களின் வழியாக எனதன்பை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சொற்களின் கைகளால் உங்களோடு கைக்குலுக்கிக் கொண்டிருக்கிறேன். சொற்களின் விரலால் உங்கள் ஆறுதலுடன்
முடிகோத முயன்று கொண்டிருக்கிறேன். சொற்களால் உங்களை முத்தமிட்டுக் கொணட்டிருக்கிறேன். சொற்களின் வழியாக உங்கள் இதயத்தில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறேன். என்றாலும்.. இந்த
அன்பின் சொற்களோடு நான் சொல்ல வந்தது இதுவல்ல. தோழ தோழி மார்களே - நவீன யுகத்தில் எல்லா இத்தியாதிகளும் சுருங்கிக் கொண்டே வருகின்றன. செங்கல் அளவாய் இருந்தா செல்போன்
உள்ளங்கை அளவு உருமாறி இருக்கிறது. அறை அளவு இருந்த கணினி மடி அளவு உருமாறி இருக்கிறது. இது எல்லாம் வளர்ச்சிக்கானவை தான். ஆனால் இதுபோலவே இப்படியே அன்பும் இதயதமும்
சுருங்கிப் போக வேண்டுமா? கொஞ்சம் மனம் சோர்ந்து வாடி குழம்பி இருப்பதால் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறேன். தோழ தோழி மார்களே இந்த இணைய உலகில்
நாம் எல்லோரும் சொற்களின் வழியாகத் தான் தான் அன்பைக் காதலை காமத்தை என எல்லா உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டி ருக்கிறது. அப்படி அன்பை சுமந்து போகும் சொற்களும்
சிறுத்து சிறுத்து சீவனற்று போக வேண்டுமா? "ம்ம் சரி" என்பது " ம்" ஆனது - "ok" ஆனது பிறகு" hmmk" ஆனது... "k" ஆனது பிறகு
" 👍🏿 🏿" இது போன்ற emoji கள் ஆனது, இப்போது reactions ஆகி இருக்கிறது. இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த "ம், k, ok 👍🏿, 🏿, " ஆகிய
இவையும் உங்கள் reactions ம் - ஏதோ அன்பற்ற, சொல்லற்ற வெறுமையை, வெறுப்பை, சக மனிதனோடு முகம் கொடுத்து பேசவோ ஒரு புன்னகைக்கவோ முடியாத அவசரத்தை, அன்பாய் இருக்க தேவையில்லாத
அவசியமின்யை உணர்த்துகின்றன. இருத்தாலும், தோழ தோழி மார்களே நான் உங்களை குற்றம் சுமத்தவில்லை. இது என் தோனுதல்கள் தாம். என் இயலாமை தாம். என்றாலும் மேலுள்ள அவைகளுக்கு
அப்படியுமொரு கோணமும் இருக்கத் தானே செய்கிறது. எனவே என் அன்புக்கும் காதலுக்கும் உரிய தோழ தோழி மார்களே - அன்போடிருங்கள். அன்பாக ஒரு சொல் சொல்வதால் உங்கள் நேரம் வீணாகி
விடப் போவதில்லை. அன்பாக ஒரு சொல் சொல்வதால் உங்கள் செல்வம் கரைந்து போய் விடப் போவதில்லை. எனவே, தயவு கூர்ந்து அன்போடிருங்கள். ஒருவேளை அன்பு செய்யுங்கள் அன்பு செய்யுங்கள்
என்று நான் சொல்லக் கேட்டு உங்களுக்கே அலுத்து போயிருக்கலாம். பரவாயில்லை. அன்பு செய்ய முடியாவிட்டால் போகிறது. கொஞ்சம் கருணையோடாவது இருந்து விட்டு போங்களேன். மற்றும் அந்த
அன்புணர்த்தாத சொற்களோடு - emoji களோடு - - ஏன் sorry thank you please ஆகிய இவற்றையும் சேர்த்தேனென்றால் - நான் உங்கள் மீது உண்மையாகவே அன்போடிருக்கிறேன். அந்த அன்பு
சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும், சகலத்தையும் மன்னிக்கும். ஆகவே தான் அ வற்றையும் தவிர்க்கும் படி தயைக்
கூர்ந்தேன். அப்படி தவிர்க்காமல் அதை நீங்கள் உபயோகிப்பீர்கள் என்றாலும் என் அன்பு அதையும் ஏற்கும். சகிக்கும். அன்பு செய்யும். 💙❤️🖤
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...