Philosophy
March 2, 2019
தத்துவம்
SHARE

சும்மா tik tok பக்கம் போனேன். Tik tok முழுக்க ஆண்களா இருக்காங்களே னு சலிப்போட நகர்த்திட்டு வந்தேன். இந்த பாட்டும் இவளும் வந்து நின்னாங்க. பொண்ணு என்னவோ அழுதாலும் அழகா
தான் இருக்கு. சைட் அடிக்கலாம். ரசிக்கலாம். அந்த உதட்டு வரிக்காகவே இவள கொண்டாடலாம். ஆனா இந்த பாட்டுக்கும் என் நினைவுக்குமான தொடர்பு அழகான, ஆழமான துக்கம். இந்த பாட்ட
எனக்கு அறிமுகப்படுத்தினது அவ தான். முன்னலாம் அவ ஞாபகம் வரப்போலாம் இந்த பாட்ட போட்டு கேட்பேன். ஒரு நாளைக்கு பத்து பதினைஞ்சு வாட்டியாவது கேட்ருவேன். ஆனா இப்போ கேட்கவே
பயமா இருக்கு. அழுதிடுவனோ னு தோனுது. இதே மாதிரியான சனிக்கிழமை ஒரு நாள் சொல்லாம பொல்லாம போன சுவிட்ச் ஆப் பண்ணிட்டு காலேஜ் போய்ட்டா, அந்த சமயத்தில தான் அவங்க வீட்ல
பிரச்சனையாகி கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவளுக்கு அடி லாம் விழுந்தது. என்ன னு நினைக்க தோனும்? மனசுக்குள்ள ஒரே படபடப்பு. மனசு தவியா தவிச்சது. அன்னைக்கு அம்மா கூட நகைய அடகு
வைக்க பேங்க் வரைக்கும் போயிருந்தேன். அம்மா க்கும் எழுத படிக்க தெரியாது னு தான் என்னைய கூட்டிப் போனாங்க. ஆனா என்னால அங்க நிக்க கூட முடியல. அவளுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ
னு மனசு அடிச்சிகிட்டே இருந்தது.என்னோட control ல நான் இல்ல. நமக்கு ஒன்னுனா கூட உடல் வலி,புற வலி.அதுக்கு மருந்து இருக்கு சரி பண்ணிக்க முடியும். ஆனா நமக்கு
புடிச்சவங்களுக்கு ஒன்னு னா அது மன வேதனை. மருந்தே கிடையாது. அதுவும் நாம உலகமா உயிரா நினைச்ச ஒருத்திக்கு எதாவது னா சொல்லவா வேணும். ஓயாம போன் பண்ணேன். அம்மா வ கூட
கண்டுக்கல. காலை ல இருந்து சாயங்காலம் வரைக்கும் போன் பண்ணேன். ஒரு 5.30 வாக்கில வந்து போன ஆன் பண்ணி call பண்ணா. எதுக்குங்றிங்க. திட்ட றதுக்கு. நானூத்தி சொச்சம் தடவ call
பண்ணிட்டேனாம். நான் தவிச்சது அவளுக்கு தெரியல. எதுக்கு இத்தன தடவ கால் பண்ண. வீட்ல யாராவது போன ஆன் கீன் பண்ணிருந்தா நான் என்ன ஆகறது னு திட்டிட்டா. அழுகையே வந்திடுச்சு.
என்னவோ இப்படி தான். சின்னதா எதாவது அவள நினைவூட்டுற மாதிரி பார்த்திட்டாலும் மொத்தமா அந்த துக்க பள்ளத்தில விழுந்து உருண்டிடுறேன். மன வலி தான் மிச்சம். அத விடுங்க. அன்பு
செய்ங்க. முடிஞ்ச மட்டும் அன்புடையவர்கள அன்புக்குரியவர்கள கொண்டாடுங்க. அன்பே நித்யம். அன்பு உலகம். அன்பே உயிர். அன்பே எல்லாம்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...