Short story
April 18, 2019
ஒரு கிற்று வாழ்க்கை
SHARE

சிறுகதை : ஒரு கிற்று வாழ்க்கை.
(நிஜம் கலந்த புனைவு.)
இன்னைக்கு தேதி பிப்ரவரி மாசம் 14. வியாழக்கிழமை. எல்லோரும் ஓட்டு போட போய்ட்டு இருக்காங்க. ஊரே, நாடே பரபரப்பா இருக்கு. எனக்கு இந்த வருசம் வாக்குரிமை வந்திருக்கு. நானும் ஓட்டு போட போறேன்.
சாயங்காலம் 5 மணிக்கு. எந்த கட்சிக்கு னு கேட்காதீங்க. யாரும், எந்த கட்சியும் யோக்கியமா படல. எல்லோரும் ஊர அடிச்சு ஒலயில போடுறவனுங்க தான். இப்போ நேரம் சரியா 11.32 am. வீட்ல ஆம்ப் ல பாட்டு ஓடிட்டு
இருக்கு. " நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதமா.... " வரிகள் நீண்டு போய்ட்டே இருக்கு. ஜே. ஜே பட பாடல். காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ. ராஜா பாட்டு தான் கேட்டுட்டு
இருந்தேன். இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் பென்ட்ரைவ் ல இருக்க பாட்ட எல்லாம் அழிச்சிட்டு format பண்ணிட்டு புதுசா பாட்டு ஏத்தினேன். மனசெல்லாம் ஒரே கனமா இருக்கு. நா. முத்துக்குமார் தன்னோட
அனிலாடும் முன்றில் புத்தகத்தில ஒரு கவிதை எழுதி இருப்பார். புத்தகத்தோட ஆரம்பத்தில வரும் அந்த கவிதை. அதுல இடை ல, கவிதையோட ரெண்டாம் பக்கத்துல ஒரு வலியை திரும்ப திரும்ப போய் தொடுவதில் என்ன
சுகமிருக்கிறது? னு கேள்வி கேட்டிருப்பார். சுகம் இருக்கு. அவ விட்டுட்டு போய்ட்டா. ஆனா அவ செஞ்ச அன்ப நெனைக்கறச்சே உள்ளுக்குள்ள இனம் தெரியாத ஆனந்தம். அந்த அன்பு கிடைக்க நான் என்ன பாக்கியம்
பண்ணேன். இது கதையா? புலம்பலா? என்னனு தெரியல. ஆனா இன்னைக்கு இது வரைக்கும் நடந்தது பாத்தது பண்ணது எல்லாத்தையும் எழுதனும் னு தோனுச்சு. எழுதறேன். ஆனா எல்லாத்தையும் எழுதிட முடியுதா? கொஞ்ச
நேரத்துக்கு முன்ன மூக்க சீந்தினத கூட எழுதனும் னு தோனுது. எங்க வாசிக்கற உங்களுக்கு ஒரு மாதிரி அசௌகரியமா இல்ல இருக்கும். இப்போ லேச காத்து வீசறது. ஒரே அனலா, வெம்மையா இருக்கு. கொக் கொக். பீக்
பீக். குஞ்சுதா கோழி கொக்கரிச்சிட்டு இருக்கு.
"அஜி கூட்டாம இல்ல போய் போட்டு வந்திடுடா"
"சாயங்காலம் போட்டுக்றேன்"
அம்மா ஓட்டுட்டு போட்டு வந்துட்டாங்க.
என் வாழ்க்கை ஏதோ கதை மாதிரி நம்ப முடியாத தன்மையோட அழகா போய்ட்டு இருக்கு. வாழ்றது எவ்வளவு சுகம். ஒரு நாள் காலேஜ் ல படிக்றப்போ, அதென்ன ஒரு நாள் இப்போ ஒரு மாசம் முந்தி தான். நிழல் மையம் னு ஒரு
சமூக அமைப்பு சார்பா ஒரு ஆசிரமத்துக்கு சாப்பாடு குடுக்க போயிருந்தேன். சாம்பார் சாதம் தான். விடிய காலை ஆறு மணி இருக்கும். குடுத்துட்டு வெளில வறோம். ஒரு அம்மா, இல்ல ஒரு பெண். இருபத்தஞ்சு
வயசிருக்கும். கால் கொஞ்சம் ஊனம்.ரெண்டு கைலயும் தட்டோட வாய தொறந்து சாப்பாடு கேட்க முடியாம நின்னாங்க. பாவம். பாவ பட மட்டும் தான் முடியுது. உதவ முடியல. ( இரண்டு தட்டுலயுமே சாப்பாடு போட்டுட்டு
தான் வந்தோம்)
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மி நாடு" னு கண்ணதாசன் சொல்லிட்டு போய்ட்டார். எங்க நிம்மதி நாட முடியுது. கஷ்டமா இல்ல இருக்கு. நம்மல போல ஒரு ஜீவ ராசி, சக மனுசன் மனுசி
கஷ்ட படுறத பார்க்கும் போது அந்த மாதிரியான கஷ்டம் நமக்கு இல்லயேன்ற சந்தோசத்த நிம்மதிய விட அவங்களுக்கு உதவ முடியலயேனு கஷ்டமா இல்ல இருக்கு. இன்னைக்கு நடக்றத எழுதறேன் னு ஆரம்பிச்சிட்டு எது எதையோ
என்னென்னைக்கோ நடந்தத லாம் கிறுக்கிட்டு இருக்கேன். மனுச மனசு ஒரு கொரங்குன்றது சரி தான் போல. எதுல யும் நிலையா இருக்றதில்ல. (ஷ்ஷப்பா. வெயில் மண்டய பொளக்குது. வீட்ல இருக்கறப்பவே அனல் பயங்கரம்.)
