Back
Philosophy
January 24, 2016
தத்துவம்
SHARE

நிறம் வெளுத்த
கருநீல உதடு;
இடைக்கும் இரண்டடி கீழாடும்
கருங்கூந்தல்;
உன் கோபத்தை
முன்னறிவிப்பு செய்யும்
பனிபடர்ந்த மொட்டாய்
வியர்வை விடும்
உன் நுனிமூக்கு;
குடமேறும்
உன் சின்ன இடை;
நீ சாணம் தெளிக்கையில்
ஓரிரு சாண்
உன் பாவடையை
ஏற்றிக் கட்டும் போது தெரியும்
நன்கு வளர்ந்த காட்டுமரத்தின்
அடிபோல்
அளவுபெருத்த
உன்கெண்டைக்கால்;
இவற்றிலெல்லாம்
இல்லாத காமம்
உன் நாணம் கலந்த
அந்த பவ்விய பார்வையில்
உணர்கிறேன்
என் உலகறியா திவ்வியமே..!!!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...