Poem
April 27, 2026
என் கலாரசிகையே..... !
SHARE

என் கலாரசிகையே.....
வா..
உன்னை காதல் செய்யத்தான்
உயிர் சுமந்திருக்கிறேன்.
என்னோடு தமிழையும் நேசிக்கும்
எவளாவது தான்
எனக்கு துணையாய் வர துடித்தேன்.
ஆனால்
விதி செய்த பிழை
மொழிக்கே இலக்கணம் தெரியாத
அவள் மீது
மொழி பெயர்க்க முடியாத
நேசம் வைத்து
நெஞ்சு தொலைத்தேன்.
ஆலமர விழுது பிடித்து
ஆட நினைக்குமெனக்கு
அருகம்புல் நுனி போதுமானது தானா?
பிழையாய் எழுதினாலும்
என்னையும் தமிழையும்
பிரியத்தோடு எழுத வேண்டும்.
என் வரிகளில்
பிழை களைய வேண்டும்.
வாதங்கள் செய்து
தினம் வம்பு வளர்க்க வேண்டும்.
அந்தம் நானானால்
ஆதி அவளாக வேண்டும்.
பாதி வரி நானெழுத
எஞ்சியிருக்கும் வரிகளை
அவளெழுத வேண்டும்.
என் வரிகளை
அவள் வாசிக்கிற வாசிப்பில்
கவிதையின் ஆத்மா குளிர்ந்து
அதன் கனம் கூட வேண்டும்.
கலைஞனுக்கு
கைதட்டலும்
கலாரசிகையின் வாழ்த்தும்
எத்தனை கௌரவமான பரிசென்று
கவிதை யாதென தெரியாத
அவளுக்கு எப்படி தெரியும்?
அதை நீ
அறிந்திருக்கிறாய்.
உன் வாழ்த்தில்
கவிதையின் ஆத்மா மட்டுமல்ல
இந்த கலைஞனின் ஆத்மாவும் குளிர்ந்து போனது.
உள்ளத்தில் காதலும் கூடி போனது.
உயிர் உனக்கென் றானது.
இதை சொன்னால்
இடியென கடிந்து பேசி
"விருப்பமில்லை
விஷம நேசம் செய்தாய்" என்றென்னை
விலகிப் போவாயோ
சகி?
சரி தொடந்து வாசி....
- ஆடையவிழ்க்கும் உலகர் நடுவே,
- படிக்கப் படிக்க... பொருளவிழ்ந்து நிர்வாணமாகிறது என் கவிதை!
- பாலைவனமாய்
- வாலாட்டும் காயத்தோடு—உன்
- பாதி வரி நான்—மிச்சம்
- வெஞ்சொல் உதிர்ந்த என் வெற்றுத்தாள் காட்டில்,
- முற்றுப் பெறாத என் கவிதையின் 'வரி-மேனியை'
- காயங்களைச் சொற்களாய் மாற்றி நான் எழுத...
- என் எழுத்துடம்பின் மீது உன் விழிவிரல் தடவல்;
- அநாதையாய் நான் பெற்றெடுத்த காய-கவிதைகள் இன்று...
- என் இருண்ட பக்கங்களில் நீ காட்டும் பரிவு..
- வாசிக்க வந்தவள் என் சொல்செருக்கு அறுத்து,
- நான் விரித்த சொற்படுக்கையில்
- என் வலிவரிகள் மீது நீ
- என் ரணக்கசிவை ஏளனமின்றி, உன் எதிர்யாப்பால் அரவணைத்தாய்!
- வாசிப்பார் ஆயிரம் பேர் இருந்தாலும்...
- பசியில் துடிக்கும் என் கவிதைப் பிள்ளைக்கு,
- உதிர்த்த சொற்களிலெல்லாம்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...