Article
January 31, 2020
தத்துவம்
SHARE

நான் இப்போது, இங்கு, சென்னையில் ஒரு வீட்டு மாடியில் நண்பர்களுடன் வசிக்கிறேன். மதிய வேளைகளில் மேல் ஆடையில் இல்லாமல் தான் இருப்பேன். ஏனென்றால், இங்கு வெயில் எப்படி என்பது சென்னை வாசிகளுக்கு நன்கு தெரியும். இன்றும் அப்படித் தான் உலவிக் கொண்டிருந்தேன். எதேச்சையாக எதிர் வீட்டு மாடியில் ஒரு அழகான, ரசிக்கத் தக்கப் பெண்மணி தென்பட்டாள். உடனே
நான்,
"மச்சான் யாரு டா அந்த பொண்ணு அழகா இருக்கா" - என்று நண்பனிடம் வினவினேன்.
"பொண்ணா... டேய் அவங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு டா"
என்றதும் என் இதயத்தில் இடி இறங்கி விட்டது.
உடனே நான் " இப்படி எல்லாம் இருந்தால் பிறன்மனை நோக்காப் பேராண்மை என்கிற வள்ளுவ நெறியில் இருந்து பிறழ்வுற்றிடுவேன் போலயே" என்று சொல்லிக் கொண்டேன்.
நிற்க. நாம் பேச வேண்டிய விவாதிக்க வேண்டிய விசயம் அந்த பெண்ணின் அழகோ, என் மனப் பிறழ்வோ இல்லை. வெயிலடிக்கிறது, வேர்கிறது என்று என்னால் மேலாடை களைந்து, வெற்றுடம்போடு நாலு பேர் (பெண்கள் உட்பட) பார்க்க உலவ முடிந்தது. முடிகிறது. இதே, ஒரு பெண்ணுக்கு வேர்க்கிறது என்றால் இவ்வாறு ஆடைகளைந்து திரிய முடியுமா? ஆண்கள் இருக்கிற இடத்தில் கூட இல்லை, பெண்கள் மட்டிலும் வசிக்கிற இடத்திலாவது முடியுமா? முடியாது.
ஏனென்றால், பெண்ணுடல் மீதான நோக்கு அப்படி. ஆண்களுக்குத் தான் பெண்ணுடம்பை பார்த்தால் காமம் கிளர்ந்து விடுகிறது என்கிறார்கள். பெண்ணுக்குமா? ஏன் இப்படி, பெண்கள் உட்பட்ட எல்லோரும் பெண்ணுடம்பின் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்? முதலில் பெண்ணுடல் குறித்தான இந்த நோக்கமைவை மாற்ற வேண்டும். ஆணுக்கு இருப்பதைப் போல பெண்ணுக்கும் சதை தான் இருக்கிறது (என்ன பெண்ணுக்கு சதை திரட்சி கொஞ்சம் கூடுதல்) என்ற எண்ணம் வர வேண்டும். பாலியல் கிளர்ச்சி என்பது சந்ததி உருவாக்கத்திற்கு அவசியமானதும் இயற்கையானதும் கூடத் தான். ஆனால், பெண்ணுடம்பை பொக்கிசம் போல, பார்க்கக் கூடாத பொருள் போல மூடி மூடி வைப்பதும், பெண்ணுடல் பற்றிய கருத்துகளும் கூட பெண்ணடிமைத் தனத்தின் மற்றும் சாதியத்தின் அடித்தளம் என்பேன். மேலும், பெண்ணை காமத்திற்கு
மட்டுமனாவளாய் மட்டுமே பார்ப்பது மிகப் பெரிய - வரலாற்று நெடுகிலும் நடந்து வந்த - நடந்து வருகிற குற்றம். பெண் காமத்திற்கு மட்டுமானவள் இல்லை, பெண் காமத்திற்கும் ஆனவள்.
அடுத்து, ஒரு திரைப்பட வசனம் இது.
"பெண் :-(ஜெயலலிதானு நெனைக்கிறேன்.) "பெண்ணுக்கு இன்பமும் துன்பமும் எப்போது ஏற்படுகிறது?
ஆண் :- காதலிக்கும் போது.
பெண் :- பெண்களைப் பூங்கொடி கோவைப்பழம் என்று பலவிதமாக வர்ணிக்கிறார்களே ஆண்களை ஏன் வர்ணிப்பது இல்லை?
ஆண் :- அழகுப் புகழ்ச்சியைக் கேட்டு ஆண்கள் பூங்கொடி போல் துவண்டு விழுவதும் இல்லை, கோவைப் பழம் போல் கன்னிப் போவதும் இல்லை. அதனால் தான் ஓயாமல் பெண்களை மட்டும் புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்."