ஆமா முதல் ல ஸ்ரீ பிடிச்சது. விளையாட்டா, ஜெகா கூட கட்டின பெட் க்காக ஆரம்பிச்சு அவள உருக உருக காதலிச்சேன். காதலிச்சேனா, இல்ல காதலிக்கற மாதிரி நடிச்சேனானும் தெரியல. ஆனா அவ இல்லன்றத நெனைறப்போ
மனசுக்குள்ள ஒரு வெறுமை. அந்த வலிய, வேதனையை எப்படி சொல்றது னு தெரியல. ரணமா இருக்கு. அவ இருந்த வரைக்கும், அநியாயத்துக்கு ஒழுக்கமானவனா இருந்தேன். அவள தவிர எந்த பொண்ணையும் பார்க்கவோ, பேசவோ
பிடிக்காது. ஆனா இப்போ இதயக் கதவு திறந்து கிடக்கு. வருவோர் வருக. போவோர் போய் வருக ன்ற மாதிரி ஆகிட்டேன். இப்போ இருக்க நிலைமைக்கு லவ் அ விட செக்ஸ் எவ்வளவோ தேவல னு தோனது. சுகமோ வேதனையோ, ஒரு அர மணி
நேர காரியம். ( உங்களுக்கு ஒரு மணி நேரமாவும் இருக்கலாம், பத்து நிமிசமாவும் இருக்கலாம். நான் மெயின் மேட்டருக்கான நேரத்த மட்டும் சொன்னேன்.) ஆனா இந்த காதல் அப்படி இல்ல. ஸ்லோ பாய்சன். கொடுமை. சித்ர
வதை. ஸ்ரீ ஏன் போனா? ஸ்ரீ போனதுக்கப்றம் அறிவு வந்தாளா? இல்ல அறிவு வந்ததாளா ஸ்ரீ போனாளா? தெரியல. இப்போ ஸ்ரீ என் கூட இல்ல. நான் ஒழுக்கம் இல்லாதவனாகிட்டேன். தாடிய மழிக்க தோனல. முடிய வெட்டிக்க
தோனல. எதுமே பண்ண தோனல. இயற்கையா வர உபாதைய மட்டும் அப்பப்போ போக்கிக்றேன். பசி, சிறுநீர், மலம், எச்சில் உமிழ்தல், சளி, இருமல், தும்மல் இப்படி இன்ன பிற.இப்போ என் வாழ்க்கைல அறிவோட சேர்த்து ஐஞ்சாறு
பொண்ணுங்க இருக்காங்க. யௌனி, நித்யா, ஜோதி, அபி, பூரணி, கவிதா. எல்லோரும் என்னைய காதலிக்றாங்களாம். எல்லோரையும் நானும் காதலிக்றேன். சிரிக்காதீங்க. இதுல யார கல்யாணம் நான் பண்ணிக்க? யாரையும் இல்ல.
