Back

Philosophy

May 23, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

கடவுள் இல்லை என்று சொல்கிறேன். ஆமாம் இல்லாத சமாச்சாரம் தான். அது மனித மனத்தின் கற்பனையும் கூட. ஆனால், பொய்யாகவே இருந்தாலும் அந்த கடவுள் என்கிற சித்தாந்தம் இருக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் அது ஒரு
நம்பிக்கை பாத்திரம். எல்லாம் முடிந்த பின்னும் எதாவது ஒரு சக்தி காக்கும் என்கிற கடைசி நம்பிக்கையை கொடுக்கிறதில்லையா அதனால் அந்த கடவுள் வேண்டிய ஒன்று தான்.
// //
உங்களுக்கு placebo தெரியுமா?
// //
டாக்டரிடம் போகிற ஒரு patient ரொம்ப பதட்டமாக அல்லது பயந்த மனநிலையில் இருந்தால் ஒரு மாத்திரை (placebo) யை தண்ணீரில் போட்டுத் தருவார்கள்.
// //
[A placebo is an inert substance or treatment which is designed to have no therapeutic value. Common placebos include inert tablets, inert injections, sham surgery, and other procedures. ]

// //
உண்மையில் இது மாத்திரை இல்லை. இது சர்க்கரை மட்டுமே. இது எந்த வகையான குணப்படுத்துதலையும் தராது. இது அந்த மாத்திரையை கொடுத்த டாக்டருக்கு மட்டுமே தெரியும். ஆனால் இதை கொடுத்த டாக்டர் அதை தந்ததோடு
நில்லாமல் மாத்திரை போட்டிங்க ல்ல பயப்பட வேணாம். சரி ஆகிடும் " என்றும் சொல்கிறார். ஆக, இங்கு நோயாளியின் பயம் தணிந்து விடுகிறது. பயம் தணிந்து விட்டதால் டோபமைன் போன்ற ஹார்மோன்கள் சுரந்து
கொஞ்சம் புத்துணர்வையும் தருகின்றன. மேலும் placebo வின் பட்டியல் நீளமானது. ஒரு முத்தம், ஒரு அணைப்பு, இதுவும் கடந்து போகும் என்கிற வாசகம், அன்பான ஒரு சொல் என தீர்வாக இல்லாமல் ஆறுதலையும் கொஞ்சம்
எதிர்கொள்க்கிற நம்பிக்கையையும் பயம் தணிந்த மனநிலையையும் தரக் கூடிய எல்லாமும் placebo தான்.
// //
இப்படிப் பட்ட ஒரு placebo தான் கடவுள் என்கிற சிந்தாந்தமும். இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொன்னால் கடவுள் என்பது "பயம் தணிந்த (தன்னிலை கடந்த) மனநிலை" அல்லது "அந்த மனநிலையை தருகிற
ஒன்று" அவ்வளவே. மேலும் அது எதையும் குணப்படுத்தாது எதையும் கொடுத்து உதவாது எதையும் ஆக்காது அழிக்காது. ஆனால் நம்பிக்கையை தரும். இதை நாத்தீகர்களும் சரி ஆத்தீகர்களும் சரி தெளிவாக புரிந்து
கொள்ள வேண்டும்.
// //
நாத்தீகர்களை விடவும் ஆத்தீகர்களே அதிகம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இங்கு நிறைய தீவினைகள் ( தீண்டாமை, சாதி உட்பட்ட பல) அந்த கடவுள் பெயரைச் சொல்லி நிகழ்த்தப் படுகின்றன. கடவுள் என்பதே
மனிதனால் மனிதனுக்கு ஆறுதலாக இருக்க வேண்டி படைக்கப்பட்ட ஒரு கற்பனை மற்றும் நம்பிக்கை பாத்திரம். மேலும் மனிதன் தான் கடவுளை இது நாள் வரை பாதுகாப்பாய் காத்து இன்னும் சாக விடாமல் (அழிக்க விடாமலும்)
வைத்திருக்கிறானே ஒழிய, கடவுள் மனிதனை படைக்கவோ காப்பற்றவோ இல்லை. ஆக, இல்லாத ஒரு கற்பனை பாத்திரம் படைத்ததாகச் சொல்லிக் கொண்டு மனிதனை மனிதனே மட்டம் தாழ்த்துவது தவறு. தீண்டாமையை அந்த கடவுள் தான்
பின்பற்றி நொட்டச் சொன்னார், சாதியை அவர் தான் அடித்து அனுப்பி வைத்தார் என்று கதை மேல் கதை சொல்வதும் தவறு. மனிதனை மனிதனாக மதிக்க தெரியாத எவனும் கடவுளை என்கிற சிந்தாந்தத்தை கடைபிடிக்கவும்
வழிபடவும் தகுதி இல்லாதவன். உண்மையில் கடவுள் என்பது பொய்யான கற்பனை பாத்திரமாக இருந்தாலும் மேற் சொல்ல ப்பட்ட சில நன்மைகளுக்காக இருந்தால் பரவாயில்லை என்கிறேன் நான்.
#கடவுள்_இல்லை. #இருந்தாலும்_வேண்டும்.
// //
இல்லை, கடவுள் என்பது கற்பனை என்பதையும், கடவுள் எதையும் படைக்க வில்லை என்பதையும் நாங்கள் ஏற்க மாட்டோம், கடவுள் உண்மையானவன் எங்கு நிறைந்திருப்பவன். அவனே நம்மை காப்பவன் என்று சொன்னால் கூட ஏதோ
நான் ஏற்றுக் கொள்ளத் தயார். ஆனால் மேற் கொண்டு கடவுள் தான் சாதியையும் இந்த ஏற்றத் தாழ்வுகளை யும் இன்னும் இருக்கிற லொட்டு லொசுக்குகளையும் #து படைத்து கொடுத்தார் அதை காக்கவே எங்களையும் #து
படைத்தார் என்று சொல்வீர்களானால் உங்கள் காது கிழியச் சொல்லுவேன் கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளை கும்பிடுகிறவன் ஒரு முட்டா 🙊🔥.

#கடவுள்_இல்லை. #இருந்தாலும்_வேண்டாம்

நன்றிகளுடன் பித்தன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...