Back

Letter

May 17, 2026

அன்புக்குரிய புருஷிக்கு,

SHARE

அன்புக்குரிய புருஷிக்கு,

அன்புக்குரிய,

இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பிக்கிறதற்கே பத்து நிமிடம் ஆகிவிட்டது. “அன்புக்குரிய” என்று எழுதிவிட்டு நிறைய நேரம் சும்மா பார்த்துக்கொண்டிருந்தேன். காரணம், உன்னை என்னவென்று கூப்பிடுவது என்று இன்னும் எனக்கு சரியாக முடிவு ஆகவில்லை. மனைவி என்று சொன்னால் கொஞ்சம் சட்டபூர்வமாக இருக்கிறது. காதலி என்று சொன்னால் நம்மிடையே இப்போது இருக்கும் நெருக்கம் முழுதாக வரவில்லை. சகி என்று சொன்னால் அதில் ஒரு மென்மை இருக்கிறது. புருஷி என்று சொன்னால் அதில் மட்டும் ஒரு தனி உரிமை இருக்கிறது. கொஞ்சம் குறும்பு. கொஞ்சம் காமம். கொஞ்சம் “இவள் என்னோடவள்” என்ற அடக்கி வைத்த பெருமை.

அதனால்தான்,

அன்புக்குரிய புருஷிக்கு.

இப்போது இந்தக் கடிதத்தை நீ எப்படி வாசிப்பாய் என்று கூட எனக்கு தெரியும். முதலில் “என்னடா இது புதுசா?” என்று சிரிப்பாய். பிறகு சும்மா படுத்துக்கொண்டு வாசிக்க ஆரம்பிப்பாய். இரண்டு paragraph கழித்து முகம் கொஞ்சம் soft ஆகும். இன்னும் கொஞ்சம் போனால், உன் உதடு தானாக சுருங்கி சிரிக்கும். சில இடங்களில் “ச்சீ…” என்று சொல்லிக்கொண்டு மீண்டும் அதே வரியை வாசிப்பாய். இந்தக் கடிதத்தை விட, அந்த முகத்தைதான் நான் இப்போது அதிகமாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

நாம் காதலித்த நாளிலெழுதிய நான்கு கடிதங்களுக்கு பிறகு, கல்யாணம் ஆன பின் உனக்கு எழுதுகிற முதல் கடிதம் இது. நலம் சொல்லி, நலம் விசாரிக்கும் முன் தகவல் தொடர்பின் தொழில் நுட்பம் விண் முட்டி வளர்ந்து நிற்கிற இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்வதோடல்லாமல் ஐ டி கம்பெனியிலயே வேலையும் செய்து கொண்டு "அன்புக்குரிய அனுப்புதல், பெறுதல்" போட்டு இப்படி கடிதம் எழுதிய என் பைத்தியக்காரத்தனத்தை நினைத்து சிரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நவம்பர் மாதக் குளிரில் நடந்த நம் கல்யாணத்தின் வாசம் இன்னும் என் சட்டைகளில் ஒட்டியிருக்கும்போதே, உன்னைப் பிரிந்து வந்திருப்பது ரொம்பவும் ஏக்கமாக இருக்கிறது.

மேலும் , இயந்திரங்களோடும் தர்க்கங்களோடும் பேசிப் பேசி எனக்கும் இயந்திரத்தனமான மூளை வந்துவிடுமோ என்ற பயத்தில்தான், பேனாவை எடுத்து உன் தேகத்தின் நினைவுகளை மையாக மாற்றி இந்தக் கடிதத்தை கிறுக்கத் தொடங்கினேன். சில அன்புகளுக்கு, சில நெருக்கங்களுக்கு, சில முத்தங்களுக்கு இந்த கீபோர்டுகளின் தட்டச்சு சத்தம் போதாது சகி. காகிதம் தான் வேண்டும். மடிப்பு வேண்டும். என் விரல் ரேகைகளின் தடம் வேண்டும். நான் எழுதும் போது சிந்திய என் வியர்வையின் வாசனையும் இந்தக் காகிதத்தில் உனக்கு வீச வேண்டும். (இங்கொரு கவிதைத் தோன்றியது - உன்னைப் பார்த்தாலும் நினைத்தாலும் என் பேனாவில் மையூறுகிறது - ச்சீ பொறுக்கி என்று திட்டாதே. )

நான் இலக்கிய விரும்பி என்பது உனக்கு நன்றாக தெரியும். கடிதமும் ஒரு இலக்கியம். சரி இது எல்லாம் உனக்கு பிடிக்காது.

