Back

Short story

June 6, 2019

கடல்தேவதை

SHARE

கடல்தேவதை

#புனைகதை
#கடல்தேவதை
ஒரே மனப் புழுக்கம். அவஸ்தை. என்ஜினீயரிங் முடிச்சிட்டேன். ஆனா வேலைக்கு போவதற்கு இஷ்டமே இல்லை. இப்போ இருக்கறதை போல பத்து மடங்கு நீளமான அடர்த்தியான தாடியை வளர்த்து கொண்டு யாத்திரை போகனும். நாடோடி
போல. தனியா. இப்படியான எண்ணதோடு தான் வீட்டை விட்டு கிளம்பி வந்தேன். இப்போது குமரி முனையில் கடலை வெறித்து கொண்டு நின்றிருக்கிறேன்.. என் மனதை போல இந்த கடலும் அலை அலையாய் ஓயாமல் பொங்கி
கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அலையும் இன்னொரு அலையை துரத்தி கொண்டு வருகிறது. ஆனால் எந்த அலையும் எந்த அலையிடத்தும் சிக்குவதாக இல்லை. பிடிக்கு சிக்கி விட்டால் பிரியமோ சுவாரஸ்மோ தீர்ந்து போய்
விடும்.பிடிக்கு சிக்காமல் அலைக்கழித்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் எது மேலும் ஈர்ப்பு குறையாது. கருத்துக்கோ கைக்கோ ஒரு விசயம் பிடிபட்டு நிச்சயமாகி விட்டாலே அது மேல் இருக்கும்
சுவாரஸ்யம் குறைந்து விடும்.
இந்த கடல் எவ்வளவு தூரத்துக்கு விரிந்து கிடக்கிறது . மனதைப் போல. எல்லையே இல்லாமல். மனதில் நினைவு போல பாறைகள் மேல் பச்சை பாசி படிந்திருக்கிறது. பார்வையை கடற்கரையை சுற்றி அலைய விடுகிறேன் .
அங்கங்கே ஆணும் பெண்ணுமாய் கடலில் குளித்து கொண்டிருக்கிறார்கள்.சிலர் பாசி படிந்த பாறை மேல் ஏறி கடலுக்கு முதுகு காட்டி நின்று செல்ஃபி எடுக்கிறார்கள். பாறை ஒருவரை வழுக்கி விட்டுவிட்டது. தட்டு
தடுமாறி நின்று விட்டார். நனைந்த ஈர உடை உடலோடு உடலாய் ஒட்டி நீர் சொட்ட சொட்ட வடிவுடல் வளைவுகள் தெரிய அழகாய் நிற்கிற பெண்களை பார்க்கும் போது இயற்கை மேல் கோவம் கோவமயாய் வருகிறது. பெண்களை இவ்வளவு
நளினமாகவும் அழகாகவும் மோகனம் ததும்ப படைத்த இயற்கை ஆண்களை மட்டும் ஏன் கரடு முரடா படைச்சிருக்கிறது என. அப்படியே என் பார்வை ஒரு பறவை போல அந்த கடற்கரையை வட்ட மிடுகிறது. கடலுக்கு பயப்படும்
குழந்தைகள், கட்டிகிட்டு நின்னு போட்டோக்கு போஸ் குடுத்துட்டு இருக்க காதல் ஜோடிகள், முழுகி முழுகி எழற வயசான அம்மா இப்படியா வட்டமிட்டு வந்து பார்வை கொஞ்ச தூரத்தில ஆழிப் பேரலையிலும் அசையாது நின்ற
வள்ளுவர் சிலை மேல உட்கார்ந்து அதோட பிரமாண்ட தோற்றத்த வியந்துட்டு திரும்ப கட்றரைக்கே வந்து தாழப்பறந்து நோட்டமிடுது. ஒரு பொண்ணு ஈரச் சுடிதாரோடு நின்று சுத்தியும் முத்தியும் பார்த்துட்டு
இருக்காள். Dress change பண்ண போறதா தோனுது எனக்கு. பார்வைய வேற பக்கம் திருப்பிக்கறேன். ஆனா மனசு அவளோட ஈர உடை ல ஒட்டி கிச்சு. பார்வைய அங்க இங்க அலைய விட்டாலும் மனசு அவள தவிர வேறெதுலயும் ஒட்டல.
