Letter
February 22, 2023
அன்புள்ள மைரான்,
SHARE

தங்கமே....யாரையும் ஏன்? பேரையும் கூட நிரந்தரமாய் உடன் கொள்ள விரும்பாத உன் மீது இப்படி இத்தனைக் காதலோடு இருப்பது எல்லையில்லாத சந்தோஷமாகவும் இருக்கிறது. அதே சமயம் பயமாகவும் இருக்கிறது. மாற்றிக் கொண்டே இருக்கிறாய். மாறிக் கொண்டே இருக்கிறாய். மைரான் - மை "ஆண்" என கூடவே என் கூட்டிலயே வச்சுக்கனும். ஆனால் நீ ஒரு வானம் பாடி. உன் வார்த்தைப் படியே ஒரு கிளியைக் கூண்டிலடைத்துக் உடன் வைத்துக் கொள்வதென்பது தவறு தானே.? என்றாலும் நான் உன் நேச வானமாக் இருக்க விரும்புகிறேன். நான் வாங்கி தந்த அந்த ear-bud போல. உன்னில் ஓர் அங்கமாய் உன்னோடு இருப்பதே தெரியாமல் , உன்னில் இருந்து பிரிக்கவே முடியாதபடி, இந்த தகவல் தொடர்பு சாதனங்கள் எல்லாம் சிறிதாகி சிறிதாகி நம் உறுப்பைப் போல உடன் இருப்பதைப்போல நான் உன்னோடு இருக்க விரும்புகிறேன். அதனால் தான் நீ போட்டிருந்த neck-band க்கு மாற்றாக ear-bud ஐ வாங்கித்தந்தேன். புரிகிறதா? neck-band-ன் இருப்பை விட …சரி விடு . வா. அஜி.. நீ அதிகமாக சிந்தித்து சிந்தித்து உன்னையும் வருத்திக் கொண்டு சில சமயம் மற்றவர்களையும் மனம் நோகச் செய்து விடுகிறாய். உலகத்தின் ஒட்டுமொத்த இயங்கியலையும் subjective objective என்கிற இரண்டு பட்டியலின் கீழ் கொண்டு வர முயல்கிறாய் அது ஒரு வகையில் சரி தான் என்றாலும் ; அதுபோலான binary கோட்பாடுகளின் விளைவுகள் மோசமானதாக இருக்கும். அஜி, ஆண் பெண், உண்மை பொய், நியாயம் அநியாயம், அகம் புறம், மேல் கீழ் ஆகிய இந்த இருமைகளின் பண்பியல்கள் குறித்தும் அந்த இருமைகளின் இறுக்கம் மற்ற சித்தாந்த ஜீவ இருப்புகளை தோற்றங்களை ஏற்க முடியாமல் திண்டாடுவது குறித்தும் சிந்தித்து பாரேன் உனக்கே விளங்கும். ஹையோ.. உன்னோடு சேர்ந்து சேர்ந்து நானும் உன்னைப் போலவே over Thinking க்கு ஆளாகி விட்டேன் பாரேன். நான் பேச வந்ததே வேறு. எப்படி அஜி லவ் ஒரு subjective thought, அது பொய் என்று சொல்ல முடிகிறது உன்னால்? அதற்கு விளக்கங்கள் வேறு சொல்கிறாய்? பேய் என்பது ஒரு subjective idea - அதை நம்பியதால் சின்ன வயதில் நமக்குள் நடந்த பயத்தின் விளைவுகள் - அதாவது Objective or biological reaction உண்மை. ஆனால் பேய் உண்மை இல்லை. அது ஒரு கற்பிதம். அது போலத் தான் காதலும் என்கிறாய்? போதாதற்கு ஒரு biological experiment ஐ வேறு முன் நிறுத்துகிறாய். அது என்ன சோதனை. பெயர் மறந்து விட்டது. தினமும் மணி அடித்து விட்டு நாய் க்கு இறைச்சி போட்டு பழக்கியதால், காலப்போக்கில் நாய் - மணி அடித்ததுமே - இறைச்சியை பார்க்காமலே - ஜொல்லூற்ற ஆரம்பித்து விட்டதாம். அந்த