Back

Article

May 2, 2025

மதிப்பெண்ணுக்காக அல்ல, மனிதத்துக்காக!

SHARE

மதிப்பெண்ணுக்காக அல்ல, மனிதத்துக்காக!

வணக்கம் தோழர்களே,

1. தீண்டாமை ஒரு பாவச்செயல்
2. தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
3. தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல்

இந்த வரிகள் எங்க இருந்துச்சு தெரியுமா? ஒன்னாங் க்ளாஷ்ல இருந்து நம்ம படிச்ச எல்லா பாட புத்தக்தோட முதல் பக்கத்துலயும்! ஆனா நாம இத எல்லாம் படிச்சோமா பார்த்தோமா பார்த்தாலும் படிச்சாலும் அதுக்கான அர்த்தம் கேட்டோமா? இல்ல ஏன்னா இதுக்கு மார்க் இல்ல. exam ல வராது.

இதுலாம் வெறும் வரிகளா? இல்ல... அதுதான் மனிதனா வாழறதுக்கான அடிப்படை. ஆனா நமக்கு அது கத்துக் கொடுக்கப்படல. நாமளும் பிடிவாதமா கத்துக்கல. ஏன்? அதுக்கு மார்க் இல்லையே! அதை படிச்சா எக்ஸாம் ல பாஸ் ஆக மட்டோமே? அதை படிச்சா ஜாப் கிடைக்குமா? இல்லையே!

ஒரு இரும்புக் கம்பி போல ஜாதி, மதம், நிறம், பாலினம்னு எத்தனையோ பாகுபாடுகள் இன்னும் நம்மை புடிச்சி கட்டி போட்டிருக்கு. நெருப்பு போல, நம்மை சுட்டெரிக்குது. நாமும் தினமும் வலிபடுறோம், நசுங்குறோம்.

ஏன்? ஏன்னா அந்த முதல் பக்கத்தை நாம மறந்துட்டோம்.

உங்களோட அன்றய நாநாளின் அலட்சியம் தான் சாதிக் கரையான் இன்றும் இந்தச் சமூகத்தை அரித்து கொண்டிப்பதன் காரணம்.

அடக்கி வைத்த இந்த நெருப்பு...

ஒரு நிமிஷம் யோசிங்க...? உங்க வகுப்பில படிக்கிற அந்த பட்டியல் இன மாணவனை/மாணவியைப் பாத்து, "என்ன இவனுக்கு இவ்ளோ மார்க்?" அல்லது "என்னைய விட கம்மியா மார்க் எடுத்துட்டு வேலைக்கு போய்ட்டான்", "அவனுக்கு/அவளுக்கு மட்டும் ஏன் இலவச நோட்டு புத்தகம் தராங்க" அப்படின்னு நினைச்சது இல்லையா? உங்க நண்பரோட வீட்டுக்கு போனப்ப, அல்லது ஆபிஸ், பஸ் னு போகுற இடத்துல இருந்த குண்டா பெண்ணை பாத்து, அல்லது ஒல்லியான பையனை பார்த்து மனசுக்குள்ள "பாவமாகவோ", "அசூயையாகவோ" நினைச்சதில்லையா?

யாரு சொல்லித் தந்தாங்க நமக்கு இதையெல்லாம்? யாரும் இல்ல. சமூகம் நம்மை இப்படி பழக்கிடுச்சு. 'கருப்பு' பாத்தா நமக்கு சந்தேகம். 'வேற சாதி' ன்னா நமக்கு பயம். பெண்-னா எளக்காரம். இது நாம பழகின பழக்கம். இன்னும் அன்கான்சியஸ் ஆ நமக்குள்ள இருக்க அசிங்கம்.

நாம் எவ்ளோ தான் "எல்லாம் ஒண்ணு" "எல்லாரும் சமம்"னு ட்வீட் போட்டாலும், ஸ்டேட்டஸ் அடிச்சாலும், உண்மையில நம்ம உள்ளுக்குள்ள இருக்கிற நிஜம் வேற.

