Back

Short story

April 16, 2018

புனைகதை

SHARE

புனைகதை

#புனைகதை.

(பதினெட்டை தாண்டாதவர்களுக்கு கடைசி வரி புரிய வாய்ப்பில்லை. புரிந்தால் பெரிய ஆள் தான் நீங்க)

"நான் மூக்கு குத்துற வரைக்கும் மூக்குத்தி பத்தி எதும் எழுதாத"
"ஏன்"
"எழுதாத னா எழுதாத "
"எழுதுவேன் டி"
"எனக்காக இது கூட பண்ண மாட்டியா?"
"பண்ணுவேன் ஆனா மாட்டேன் " .
"என்ன பண்ணுவ ஆனா மாட்ட.. மூக்குத்திய பத்தி எழுத மாட்டேன் னு சொல்லு..."
" ஏய் லூசி செமயா இருக்க டி... அழகி.. இந்த புடவை உனக்கு செமயா இருக்கு.. இந்த ஸ்கை புளு எடுப்பா இருக்கு.. அது மட்டும் இல்ல... கொய்யா பழ நெறத்துல நீ மறைக்க ட்ரை பண்ணியும் தெரியற இந்த
கொஞ்சூண்டு இடுப்பு ம்ம்ம்ம்ம்."
" என்ன ம்ம்ம்..?நான் புடவை கட்டி பார்த்ததே இல்லையா "
" பாத்திருக்கேன்.. ஆனா "
" ஆனா... டேய் பேச்ச மாத்தாத ஒழுங்கா மூக்குத்திய பத்தி எழுத மாட்டேன் னு சொல்லு.. அப்பறம் மத்தத பேசலாம் "
" மூக்குத்திய பத்தி தான எழுதறேன்.. "
" அது நான் மூக்கு குத்தினப்றம் எழுது வேணாம் னு சொல்ல ல.. இப்போ எழுதாத.."
"அதான் ஏன்? "
"ஏன்னா... எவளயோ பத்தி எழுதற மாதிரி இருக்கு.. அதான் "
" லூசி.. "
" என்ன லூசி... இனி நீ மூக்குத்தி பத்தி எழுதக் கூடாது... "
" சரிங்க அப்பறம்"
" என்ன அப்பறம்... அந்த புடவை ல நெசமா அழகா இருந்தேனா"
"ஏய்... அது உண்மை னு நம்பிட்டியா..."
"அப்படினா நான் அழகா இல்லயா"
"இல்ல னும் சொல்ல முடியாது "
" போடா... நான் போறேன் "
" ஏய்.... "
" என்ன... "
" என்ன னு தெரியாத.. "
" சரி சாரி... போய்ட்டு வரேன் "
" எங்க வர..? எப்போ வர...? எதுக்கு போய்ட்டு வர.. இப்பயே வா ஒன்னா போகலாம் "
" நான் பேச மாட்டேன் "
" என்ன ஆச்சு "
" கோவமா இருக்கேன்"
"எதுக்கு "
" எதுக்கோ.. நான் தான் அழகா இல்ல யே எதுக்கு என் கூட பேசிட்டு இருக்க போ.. "
" அடியே.. அழகி "
" ........ "
" அழகி"
" யாரந்த அழகி "
" நீ தான் டி.அழகி"
" நானா.. கொஞ்ச நேரத்துக்கு முன்ன இல்ல னு சொன்னிங்க"
" சும்மா சொன்னேன் டி.. நீ எப்பவுமே எனக்கு அழகி தான் டி குழந்தை பிள்ள"
" ...... "
" என்னடி அமைதியாகிட்ட"
" அழகி சரி தான்... நான் குழந்தை யா"
" ஆமா... "
"நல்லா பாத்து சொல்லு நான் கொழந்த யா?"
" எங்க பாக்றது... நீ உன் அங்க இருக்கியே..."
" போட்டோ இருக்கு ல்ல பாரு"
" பாத்து சொல்லு "
" எத பார்த்து சொல்லட்டும் "
" எல்லாத்தையும் தான்"
"எல்லாத்தையும் தான் பார்த்தேன் ஆனா நீ குழந்தையா தான தெரியற.. "
" நல்லா பார்த்து சொல்லு "
" நல்லா தான் டி அழகி பார்த்தேன் ... "
" ஒவ்வொன்னா பார்த்து சொல்லு டா... நான் குழந்தையா னு "
" ஒவ்வொன்னானா.. புரியல "
"கண்ணு. காது.. மூக்கு.. உதடு.. னு ஒவ்வொன்னா பாரு "
"ஓ... சரி பாத்தாசசு... அப்றம் "
" என்ன அப்பறம் "
" இல்ல கண்ணு காது கன்னம் மூக்கு உதட்ட லாம் பாத்தாச்சு அப்பறம் எதை பாக்கனும்"
"அப்பறம்... கழுத்து "
" ம்ம்ம் அதுக்கு அப்பறம்... "
"அதுக்கு அப்பறம்ம்ம்"
" ம்ம்ம்ம் "
" பார்த்த வரைக்கும் போதும்... சொல்லு "
" பார்த்த வரைக்கும் குழந்தை மாதிரி தான் தெரியுது.. இன்னும் பாத்தா வேணா பெரிய புள்ள மாதிரி தெரிவியோ என்னமோ.. "
" இன்னுமா... இன்னும் என்ன இருக்கு "
" என்ன இருக்கு என் கிட்ட கேட்குற.. நீ தான் டி சொல்லனும் "
" ஏன் உனக்கு தெரியாத "
" தெரியலயே..நீ சொல்லு "
" எனக்கும் தெரியாது... "
" பாத்து சொல்லு டி... "
" என்ன டா பாத்து சொல்றது "
" கழுத்து அப்பறம்.. "
" அப்பறம் என்ன கழுத்து கழுத்து க்கு கீழ"
" கழுத்துக்கு கீழ....? "
" கீழ.. கீழ தான்... எனக்கு வெட்கமா இருக்கு போடா... "
" சரி வாடி அழகி.... என் தங்கம்"
" வந்தா என்ன தருவ"
" வந்தா உன்ன மாதிரியே ஒரு கவிதை தருவேன் "
" கவிதையா... சொல்லு டா... நானே கேட்கனும் னு இருந்தேன்"
" ஏய் இது சொல்ற கவிதை இல்லடி... "
" அப்பறம் என்ன கவிதை"
" நடக்கற கவிதை "
" நடக்கற கவிதையா??அது எப்படி தருவ "
" ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்றியேடி கள்ளி... வா...எப்படி னு காட்டறேன்... "

அவ்வளவு தான் எங்கிலும் இருள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...