இந்த உரையாடலைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்களானால் உங்களுக்கே சில விசயம் பிடிபடும். பெண்கள் முதலில் அழகுணர்ச்சியில் இருந்து கொஞ்சமேனும் வெளி வர வேண்டும். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால், உலகில் அதிகமாக வியாபாரம் நடத்தப்படுவது ஒன்று பெண்களை வைத்து, இன்னொன்று பெண்களுக்காக வைத்து. கொஞ்சம் கவனித்துப் பார்த்துமேயானால், அலங்கராப் பொருட்கள் எல்லாம் பெண்களை ஆண்களுக்கு அழகாகக் காட்டத்தானே ஒழிய, அதில் வேறு எந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், இயல்பை விட வேறு சிறந்த அழகியல் இருப்பாதாக எனக்குத் தெரியவில்லை. உ. தா :- பூ, கிளி, முயல், பூனை 😼 (மியாவ் 😻) இதையும் தாண்டி என் ஊரில் கிராமத்தில் காட்டு வேலை செய்யக் கூடிய பெண்களின் புடவை விலகி இடை தெரியும், மார் தெரியும், ஏற்றிக் கட்டப்பட்ட புடவையால் முழங்கால் வரை கூட தெரியும். மேலும் அவர்கள் தன்னுடைலைப் பற்றியோ அழகைப் பற்றியோ அதிகம் அங்கலாய்த்துக் கொள்வதில்லை. இருந்தாலும் அவர்கள் அழகாகத் தான் தெரிவார்கள்.
கம்பராமாயணத்தில் ஒரு பாடல். "விற்பெருந் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெரும் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன் இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும்பொறை என்பது ஒன்றும் கற்புஎனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக் கண்டேன்" இது அனுமன் ராமனிடம் பேசுவது போல் அமைந்துள்ள பாடல். அனுமன் முதலில் சொல்ல வந்த செய்தியைச் சொல்லாமல்" வில்லையும் பெரிய தோளையும் உடைய வீரனே!"என்ற பீடிகையோடு தொடங்கு கிறான். நன்கு கவனிக்கவும் இங்கு ராமன் அனுமனின் புகழுரைக்கு மயங்கி விடவில்லை. அடுத்ததாக,
"நீர் மிகுந்த, கடல் சூழ்ந்த இலங்கை மலையில் வெறும் தவத்தை உடையவள் ஆகிய சீதையை நான் காணவில்லை. மாறாக உயர்ந்த குடிப்பிறப்பு என்னும் பண்பும், சிறந்த பொறுமை என்னும் பண்பும், கற்பு என்னும் திண்மையும் ஒருங்கு கூடி மகிழ்ச்சியால் கூத்தாடிக் கொண்டிருந்ததைத்தான் கண்டேன்”
என்று கற்பு என்ற கட்டுக்கதையை அடித்து விடுகிறார்கள் அனுமனும் கம்பனும். மேலும், லங்காபுரியில் இருந்து சீதையை மீட்டு வந்த பின் ராமன், சீதையை நோக்கி
"ஊண்திறன் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட மாண்டிலை முறைதிறம்பு அரக்கன் மாநகர் ஆண்டுறைந் தடங்கினை அச்சம் தீர்ந்தீவண் மீண்டது ஏன்?“
“ஒழுக்கம் பாழ்பட மாண்டிலை” என்கிறான் இராமன். அதாவது ஒழுக்கம் கெட்ட பின்பும், ஏன் இன்னும் செத்துத் தொலையாமல் இருக்கிறாய்? என்றும் “ஊண்திறன் உவந்தனை” - அவர்கள் கொடுத்த வகைவகையான உணவு வகைகளைத் தின்று மகிழ்ந்திருந்தவள் தானே நீ? என்றும் திட்டிக் கூறியதை கம்பனே பாடியுள்ளான்.(
இங்கு, கவனிக்க வேண்டிய விசயம் ராமன் ஒரு ஆணாதிக்க மற்றும் சந்தேக வெறி பிடித்த மிருகம் என்பது) இதே, கேள்வியை சீதை ராமனை நோக்கி,