இப்ப இதையெல்லாம் ஏன் பேசணும்?

"என் வாழ்க்கை, என் சுதந்திரம்" னு பேசுற நாம் எல்லாரும், இப்படி அடிமைத்தனத்தோட இருக்கோம். ஏன்? நாம் ஒரு விஷயத்த புரிஞ்சுக்கணும்.

  • மேல் சாதி கீழ் சாதி (வர்ண பேதம்)
  • ஏழ பணக்காரன் (வர்க்க பேதம்)
  • தொட்டா தீட்டு, பார்த்தா தீட்டு
  • பொண்ணு மாதவிலக்கானா தீட்டு.
  • மொழிவாரியாக பேதம்
  • நிலவாரியாக பேதம்

இந்த எல்லா பேதங்களும் ஒழிக்கப்படனும்.

ஜாதி குறிச்சோ, நிறம் குறிச்சோ, பாலினம் குறிச்சோ அல்லது மேற்சொன்ன விசயங்கள்லயோ ஒரு மாற்றத்தை உருவாக்க நினைச்சா, ஏதாவது ஒரு பிரச்சனை வரும்போது மட்டும் பேசினா போதாது. உங்ளுக்கு காதல் வந்த பிறகு "சாதி பாக்காதீங்க" அப்டின்னு சொன்னா மட்டும் உடனே எல்லாம் மாறிடுமா? மாறாது.!

ஏன்னா மாற்றம்னா என்ன?

மாற்றம் என்பது ஒரு விதை மரமாவது போல. அதுக்கு நீங்க விதை நட்டு, அன்றாடம் தண்ணி ஊத்தி, பராமரிச்சு, வளர்க்கணும். அப்பத்தான் அது ஒரு நாள் மரமாகும்.

பேசுவோம்... தினமும் பேசுவோம்!

நம்ம அப்பா அம்மா இந்த ஜாதி, மதம், ஆண்-பெண், கருப்பு-வெள்ளை எல்லாத்தோடயும் ரொம்ப காலமா வளர்ந்திருக்காங்க. அவங்க அந்த தப்பான நம்பிக்கையோட தன்னைய இறுக்காம பிணைச்சு வச்சு இருக்காங்க. நாம அவங்க மேல இருக்க அன்பால அவங்ளோட பிணைஞ்சு இருக்கோம். ஆனா, அவங்களால எதுக்காகவும் அந்த விசயங்கள விட முடியல. விடவும் தாயரா இல்ல. போலவே, நம்மால எதுக்காகவும் அவங்கள விட முடியல. இப்படியாகத் தான் இந்த கருமாந்திர கூந்தல்கள் எல்லாம இன்னும் இந்த சமூகத்துல அழியாம அப்படியே இருந்து எத்தனையோ உயிர்கள கொன்னு கிட்டு இருக்கு.

ஆனா, நாம் இப்ப செய்யறது என்ன? வீட்ல அப்பா-அம்மா "ஏன்டா அவன்/ள் என்ன சாதி?" னு கேட்டா, நாம் ஏன் கேக்குறீங்க? னு திருப்பி கேக்கறோம்.

கேக்கணும். ஆனா, இன்னைக்கு இல்ல. காதல் வர முன்னாடியே கேக்கணும். ஆரம்பத்துலேயே பேசியிருக்கணும். "அப்பா, அம்மா... எல்லாரும் சமம் தான..." னு.