நான் நலம். நீயும் நலமாய் இருப்பாய் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும், ஒரு கடிதம் என்றால் “நலமா?” என்று கேட்காமல் ஆரம்பித்தால் தமிழ் இலக்கிய உலகம் என்னைக் கோபித்துக்கொள்ளும் என்பதற்காகக் கேட்டுவிட்டேன். உன் மாமனார், மாமியார், பாட்டி, நாத்தனார், அவள் பெத்த அந்த வீட்டில் கத்திக்கொண்டும் ஓடிக்கொண்டும் இருக்கும் சிறிய வாண்டு — எல்லாரும் நலமாய் இருக்கட்டும். அடுத்த வாரம் உன் தங்கையையும், என் கொழுந்தியாளுமான அந்த 'தேவதை'யையும் பார்க்கப் போவதாகச் சொன்னாயே — தாராளமாகப் போய் வா. அவளிடம் என் சார்பாக ஒரு பிரத்யேகமான காதல் வணக்கம் சொல். முடிந்தால் என் சார்பாக முத்தமும். சரி சரி கோபிக்காதே. வேண்டுமென்றே தான் “தேவதை” என்று சொல்கிறேன். இந்த வரியைப் படிக்கும்போது உன் முகம் எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, “அப்போ அவளையே கட்டிக்கோ” என்று மனசுக்குள் செல்லமாகத் திட்டுவாய். திட்டிக்கொள். இப்போது நீ விட்ட சின்ன சிரிப்போடான பெரு மூச்சில் ஏறி இறங்கிய என் செல்ல முயல்களுக்கு கொள்ளை முத்தங்கள். ம்ம்..மேலும் , தூக்கி இருக்குமுன்னெல்லா கோவங்களையும் வந்து சரி கட்டுகிறேன். வெட்கப்படாதே. வாசி. )

வீட்டுப் பரணில் அடுக்கி வைத்திருக்கிற புத்தகங்களை அடிக்கடி தூசி தட்டி வை. படிப்பதனால் முடிந்த மட்டும் முனை மழுங்காமல் படி.

மேலும், நான் இல்லாததால், இரவு தூங்குவதற்கு முன் என் பக்க தலையணையை கட்டிப்பிடித்து தூங்கலாம். அதில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து தூங்காதே. என்னை விட அதுகள் உன் மார்பில் அதிக நேரம் கிடப்பது எனக்கு பிடிக்கவில்லை.
ச்சீ. சிரிக்காதே. நான் புத்தகங்களுக்குக் கூட பொறாமை படுகிற அளவுக்கு உன்னை காதலிக்கிறேன்.

இருக்கிற வேலைக்கு இன்னும் ஒரு மாத காலம் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். புத்தகங்களை பிரிந்திருப்பது ஏதோ தாயை பிரிந்த பிள்ளையின் தவிப்பாய் இருக்கிறது . உன்னை பிரிந்திருப்பதும் தான். புத்தகங்களோடு உன்னையும் பாத்திரமாய் பார்த்து கொள்.

ஒரு விஷயம் சொல்லட்டுமா சகி? சில சமயம் எனக்குத் தோன்றும் — நான் உன்னை காதலித்ததைவிட, நீ புத்தகம் வாசிக்கும் காட்சியைத்தான் அதிகமாக காதலிக்கிறேனோ என்று. ஒரு வரி பிடித்துப் போனால், புத்தகத்தை மூடிவிட்டு ceiling-ஐ பார்த்துக் கொண்டு கொஞ்ச நேரம் அமைதியாக இருப்பாயே — அந்த நேரங்களில் உன்னை விட அழகான பெண் இந்த உலகத்தில் இல்லை.
நீ வாசிக்கும் போது தன்னாலே புருவம் சுருங்கிக் கொள்வதும்,
பிடித்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசிப்பதும்,
தூங்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு
இன்னும் “இந்த chapter மட்டும்” என்று ஏமாற்றுவதும் —
எல்லாம் எனக்கு தெரியும்.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் இன்னும் புரியவில்லை.
எப்படி இவ்வளவு அழகாக இருந்து கொண்டு இவ்வளவு மோசமாக bookmark பயன்படுத்த முடிகிறது?
நான் வைத்த bookmark-ஐ எடுத்துப் போய் சமையல் செலவுக் கணக்கு எழுதிவைத்திருந்தாய். கடந்த வாரம் தஸ்தயேவ்ஸ்கிக்குள் பிரியாணி ரெசிபி லிஸ்ட் கிடந்தது. உலக இலக்கியத்திற்கு இது தேவையா புருஷி?