இருக்ற வரைக்கும் அன்பு செய்வோம். நான் காதல் னு சொன்னத அன்ப தான். அன்பே காதல். அன்பே கடவுள். நான் உங்களையும் அன்பு செய்யறேன். பெண்ணா இருந்தா உங்களையும் காதலிக்றேன். Yes I love all kind of
sweets. எனக்கு பொண்ணுங்கனாலே பிடிக்கும். தப்பா நெனைக்காதீங்க. I am not a womanizer. சின்ன வயசிலிருந்து நான் பார்த்த பொண்ணுங்க எல்லாரும் வாழ்க்கையால் சபிக்கப்பட்டவர்கள். புருசன் குடிகாரன்,
சந்தேக பிராணி, மேட்டர் பயித்தியம், அப்பன் குடிகாரன், புள்ளைங்க கொடுமை இப்படி நிறைய நிறைய பாதிக்கப்பட்ட பெண் சமூதாயத்த பார்த்து கடந்ததால பொண்ணுங்கனாலே ஒரு அனுதாபம் வந்திடுது. உண்மையிலேயே எல்லா
பொண்ணுங்களுக்குள்ளயும் தாய்மை இருக்கு. குழந்தைமையோட அனுகுறவங்களால மட்டுமே அத உணர முடியும். நான் உணர்ந்து இருக்கேன். மறுபடியும் எங்கயோ போய்ட்டேன். இப்போ சோபா மேல படுத்திருக்னேன் பக்கத்தில உஷா
பேன் ஓடிட்டு இருக்கு. உர்ர்ர்ர்ர்ர. சொல்ல மறந்துட்டேன். காலை ல அம்மாக்கும் எனக்கும் ஒரு சின்ன தர்க்கம். கடவுள் இருக்கா? இல்லையா னு.
அம்மா, எல்லா முடிஞ்ச பின்னாடியும் கடவுள் காப்பாத்தும் சாமி காப்பாத்தும் னு நம்புறோம் ல அந்த நம்பிக்கை தான் மா கடவுள். மத்தபடி நீங்க கும்பிடுற கோவில், பண்ற பூசை, இழுக்குற தேர், எடுக்கற தீர்த்த
குடம் இதுல லாம் ஒரு மயிரும் இல்ல. - நான்.
சாமிய மயிரு னு சொல்லாத டா. சாமி இல்லாமலா இவ்வளவு சனங்க கோவில் கட்டி கும்பிடுவாங்க.? - அம்மா.
அது யாரோ உண்டாக்கி வச்சிட்டு போன முட்டாள் தனம் மா. அதையே இன்ன வரைக்கும் கடைபிடிச்சிட்டு இருக்கிங்க. ஏன் சாமி தூண் லயும் இருக்கும். துரும்பு லயும் இருக்கும் னு சொல்றிங்கல்ல. வீட்டு தூணையே
கும்பிட வேண்டி தான.? - நான்.
"போடா பயித்தியக்காரா" னு சொல்லிட்டு அம்மா எழுந்து வீட்டுக்குள்ள போய்ட்டாங்க. (இருக்கோ இல்லையோ உண்மையோ பொய்யோ அம்மா க்கு கடவுள் வேணும். ஒரு ஆறுதலுக்காக.)
நானு வெளில உட்கார்ந்திருக்கேன். இல்ல உட்கார்ந்திருந்தேன். எது எதையோ யோசிச்சு கிட்டு. புத்தி சுவாதீனம் இல்லாம, பயித்தமா இருந்திட்டா எவ்வளவு நல்லா இருக்கும். கடவுள் இருக்கா இல்லையான்றத பத்தி கவல
இல்ல. காசு இருக்கா இல்லயான்ற கவல இல்ல. ஸ்ரீ இருக்காளா இல்லையான்ற கவல இல்ல. தன்னிஷ்டத்துக்கு மனம் போன போக்கில, இப்போ எங்கயோ ஆரம்பிச்சு, எதையோ எழுதிட்டு இருக்க மாதிரி கால் போன போக்கில,
மனக்கஷ்டம் இல்லமா இருக்கலாம். ஆனா நான் தெளிவா இல்ல இருக்கேன். அறிவோட. இது கஷ்டம் இது சுகம் இது சுபம் னு பிரிச்சறிய பகுத்தறிவோட. அதுவும் உணர்ச்சி சாகமா. கஷ்டத்துல அழறதும், சுகத்துல சிரிக்றதுமா.
இந்த உடம்ப விட்டுட்டு மனுசனா இல்லாம, என் வீட்டு நாய் உடம்புலயோ இல்ல இதோ எதிர்ல இருக்க இந்த மரத்தோட உடம்புலயோ போய்டலாமா னு தோனுது.ஆனா முடியாதே. உடம்பு என்ன சட்டையா? நினைச்ச உடனே மாத்திக்க.?
செத்து போன தான் உண்டு. மறுஜெனமம் இருக்கோ இல்லையோ? கரண்ட்டு கட். உர்ர்ர். பேன் நின்னு போச்சு. றெக்க இருந்தும் பாவம் பறக்க முடியல. இந்த கம்பி வளையத்துக்குள்ளயே வட்ட மடிச்சிட்டு இருக்கு. இப்படி
தான் நான். இருக்கற வாழ்க்கை வாழாம நடந்ததையும், நடக்கபோறதையும் நெனைச்சு வருந்திகிட்டு சின்ன வட்டத்துலயே சிறை பட்டு கிடக்கேன்.
என்னவோ இந்த கதை இப்படியாக முடியுது. என் வாழ்க்கை கதை எப்படி ஆகி முடியுமோ. அன்பே துணை.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...