நாம எல்லாம் காலேஜ்ல, ஆபீஸ்ல ட்ரெஸ் கோட் பின்பற்றுறோம். ரூல்ஸ் பாலோ பண்றோம். ஏன்? முன்னாடியே தெரியும், உடையில் இருக்கற வேற்றுமை மனசுல பாதிப்ப உண்டாக்கி ஒற்றுமைய குழைக்க போகுதுன்னு! அதே மாதிரி, நம்ம வீட்டுல, நண்பர்கள் கூட்டத்துல இப்பவே பேசணும். டிஸ்கஸ் பண்ணணும். முடிஞ்சா சண்ட போடணும். ஆனா, அல்டிமேட்டா அவங்களுக்கு புரிய வைக்கிறது தான் நம்ம நோக்கமா இருக்கணும்.

மனிதர் நோக மனிதர் வாழும் வாழ்வும் தப்பு. மனிதர் மனம் நோக மனிதம் பின்பற்றும் எதுவும் தப்பு. இதை எல்லார்க்கும் உணர்த்தனும்.

மாற்றம் என்பது உணர்ந்து நடக்க வேண்டும், உணராமல் எதுவும் நடக்காது.

உங்களை நோக்கி சில கேள்விகள்...

நேரடியா கேக்கறேன்: கடைசியா எப்ப ஒரு தலித் நண்பர் வீட்டுக்கு போனீங்க?

ஒளிவு மறைவில்லாம சொல்லுங்க:

மற்ற பெண்களைப் போல ஒரு கருப்பு நிற பெண்களை உங்களால இயல்பா பார்க்க முடியுதா? ரசிக்க முடியுதா?

எல்லோரை போலவும் ஒல்லியாக அல்லது குண்டாக இருக்கிற ஒருவரை உங்களால் அணுக முடிகிறதா?

இதெல்லாம் யோசிச்சு பாருங்க. நம்முள்ள இன்னும் எவ்ளோ அசிங்கமான பாகுபாடுகள் புதைஞ்சு கிடக்குன்னு.

இன்னைக்கு ஆரம்பிக்கலாம்...

நான் ஒண்ணு சொல்றேன்... நாளைக்கு இல்ல, இன்னைக்கே ஆரம்பிங்க. உங்க வீட்ல, ஆபீஸ்ல, பஸ்ல, மெட்ரோல எல்லா இடத்துலயும் இந்த விஷயங்கள பேசுங்க.

ஒரு நண்பன் நிறத்த பத்தி கேலி பண்ணா, அமைதியா "அது தப்பு, அப்படி பேசக்கூடாது"னு சொல்லுங்க. உங்க அப்பா ஜாதியை பத்தி பேசுனா, உங்க கருத்த சொல்லுங்க. உங்க தாத்தா மதத்த பத்தி விமர்சிச்சா, உங்க விமர்சனத்தையும் வெளிப்படுத்துங்க.

உணர்வு ரீதியா இதெல்லாம் சாத்தியமா? சிரமம் தான். ஆனா, சாத்தியமில்லாதது இல்ல. நாம் இப்பவே ஆரம்பிச்சா, நம்ம பிள்ளைங்க காலத்துல, அந்த முதல் பக்கம் முக்கியமான பக்கமா மாறும்.

முடிவுரையா...

சரி, சாதாரணமா தான் சொல்லிட்டேன். ஒண்ணாம் வகுப்பு புத்தகத்துல இருந்த அந்த வரிகள்... அத படிச்சு அத நம்ம வாழ்க்கைக்கு எடுத்துக்கணும். அந்த புத்தகத்துக்கு மார்க் இல்லனாலும், அது சொல்ற பாடத்துக்கு மதிப்பு இருக்கு.

இந்த கட்டுரை படிச்சவுடனே நீங்க என்ன செய்ய போறீங்க? ஷேர் பண்ணிட்டு மறந்துடுவீங்களா? அப்படி மறந்துட்டா, மாற்றம் வராது.

தினமும் பேசுங்க. தினமும் கேள்வி கேளுங்க. தினமும் விதைகளை நடுங்க. ஒரு நாள் அந்த விதைகள் மரங்களா வளரும். நிழல் தரும். நம்ம சமூகம் மாறும்.

லவ் யூ க்கள். 💙

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...