(முக்கிய குறிப்பு :புத்தகங்களுக்கு அடுத்து உன்னை வைத்திருப்பதாக எண்ணி அதுகளோடு சக்களத்தி சண்டை எதும் செய்யாதே.உனக்கு முன்னே அவைகளுக்கு நான் வாக்கப்பட்டு விட்டேன். கோபிக்காதே. கோபித்திருந்தால் நான் வந்து கொஞ்சி சமாதனம் செய்யும் வரை இந்த கோபத்தையும் புத்தகங்களோடு சேர்த்து பத்திரபடுத்தி வை.) ஒரு புத்தகத்தை யாருக்கேனும் வாசிக்க தரும் போது அல்லது தொலைத்து விடுகிற பொழுது என் ஆயுளில் சில நாட்களை இழந்து விட்டது போல இருக்கிறது. தயவு செய்து புத்தகத்தை தொலைத்து விடாதே. யாருக்கேனும் வாசிக்க தந்தால் மறக்காமல் வாங்கி வை.

நான் புத்தகங்களை ஏன் இப்படி நேசிக்கிறேன் என்று யோசிக்கிறாயா? இல்லை என்றாலும் சொல்கிறேன் கேள். ச்சீ வாசி. எனக்கு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. சகி, ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு வாழ்க்கை. ஒரு புத்தகத்தை முழுதாய் வாசித்து முடிக்கிற போது நான் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறேன். இறந்து மீண்டும் புதிதாய் பிறக்கிறேன். ஒவ்வொரு புத்தகமும் என்னொரு வாழ்க்கை.

மேலும், அங்கிருக்கிற புத்தகங்களில் நிறைய இன்னும் நான் வாசிக்க வில்லை. அங்கிருக்கிற வாழ்க்கையை எல்லாம் இன்னும் முழுதாய் நான் வாழவில்லை. சகி போரடிக்கிறேனா? இவ்வளவு தூரம் நீ வாசித்திருக்கவே மாட்டாய். பரவாயில்லை. என் திருப்திக்கு நான் எழுதுகிறேன். கிழித்து விடாதே சும்மா சொன்னேன். நீ என்னை அலட்சியம் செய்தாலும் என் எழுத்தை அலட்சியம் செய்ய மாட்டாய். வாசித்து கொண்டிருக்கிறாய் என்று தெரியும். வாசி. பிரியங்கள் சகி. உனக்கு பிடித்த படி சொன்னால் ஐ லவ் யூ டி புருஷி. தயவு செய்து வாரத்திற்கு ஒரு முறையாவது பரணை தூசி தட்டு. புத்தகம் வாழ்வும் தரும் புருஷி. தினமும் கொஞ்சமேனும் வாசி. அதிகபட்சமாய் ஒரு கவிதையோ கதையோ . இவ்வளவு தூரம் வாசித்ததில் உனக்கு உதடு வறண்டிருக்குமே. நான் அருகில் இல்லையல்லவா. நீயே உள் மடித்து எச்சில் தடவிக் கொள். சகி நான் வாழாத வாழ்க்கைகள் அந்த புத்தக பரணில் (உன்னிலும்) மிச்சமிருக்கிறது. அவற்றை எல்லாம் தயவு கூர்ந்து பத்திரமாய் பார்த்து கொள். நான் அடுத்த மாதமெல்லாம் ஓடோடி வந்து விடுகிறேன்.

