Back

Philosophy

March 24, 2022

தத்துவம்

SHARE

தத்துவம்

வர வர சக மனிதர்கள் மேல் எல்லோரும் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களில் அப்படியாக அவநம்பிக்கையான அல்லது நம்பிக்கையற்ற பதிவுகளைத்
தான் நிறைய பார்க்க நேர்கிறது. யாரோ ஒருவர் தந்த ஏமாற்றத்தின் பேரில் எப்படி இவர்களால் யாரையும் நம்பாதே என்று ஏதோ உலகமே அவர்களுக்கு துரோகம் இழைத்ததைப் போல சோக புராணம் பாட
முடிகிறது? கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் பாருங்களேன். உங்களின் ஒரு நாளில் யாரென்றே தெரியாத எத்தனை மனிதர்களைச் சந்தித்து கடக்கிறீர்கள் என்று. உங்கள் வீட்டுக்கு பேப்பர்
போடும் நபர், பால் பாக்கெட் போடும் நபர், ஹோட்டலில் உங்களுக்கு சோறு பரிமாறும் நபர், தியேட்டரில் உங்களுக்கருகில் உட்கார்ந்திருக்கும் நபர், நீங்கள் காய் கறி வாங்கும்
கடைக்காரர், உங்களை pick and drop செய்யும் ஆட்டோக்காரர், பேருந்தில் உங்களோடு பயணிக்கும் ஓட்டுநர் நடத்துநர் மற்றும் சக பயணிகள் என இப்படியாக எக்கச்சக்கமாய் அடுக்கிக்
கொண்டே போகலாம்... இவர்கள் அத்தனைப் பேரும் உங்களை அதிகம் தெரியாத உங்களுக்கு அதிகம் தெரியாத நபர்கள் தானே? அவர்கள் நினைத்தால் மிக எளிதாக உங்களை ஏமாற்றவும் உங்களுக்கு
தீங்கிழைக்கவும் முடியும். அதற்கு அநேக வழிகள் இருக்கின்றன. எனினும் அப்படியாக எதுவும் நடக்கவில்லை. பெரும்பாலும் நடப்பதும் இல்லை. இப்படி உங்களை யாரென்றே தெரியாத நபர்கள்
கூட உங்கள் நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டிருக்கும் போது, எப்படி உங்களால் அப்படி எல்லாம் பேசவும் பகிவுரவும் எதிர்மறையாக சோக புராணங்கள் பாடவும் முடிகிறது.? தயவு செய்து
நம்புங்கள் தோழ தோழி மார்களே,இந்த உலகம் முழுதும் அன்பின் கட்டுமானம். இந்த உலகம் மொத்தமும் நல்லவர்களால் நிரம்பி இருக்கிறது. யாரென்றே தெரியாத யாரும் கூட (பெரும்பாலும்)
யாரையும் ஏமாற்றத் துணிந்திடாத அளவு இந்த உலகம் தூயது. அன்பே யாவும். நம்புதலே உயிர். என்றும் அன்புடனும் தீராத காதலுடனும் துளிச்சலனமுமில்லா தூய நம்பிக்கையுடனும் பித்தன்.
(அப்படி உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, சக மனிதர்களிடத்தில் இருக்கும் சக மனிதர்கள் மீதான நம்பிக்கையை கெடுக்காமலேனும் இருக்குங்கள். அன்பே யாவும்.
நம்புதலே உயிர். லவ் யூ க்கள். 💙❤️🖤)

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...