மனசுக்கும் கண்ணுக்குமான போராட்டத்துல மனசே செயிச்சது. இறுதியா பார்வையும் அவ மேலயே போய் ஒட்டி கிச்சு. ரொம்ப தயங்கி தயங்கி இடுப்பு ல இருக்க பேண்ட் அ மெல்ல தளர்த்துகிறாள் . எனக்கு உள்ளுக்குள்ள ஏதோ
உறுத்தலா இருக்கு. ஆனாலும் பார்வையை திருப்பிக்க முடியல. பேண்ட் அ மெல்ல தொடை வரைக்கும் கீழ இறக்கி விட்டாள் . மயில் நீல கலர் லாங்டாப். சைடில் இருக்க ஓபன்ல் தொடை மஞ்சள் தூண் போல தெரிகிறது .
மறுபடியும் சுத்தியும் பார்த்துட்டு அவளுக்கு முன்னிருந்த பாறை மேல இருந்த துண்டை எடுத்து இடுப்பை சுற்றிக் கட்டிக் கொண்டாள்.
எப்படியோ தயங்கி தடுமாறி ஷேண்டில் நிற பாண்டை கழற்றி விட்டு வெள்ளை நிற பாண்ட்க்கு மாறி விட்டாள். இப்போது டாப். எனக்கு இதயம் வேகம் கூடுகிறது. உள்ளுக்குள் முன்னினும் அதிகமான உறுத்தல். ஏதோ கொலை
செய்வதை போலான பயம். மீண்டும் பழைய படி அவள் விழிகள் சுற்றிலும் நோட்டமிடுகின்றன. என் கண்ணோடு பட்டு ஒரு கணம் ஸ்தம்பித்து நகர்கிறது அவள் பார்வை. எனக்கு வயிற்றை புரட்டுவதை போலான சங்கடம் உண்டாகிறது
உள்ளுக்குள். அவள் மறுபடியும் என்னை பார்க்கிறாள். நான் பார்த்து கொண்டிருப்பது அவளுக்கு தெரிந்து விட்டது போல. ரொம்ப தயங்குகிறாள். நாணமும் கோவமும் கலந்த வெட்கப் புன்னகை ஒன்று மின்னலாய் தோன்றி
மறைகிறது அவள் உதட்டில். வெட்ட வெளியில் உடை மாற்ற துணிந்த தான் பேதைமை நினைத்து சிரித்து கொண்டாள் போல. என்னை ஒரு முறை கூர்ந்து பார்த்து விட்டு முதுகை எனக்கு காட்டி கடல் மேல் கண்களை அலைய விட்டபடி
குறுகி உட்காந்து கொண்டாள். அவள் வடிவுடல் என் விழிப்பாவையில் அசைய அசைய என்னுள் இனந் தெரியாத கிளர்ச்சி. அதை காமம் என்று சொல்வதற்கில்லை. காதல் என்றும் சொல்வதற்கில்லை. ஏதோ ஒரு பெயர் தெரியாத
உணர்வு. நான் பார்த்ததை அறிந்த பிறகான அவள் தயக்கத்தில் ஒரு தேவதை தனமிருக்கிறது. வெட்ட வெளியில் உடை மாற்ற துணிந்த அவள் பேதைமையில் குழந்தைமை ததும்புகிறது. கடலையும் அவளையும் மாறி மாறி பார்த்த
கண்கள் அவளை கடல் தேவதை என்றே நம்ப தொடங்கி விட்டது. மெல்ல இரு புறமும் கையோட்டி சுடிதாரின் டாப்பை மேல் நகர்த்துகிறாள். காலை நேரம் என்பதால் இளஞ் சூரிய ஒளி பட்டு அவள் வலது இடை என் கண்ணில்
ஒளிர்கிறது. துண்டை முதுகின் மேல் விரித்து விட்டு கொண்டு டாப்பை கழட்டி விட்டாள். துருத்தாத முலை சிவப்பு நிற உள்ளாடையில் உறங்கி கொண்டிருந்தது. எனக்கு மன உறுத்தல் அதிகமானது. பார்வையை வேறு புறம்
திருப்பிக் கொண்டேன். கொஞ்சம் நேரம் தான். நான் மறுபடியும் பார்க்கும் போது அவள் உடை மாற்றி இருந்தாள். ஸ்லீவ்லெஸ். சிகப்பு நிற டாப்பும் வெள்ளை நிற பாண்டும் அவளுக்கு எடுப்பாயிருந்தது. மெல்ல நடந்து
பள்ளத்தாக்கான பகுதியிலிருந்து மேலேறி நான் அமர்ந்திருந்த சுவற்றுக்கருகான பாதையருகே வந்து ஒரு முறை என்னை திரும்பி பார்த்தாள். எனக்கு அவளோடு பேச வேண்டும் போலிருந்தது. ஆனால் என் தைரியம் அதுக்கு