PS: - புத்தகத்துக்கும் உனக்குமாய் தோன்றிய சில அசைவ சிலேடைத் துணுக்குகள்:-

  1. சில சுவாரஸ்யமான நாவல்களின் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க, விரல்கள் அவசரமாகப் பக்கங்களைப் புரட்டும். மூச்சு வேகமாகும்; இதயம் அடித்துக்கொள்ளும். உன்னோடு படுக்கையைப் பகிரும் ஒவ்வொரு இரவும் எனக்கு அப்படித்தான். உன் மேலாடையின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக விடுவிக்கும்போது, என் விரல்கள் ஒரு நாவலின் மிக முக்கியமான பக்கங்களைப் புரட்டும் அவசரத்தில்தான் அதிர்கின்றன. எந்த நாவலின் முடிவும் முன்கூட்டியே தெரிந்துவிடக் கூடாது. அதுபோலவே, உன் தேகத்தின் ஈரமான பக்கங்களைத் தொட்டுத் திறக்கும்போது, சுகத்தின் தவிப்பில் நீ எழுப்பும் அந்த மெல்லிய பெருமூச்சு இருக்கிறதே... அதுதான் என் உலகத்தின் அதிர்ச்சியூட்டும் ஆகச்சிறந்த கிளைமாக்ஸ்.
  1. சில புத்தகத்தை எவ்வளவுதான் விரித்துப் படித்தாலும், இரண்டு பக்கங்களும் இணையும் அந்த மைய மடிப்பிற்குள் சில வார்த்தைகள் எப்போதும் இருட்டிலேயே ஒளிந்திருக்கும். அந்த வார்த்தைகளை வாசிக்க புத்தகத்தை இன்னும் கொஞ்சம் பலமாக விரிக்க வேண்டும். உன் தேகத்திலும் அப்படி ஒரு ஆழமான மைய மடிப்பு இருக்கிறது சகி. என் கண்களுக்கும் வெளிச்சத்திற்கும் புலப்படாத, ரகசியமான இருட்டுப் பிரதேசம் அது. என் உதடுகளால் அந்த இருட்டை நான் மிகத் தீவிரமாகத் திறக்கும்போது, நீ எனக்கு மட்டுமே வழங்கும் அந்த மொழியற்ற வார்த்தைகள்... அதை வாசிக்கும் இன்பமே அலாதி.
  1. பழைய கெட்டி அட்டைப் (Hardbound) புத்தகங்களில், அதன் நடுப்பக்கங்களில் ஒளித்து வைக்க ஒரு மெல்லிய பட்டு நாடா (ribbon) இணைக்கப்பட்டிருக்குமே, கவனித்திருக்கிறாயா? அந்த நாடா எப்போதும் புத்தகத்தின் ஆக ஆழமான, இறுக்கமான மையப் பள்ளத்தாக்கில் தன்னைச் செருகிக்கொண்டு, கதகதப்பாக உறங்கும். நான் ஊரிலிருந்து வந்ததும், அந்தப் பட்டு நாடாவைப் போல மாறிக் கொள்ளப் போகிறேன். உன் தேகத்தின் ஆகச் சிறந்த அந்த இரண்டு கர்வமான சிகரங்களுக்கு நடுவே குழிந்து விழும் அந்தத் தனிமையான, இறுக்கமான பள்ளத்தாக்கில், எனக்கான இருட்டில் என் முகத்தைப் புதைத்து நிரந்தரமாக என்னைத் தொலைத்துக்கொள்ளப் போகிறேன்.
  1. நள்ளிரவு வெளிச்சத்தில் ஒரு தடிமனான, துணியால் தைக்கப்பட்ட (clothbound) hardcover நாவலை மல்லாக்க விரித்து வைக்கும்போது, இரண்டு பக்கங்களுக்கும் நடுவே விழும் அந்த ஆழமான, இருண்ட பள்ளத்தாக்கின் நிழல் என்னை என்ன பாடுபடுத்துகிறது தெரியுமா? பாலைத்திணை மணல்மேடுகளைப் போல, அகந்தையுடன் நிமிர்ந்து நிற்கும் அந்த இரண்டு அரைவட்டப் பக்கங்களும், அதன் நடுவே சரிந்து இறங்கும் அந்த ரகசியமான மடிப்பும்… அங்கேதான் என் வாசிப்பின் மொத்த தாகமும் குவிகிறது. அந்த மைய மடிப்புக்குள் விரல் நுழைத்து, புத்தகத்தின் ஒட்டுமொத்தப் பாரத்தையும் என் இரு உள்ளங்கைகளிலும் ஏந்தித் தாங்கும் அந்தச் சிலிர்ப்பு இருக்கிறதே… ஒரு தேர்ந்த வாசகனுக்கு மட்டுமே அந்தப் பாரத்தின் வெதுவெதுப்பு புரியும்.