"நான் இல்லாமல், நீ மட்டும் யோக்கியனாய் இருந்திருப்பாய் என்பது என்ன நிச்சயம்?" என்று கேட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்.? சரி விடுங்கள் அது தான் முடிந்த கதை (கட்டுக் கதை) ஆயிற்றே. அதைபற்றிய பேச்சு என்ன. நான் சொல்ல வருவது இது தான், கற்பு என்பது ஒரு கட்டுக்கதை. அப்படியாக ஒன்று இல்லை. மேலும், கற்பு என்றால் என்னளவில் கற்றதை பின்பற்றுதல் அவ்வளவே. இன்னும், "ஆண்டவன் படைச்சான் என் கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா னு அனுப்பி வச்சான்" னு இங்கு எல்லாமும் ஆண்களுக்கு சாதகமானதாகாவும் பெண்களை அடிமைப் படுத்துவதாகவுமே இருக்கிறது. ஆமாம் , ஆதாம் ஏவாளை படைத்த கவுடள் ஏதென் தோட்டத்தை படைத்த கடவுள், ஆப்பிளை தின்தற்காக தண்டைனை கொடுத்த கடவுள் பாரபட்சம் பார்த்திருக்கிறார், சமத்துவம் தவறி இருக்கிறார். முதலில் விலக்கப்பட்ட கனியை தின்தற்காக இருவருக்கும், மரணம் உண்டாகக் கடவது என்கிறார். பிறகு, குற்றத்தைத் தூண்டி விட்டதால் பெண்ணுக்கு பிரசவ வலி உண்டாகக் கடவது என்கிறார். இதோடு நில்லாமல், நீ என்றுமே ஆணுக்கு அடிமையாக இருக்கக் கடவது என்கிறார். ஒரே குற்றத்திற்கு மூன்று தண்டனை. சமநீதி என்கிற நிலையில் இருந்து கடவுளே நழுவி இருக்கிறார். அதாவது, இவ்வாறாக, கதை ஏன் உருவாக்கப்பட்டதெனில் பெண் ஆணுக்கு அடிமைப்பட்டு கிடக்க வேண்டும் என்று ஆண்டவனே சொல்லி விட்டான் என்றால் பெண்கள் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாதில்லையா.?
மேலும், சாதிக்கு எதிராகக் குரல் கொடுத்த எல்லோரும் பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்திருப்பார்கள். ஏனென்றால், எனக்குத் தெரிந்து எல்லாப் பெற்றோரும் தன் வீட்டுப் பெண் பிள்ளை கையில் தான் தன் சாதிக் கௌரவம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். அது மட்டும் இல்லை சாதி பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிற இடம், திருணம். இந்த, உட்சாதி திருமணங்கள் மூலமாகத் தான் சாதி இன்னும் இந்த சமூதாயத்தில் வேர் பிடித்து நின்று கொண்டிருக்கிறது. கலப்பு திருமணக் கலாச்சாரம் இந்த சமூதாயத்தில் முழுவதுமாக கடைப்பிடிக்கப்படுகிற நாளில் சாதி என்னும் நச்சுக் கிருமி நிச்சயம் அழியும். அதற்கு, என்ன வழி முதலில் பெண்கள் தன் இணையை தானே தேர்ந்தெடுக்கிற சுதந்திரம் அடைய வேண்டும். அந்தச் சுதந்திரம் அடைய என்ன வழி, முதலில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், வீட்டுக்கும் வெளியேயும் உலகம் இருக்கிறது என்று உணர வேண்டும், தாலி, தன் உடம்பு என்பது காமத் தூண்டு பொருள், பார்தா அணிவது, மாதவிடாய் என்பது தீட்டு போன்ற கலச்சார சங்கிலிகளையும் மூட நம்பிக்கைகளையும் விட்டு வெளிய வர வேண்டும். (தாலி, பர்தா - மூடநம்பிக்கை, மாதவிடாய் - உடற்செயலியல் human physiology ) பிறகு, பெண்கள் கல்வி பெற்று தன் காலில் தான் நிற்க வேண்டும். மேலும், தன் வாழ் நாள் துணையை தானே தேடிக் கொள்ள வேண்டும்.
இதற்கு எல்லாம் முதலில் யார் மாற வேண்டும். ஆண்கள். ஆண்களின் ஆதிக்க மனப்பான்மை ஒழிய வேண்டும். ஆண்கள் மத்தியில் இருக்கிற பெண்ணுடல் குறித்தான போக்கு மாற வேண்டும். பெண்ணுடல் ரசிக்கத்தக்கதாக இருப்பினும் கூட, அந்த உடலுக்கும் உயிர், மனம் உணர்ச்சி, ஆசாபாசங்கள் இருக்கிறது என்று உணர வேண்டும். இது மட்டும் இன்றி சுதந்திரம் என்பது அவரவர் பிறப்புரிமை அதை ஏன் அடுத்தவரிடத்து எதிர்பார்க்க வேண்டும்? ஆண்கள் யார், உங்க(பெண்க)ளுக்கு சுதந்திரம் தர? பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்து கொண்டு பெண்களே கிளம்ப வேண்டும். எனவே,
பெண்ணடிமைத் தனம் முதலில் உடைபட வேண்டும். பிறகு தானாகவே சாதிய அமைப்பு உடைபடும் என்பதே நான் சொல்ல வரும் கருத்து.
நன்றி.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...