மணிச் சத்தம் போலத் தான் காதலுமாம். நாமாக ஒரு பொய்யை - கதையை - கற்பனையை - கற்பி தத்தை உருவாக்கி - அதற்கு நம்மைப் பழக்கி கொண்டு விட்டோமாம். அஜி... Don't hurt me by your words. காதல் பொய் னு சொல்ற நீ.. ஏன்டா அன்னைக்கு உன் காதலிக்கு போட்டோ அனுப்புறப்போ நான் தந்த earbod அ கழட்டிட்டு அவ தந்த neck band அ போட்டு போட்டோ எடுத்து அனுப்புன? சரி விடு. அழுகை வேற வருது. அழுதா வேற பொய்யான ஒரு கற்பித உணர்ச்சிக்காக ஏன் டி அழற னு மேலும் மேலும் காயப்படுத்துவ நீ. அஜி.. உன் வாதப்படி காதல் பொய்யாகவே இருக்கட்டும். காதல் ஒரு கற்பிதமாவே இருக்கட்டும். ஆதியில் மனிதனுக்கு உணவும் உறங்க இடமும் உடலுக்கு காமமும் மட்டுமே பிரதான அல்லது அடிப்படை தேவையாக இருந்திருக்கலாம். பின்னாளில் இந்தச் சாதி மத சாத்திரக் கோட்பாடுகள் போல அதுவும் கற்பனையாக உருவாக்கப் பட்டிருக்கலாம். ஆனால் காதலால் யாருக்கு என்ன பாதகம் சொல்? அது பால் பேதம் மத பேதம் இன பேதம் என எல்லாவற்றையும் உடைத்து எறிகிறதே. அஜி உண்மை பொய்யை விட எதை நம்புகிறமோ அது தானே வரலாறு? அது தானே வலியது. அது தானே அதற்கடுத்து நடக்கிற எல்லா விசயங்களையும் தீர்மானிக்க கூடியது? அஜி.. நான் காதலை நம்புகிறேன். மட்டுமின்றி காதலை நம்பாத உன்னை மிக மிக அதிகமாக காதலிப்பதாக நம்புகிறேன். அந்த நம்பிக்கை வேண்டுமானால் உன் கோட்பாட்டின்படி subjective ஆக பொய்யாக இருக்கலாம். இல்லை, அஜி காதல் பொய் கூட இல்லை. எதார்த்தம். அது உண்மைக்கும் பொய்க்கும் இடையிலாடும் பொன்னூஞ்சல். இப்படி ஆடிக் கொண்டிருப்பதே இதமாக மகிழ்வாக இருக்கிறது. ஐயோ.. உன்னோடு பழகி பழகி பாரேன்.. இப்போது நானே உன்னைப் போல.. அஜி என் சுயம் தொலைத்து விட்டேன் நான். காதல் பொய்யாக இருக்கலாம். ஆனால் அந்தக் காதலால் நான் படும் பாடு பொய் இல்லை. நான் விடும் கண்ணீர் பொய் இல்லை. நான் எழுதும் இந்த எழுத்து பொய் இல்லை. அஜி... ஏன் நீ கூட எழுதி இருக்கியே? placebo பற்றி. A placebo is an inert substance or treatment which is designed to have no therapeutic value. Common placebos include inert tablets, inert injections, sham surgery, and other procedures. இந்த placebo போலத் தான் எனக்கு நீயும் காதலும்.நான் நானாய் இருக்க..நான் நிம்மதியாய் இருக்க..நான் ஏங்கி தவிக்காமல் இருக்க.. தவித்து இப்படி அழாமல் இருக்க.. அழுது அழுது சாகாமல் இருக்க... எனக்குள் ஒரு காதலும் எனக்காக ஒரு காதலும் வேண்டி இருக்கிறது அஜி. Love is my placebo. You are my placebo. உடல் நடுங்குகிறது அஜி. Come, let we have a hug.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...