  1. சில நேரங்களில், புதிய காகிதங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு வறட்சியாகப் பிடிவாதம் பிடிக்கும். எவ்வளவு முயன்றாலும் அடுத்த பக்கத்தைத் திறக்க முடியாது. அப்போது அவசரப்படக் கூடாது. ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் என் உதட்டில் வைத்து லேசாக எச்சிலால் ஈரப்படுத்தி, அந்தப் பக்கத்தின் நுனியை மிக மெல்லத் தடவிப் புரட்டுவேன். ஈரம் பட்டவுடன் அந்தப் பிடிவாதமான காகிதம் சிலிர்த்துக்கொண்டு, ஒரு மெல்லிய முனகல் போன்ற சலசலப்புடன் தன்னைத் திறந்து கொடுக்கும் பார்… நள்ளிரவின் நூலக அமைதியில் அந்தப் காகிதத்தின் சலசலப்பு ஆகச்சிறந்த சிற்றின்பம். என் எச்சிலின் ஈரம் பட்டுச் சிவந்த அந்தப் பக்கத்தின் ஓரங்கள் , என் வாசிப்பின் தீராத தடயங்களை என்றென்றும் சுமந்திருக்கும்.
  1. சமகாலப் புத்தகங்களின் மேல் போர்த்தப்பட்டிருக்கும் வழவழப்பான மேலட்டையை மெல்ல உருவி எடுக்கும்போது, உள்ளே எந்த அலங்காரமும் இல்லாத நிர்வாணமான கெட்டி அட்டை (Hardcover) ஒன்று கதகதப்பாகக் காத்திருக்கும். நள்ளிரவில், நீ அணிந்திருக்கும் அந்தப் பருத்தி ஆடையின் பொத்தான்களை நான் ஒவ்வொன்றாக விடுவிக்கும் போது, என் உள்ளங்கைகளில் தட்டுப்படும் உன் வெம்மையான அசல் தேகமும் அப்படித்தான் இருக்கிறது. 'பட்டுடைத் தோற்றம்' அகன்ற பின், என் விரல்கள் தொடும் அந்தப் பழஞ்சுவடியின் பச்சையான வெப்பம் இருக்கிறதே... அது காகிதத்தின் கதகதப்பல்ல, எனக்காகக் கனிந்து கிடக்கும் என் காவியத்தின் சூடு.
  1. சமீபத்திய என் வாசிப்புகளில், நாவல்களின் கரிய எழுத்துக்களை விட அதன் 'Negative space' எனப்படும் அந்த வெற்றிடங்களில்தான் என் கண்கள் அதிகம் தவம் கிடக்கின்றன. நவீன அச்செழுத்துக்களின் கெர்னிங்/spacing நுட்பத்தில், இரண்டு அடர்த்தியான எழுத்துக்களுக்கு நடுவே விடப்படும் அந்த மிகச்சிறிய இடைவெளி இருக்கிறதே... அது என்னை நிலைகொள்ளச் செய்வதில்லை. என் விரல்கள் அந்த காகிதத்தின் வெற்றிடத்தை வருடும்போது, 'கோடுயர் கொங்கை' எனச் சங்கப் புலவன் வியந்த அந்த இரண்டு கர்வமான மலைகளுக்கு நடுவே, நீ எனக்காக விட்டுவைத்திருக்கும் அந்த ஒடுக்கமான, இருண்ட பள்ளத்தாக்குதான் நினைவுக்கு வருகிறது. அந்த 'Negative space'-க்குள் முகம் புதைத்து, உன் 'சுணங்கு' பூத்த சரிவுகளில் என் மூச்சுக்காற்றை நிரப்பும் வரை எனக்கு எந்த வாசிப்பும் முழுமையடைவதில்லை.
  1. இந்த நவீன நாவல்களின் மேலட்டையில் 'Matte finish' செய்து, தலைப்பை மட்டும் 'Embossing' (புடைப்பச்சு) முறையில் அச்சடித்திருக்கிறார்கள். அந்தப் புடைப்பான எழுத்துக்களின் மீது விரல் நுனி உரசும்போது ஏற்படும் சலனம்... நள்ளிரவில் உன் 'மாமை' நிறத் தேகத்தின் மீது என் ஒற்றை விரல் ஊர்ந்து செல்லும்போது, சிலிர்த்து எழும் அந்த நுட்பமான புள்ளிகளை எனக்கு நினைவூட்டுகிறது. பார்வைக்குத் தட்டுப்படாத, ஆனால் விரல்களுக்கு மட்டுமே பரிச்சயமான, 'Emboss' செய்யப்பட்ட உன் ரகசியப் பக்கங்களில், எந்த மொழியிலும் இல்லாத ஒரு சங்கக் கவிதையை என் உதடுகள் தினந்தோறும் வாசிக்கின்றன.

பிரியமுடனும் உன் கழுத்தில் விழ வேண்டி ஏங்கும் எழுத்து முத்தங்களுடனும்
உன் பித்தன்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...