Back

Philosophy

March 25, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

பறையாட்டம் :- தன்னிலை மறந்து தன்னை ஈடு படுத்திக் கொள்வது கலைஞனுக்கு அழகு , அதிலும் பார்க்கின்ற பார்வையாளர்க்கு தன்னிலை மறக்கடித்து தன் வசப்படுத்திக் கொள்வது அந்தக்
கலைக்கும் கலைஞனுக்குமான வெற்றி. இந்த இரண்டையுமே செம்மையுறச் செய்தது பறை இசை. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தாளகதி தப்பாமல் தப்படித்த உங்களுக்கு லட்சோப லட்சம் லவ் யூ
க்கள். இறுதி வரை இசை நயம் தப்பாமல் தப்படித்தது, உங்கள் கலை ரசனை மற்றும் கலை நேர்த்திகக்கான ஆகச் சிறந்த உதாரணம். இடையிடையே அரங்கேறிய உங்களின் நாட்டிய அசைவுகள் அருமை.
அதிலும் குறிப்பாக ஒரு தம்பி இறுதி வரை குறுநகை தவழ்கிற முகத்தோடும் அழகான உடல்மொழியோடும் ஆடியது மிக அழகு. (மற்றவர்களும் புன்னகைத்தீர்கள். ஆனால் இடையிடையே முக இறுக்கம்
தெரிந்தது.) மேலும், உங்களின் கைகளுக்கு ஓய்வு கொடுத்துக் கொள்வதற்காக கையாண்ட யுக்தி மிக மிக அருமை. அதுவும் இரண்டு அணிகளாக பிரிந்து போட்டி பாணியில் தப்படித்தது
சிறப்பினும் சிறப்பு. இந்த தப்பாட்டத்தை நான் கொண்டாட்டாமாக பார்க்க வில்லை. கோவ மொழியாக தான் பார்த்தேன். சாதிய வேற்றுமை பாராட்டுகிற சமூகத்திற்கு எதிரான வெறி ஆட்டமாகப்
பார்த்தேன். அதனால் தான் என்னையும் அறியாமல் அழுகை வந்து விட்டது. உங்கள் தப்படி ஒவ்வொன்றும் ஒதுக்கப்பட்ட சமூகத்தின் உரிமை மற்றும் கோபக் குரல். உங்கள் தப்படி ஒவ்வொன்றும்
சாதி மதம் என்கிற தப்பான விசயத்தை ஆமோதிக்கிற சமூதாயத்தின் மீதான சவுக்கடி. உங்கள் தப்படி ஒவ்வொன்றும் ஒரு சமூக மாற்றத்திற்கான படிக்கல். இறுதியாக அந்த syscom ல் போட்ட
"கலைக்காகத் தான் நீயும் உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே வா நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா ஊருக்காக
ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்" பாட்டு எதேச்சையாக அமைந்தாலும் அது உண்மை.என்னைப் போல் எத்தனைப் பேர் தன்னை மறந்து அழுதார்களோ
தெரியவில்லை. அப்படி தன்னிலை மறந்த அவர்கள் அத்தனை பேரின் சார்பாகவும் என் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். @15/03/2020 @gct ♥️❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...