Back

Letter

April 24, 2026

என் கிறுக்குத் தத்துவவாதி-க்கு,

SHARE

என் கிறுக்குத் தத்துவவாதி-க்கு,

என் கிறுக்குத் தத்துவவாதி-க்கு,

உன் அந்த நீள நீளமான தத்துவக் கடிதத்தைப் படித்தேன். எனக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை! பேனாவைக் கடித்துக்கொண்டு, மேலே ஆழமாகப் பார்த்து நீ பிரபஞ்சத்தையே ஆளும் அந்த சீரியஸான முகம் இருக்கிறதே... அப்போது மெல்லப் பின்னாலிருந்து வந்து உன் கழுத்தடியில் என் உதட்டை வைத்தால், உன் மூளைக்குள் ஓடும் அந்த சாக்ரடீஸும் பிளேட்டோவும் எப்படி அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள் என்று பார்க்க எனக்கு அத்தனை ஆசையாக இருக்கிறது! பாவம் என் காதலன், மூளையைக் கசக்கிக் காகிதத்தில் வார்த்தைகளைக் கட்டிப் போட்டுக்கொண்டு வாழ்க்கையின் போக்கை கண்டுபிடிக்கப் பார்க்கிறான். நானோ, இரவிலும் பகலிலும் உன்னை என் உச்சி முதல் பாதம் வரை எப்படி ஆட்கொள்வது என்று மட்டும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

ஆக்ஸிடோசின், டோபமைன் என்று நீ போடும் அந்த வேதியியல் கணக்கைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது என் புத்திசாலி முட்டாளே... இரவில் என் கழுத்துவளைவில் முகம் புதைத்து நீ மூச்சுத் திணறும்போது, உன் முதுகுத்தண்டில் பரவும் அந்த நடுக்கத்தை எந்த லாபரேட்டரியில் வைத்து செக் செய்யப் போகிறாய்? இது வெறும் மூளைக்கசிவு என்றால், அந்தப் பரிசோதனைக் கூடத்திலேயே என் ஆயுள் முழுவதும் நான் நிர்வாணமாக உறைந்துபோகத் தயார் டா!

"காதல் என்பது மாமிசம் கொண்ட கடவுள்" - உன் கடிதத்தில் நான் திரும்பத் திரும்பப் படித்து முத்தமிட்ட வரி இது ஒன்றுதான். நிஜம் அஜித்து. எனக்குக் கண்ணுக்குத் தெரியாத அந்த அருவக் கடவுள்கள் வேண்டாம். என்னைத் தொடக்கூடிய, நான் உரிமையோடு கோபப்படக்கூடிய, என் காது மடல்களில் மூச்சுவிட்டு முணுமுணுக்கக்கூடிய இந்த உன்னதமான 'மாமிசக் கடவுள்' மட்டும் எனக்குப் போதும்.

நீ என்னவோ மரணம், தனிமை, வியாபாரம், சமூக நிலை என்று எகனாமிக்ஸும் ஃபிலாசஃபியும் கலந்து கிளாஸ் எடுக்கிறாய். ஆனால் எனக்கென்னவோ, நாளைக்கே எல்லாம் முடிந்துவிடும் என்ற நிஜம் சுடும்போதுதானடா, இன்றிரவே உன்னை என் உடம்புக்குள் ஊற்றிப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற அவசரம் எனக்கு அடங்காத காமமாக மாறுகிறது! இருளில் உன்னை என் மீது சாய்த்துக்கொண்டு, என் கால்களை உன் கால்களோடு பின்னிக்கொண்டு மூச்சு விடும் அந்த வெதுவெதுப்பில்தான் என் மரண பயமே அடங்குகிறது.

காதல் ஒரு வியாபாரமும் சிறையுமாம்.. அட கிறுக்கா! சரிதான்... நான் ஒரு சுயநலமான வியாபாரிதான், உன்னை மொத்தமாக ஏலம் எடுக்கும் ஆசைக்காரி! உன்னை அடைத்து வைத்திருக்கும் இந்தச் சிறையின் சாவியை நான் எப்போதோ என் உள்ளாடைக்குள் ஒளித்துவிட்டேன் என்பதை நீ இன்னும் உணரவில்லை. வேலை முடிந்து நீ வரும்போது உன் சட்டையில் ஒட்டியிருக்கும் அந்த மெல்லிய வியர்வையை முத்தமிடாத என் உதடுகளும், இரவில் உன்னை இறுக்கி வளைக்காத என் கைகளும் வேறு எதற்காகடா எனக்கு விடிந்து தொலைய வேண்டும்?

பகலெல்லாம் உலகத்தின் சூனியத்தைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதுகிறாய். லேப்டாப்பிலும் காகிதத்திலும் பிரபஞ்சத்தையே ஆளுகிறாய். ஆனால், இரவில் நீ தூங்கும்போது என் மார்பில் முகம் புதைத்து ஒரு சிறு குழந்தை போலச் சுருண்டு கிடக்கிறாயே.. அப்போது எங்கே போனது உன் தத்துவம்? நான் தூக்கக் கலக்கத்தில் லேசாக விலகினால் கூட, இருட்டிலும் பதறிப்போய் நீ என் இடையைத் தேடி இறுக்கிக் கொள்கிறாயே... உலகை விமர்சிக்கும் உன் கைகள் நடுக்கத்தோடு எனைத் தேடி அலையும் அந்த நிராதரவான ஸ்பரிசத்தைப் பார்க்கும்போது, என் மாமிசக் கடவுள் எனக்குள் எவ்வளவு தூரம் அடங்கிக் கிடக்கிறான் என்று பார்த்து எனக்குச் சிரிப்பு தான் வருகிறது.

போதும்டா உன் தத்துவம். சீக்கிரம் அந்த லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு அறைக்குள் வா. அந்த ஆக்ஸிடோசினும் டோபமினும் எப்படிச் சுரக்கிறது என்று என் படுக்கையில் வைத்து உனக்குப் பிராக்டிகலாகக் கற்றுக் கொடுக்கிறேன். உன் தத்துவங்கள் எல்லாமே என்னைத் தீண்டும் ஒற்றை முத்தத்தில் செத்து மடிவதை இன்றிரவு நான் உனக்குப் புரிய வைக்கிறேன்!

உன் தத்துவங்களை விட உன் மீது அதிகப் பித்துக்கொண்ட,
உன் ராட்சசி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...