Back

Philosophy

March 2, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

[11/10, 12:50 AM] பித்தன்:
உன்னிடம் என்றும்
குன்றா பெரும் நேசம்
பெற வந்தவன்
இன்று கண்டேன்
உன் நெஞ்சம்
கடல் மோதவும் கரையாத குன்றென்று.

😑😑😑
[11/10, 1:06 AM] பித்தன்:
தொங்கும் தூக்கனாங் குருவி கூடு,
எங்கும் வலை பின்னும் சிலந்தி வீடு - பாம்பு
வந்து தங்கும் மணற்புற்று ஆகிய
இவையெல்லாம் செய்ய
அவையன்றி வேறெவையாலும் ஆகாது...
அஃதே என் மேல் உன் போல்
அன்பு செய்ய
உனையன்றி
உலகில் யார் உளர்.
😑
[11/10, 1:53 AM] பித்தன்:
முளைப்பது அரிசியே எனினும்
உமி நீங்கிய நெல் உணவாகுமே அன்றி
பயிராகாது - பெண்ணே
நீயென் உடலோ உயிரோ இல்லாமல்
வெறும் உறவு தானெனினும்
உமி நீங்கும் நெல்லன்ன
உனை நீங்கி வாழேன் உயிர்.

😑😑

Ajithkumar Ajithkumar R

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...