போதுமானதாக இல்லை. வார்த்தைகள் உதடு உதைத்தன. ஹாய் என்று சொல்ல கையுயர்த்தி விட்டேன். அவளும் பார்த்து விட்டாள. ஆனால் ஹாய் சொல்லவே இல்லை. அவள் புன்னகைத்து கடந்து நடந்தாள். எனக்கு அவளை பின் தொடர
தோன்றியது. தொடர்ந்தேன். ஈரக் கூந்தலில் அருவி போல நீர் சிந்த கடைத்தெரு வழியே நடந்து போனால். அவள் நடந்த தடமெங்கும் நீர் கோடு. நிமிர்ந்து பார்க்காமல் கோட்டையே தொடர்ந்தேன். கொஞ்சம் தூரம் தான்
நடந்திருப்பேன். கோடு அவளாகி நின்றது. ஏதோ தப்பு செய்து கையும் களவுமாய் மாட்டிக் கொண்டதை போலான கூச்சம் உள்ளுக்குள். சுற்றிலும்ஆடகள். திரும்பி பார்த்தேன். காமராஜர் மண்ட இருக்கிற ரோட்டின்
கடைக்கோடியில் view tower ஐ அருகில் வந்திருந்தேன். நிறைய bench - கள் போடப்பட்டிருந்த பார்க் போலான ஒரு அந்த இடத்தின் கேட் முன் நின்றிருந்தோம் நானும் அவளும். எனக்கு காலில் பூரண் ஊறியது.
வயிற்றில் பாம்பு நெளிந்தது. வந்த வழியே நடக்கத் திரும்பினேன்.
"அண்ணா.. ஊக்கு வாங்கிகோ ண்ணா"
"Octoberகா வாங்கிக்க சொல்லுங்க."
அந்த பையன் என்னையும் அவளையும் காதலர்கள் என்று நினைத்து கொண்டான் போல. உள்ளுக்குள் பெயர் தெரியாத பேரின்பம்.
அவள் அவனை முறைத்தாள். உதட்டுக்கு வலிக்காமல் உள்ளுக்குள் சிரித்தாள். முகத்தில் சற்று முன்னவிழ்நத முல்லை பூவின் மலர்ச்சி.
"ஏன் க்கா ரெண்டு பேருக்கும் எதாவது சண்டையா?"
"டேய் எவ்வளவு டா.. பத்து ரூபாயா"
"இல்ல ண்ணா சோடியா வாங்கிகோங்க. 20 ரூவா தான்"
தர்மசங்கடமான சூழ்நிலையை பயன் படுத்தி என் தலையில் இருபது ரூபாய்க்கு மிளகாய் அரைத்து போய் விட்டான் அந்த பையன்.
நிமிர்ந்து பார்த்தேன். அவள் உதடுகள் ஈரத்தோடு ஓய்ந்திருந்தன. அவளும் அவள் உதடும் எனக்கே எனக்கானவையாக, என்னுடைமைகளாகப் பட்டன. என்னிடம் கொடுத்து விடு என்று கேட்க உதடுகள் துடி துடித்தன. உதட்டில்
வார்த்தைகளின் அரிப்பு. என்ன என்று கேட்பது போல் புருவத்தை மேலுயர்த்தி புன்னகைத்தாள்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவள் முகத்தை பார்க்க பார்க்க ஏதோ முன் ஜென்ம பந்தம் தான் எனக்கு அவளுக்கும் முடியாமல் தொடர்கிறதோ என்று தோன்றியது. எங்கோ தூரத்திலிருந்து மணியொலி கேட்டது. தட்டிலேற்றப்பட்ட கற்பூர சுடர் போல அவள்
கரு விழியில் ஒளியெரிந்தது. தெய்வமாய் தெரிந்தாள். கைகள் தானாக கூப்பிக் கொண்டது. கண்கள் தானாய் மூடிக் கொண்டு. தரை விழுந்து கும்பிட்டேன் . மணியொலி கொலுசொலியாகி அருகிலிந்து தொலைவாய் நடந்து
அலையொலியாகியது. கும்பிட்ட கை கும்பிட்ட படியே எழுந்து நின்று கண் திறந்தேன். அவள் கடலாய் மாறி இருந்தாள்.நான் அலையாகி யிருந்தேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...