Back

Philosophy

May 15, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

மு. கு:பதிவு சற்று நீண்டது.

#பெண்.
என் எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு தெரியும். பெண் என்ற சொல் என்னில் எத்தனை பாதிப்பை உண்டு பண்ணி இருக்கிறது என்று.ஆமாம் எனக்கு பெண் மீதத்தனை பிரியம்.
பெண் என்பவள் போற்றுதற்குரியள். யோசித்து பாருங்களேன் எத்தனை இன்னல்கள் இருக்கிறது அவளுக்கு. மாசாம் மாசாம் வயிற்று வலி. ரத்த போக்கு. ரணம்.காலிடுக்கில் வேர்ப்பதே ஒரு ஒவ்வாத உணர்வை தரும்.இதில் ரத்த
போக்கென்றால் சொல்லவா வேண்டும். அடி வயிற்றில் ஒரு வீரியமான வலி வேறு. தசைகளை இறுக்கி படிக்குமாம்.இடுப்பொடிக்குமாம். கொடுமை.இந்த வலியோடு தான் சமைக்கவும் பாத்திரம் தேய்க்கவும் துணிகளை துவைக்கவும்
செய்கிறார்கள். பெண்களுக்கே கொடி பிடிப்பதாய் நினைக்காதீர்கள். என்னை சுற்றி உள்ள சூழல் அப்படி.
திருமணம் ஆன ஒரு வருடத்தில் பிறந்த வீட்டுக்கு திருப்பி அனுப்பப் படுதல்... பொண்டாட்டி இருக்கவே வேறொருத்தியோடு சல்லாபித்திருத்தல், யாதுமாறியாதவளை சந்தேகித்தல்,படுக்கவும் சமைக்கவும் மட்டுமானவளாக
பாவித்தல், தனக்கு சொத்து சேர்த்து கொள்ள வாய்த்த ராஜா பேழையென கருதுதல் இது மட்டுமா இன்னுமுண்டு காதல் ஏற்க மறுத்தால் ஆசிட், கற்பழிப்பு இப்படி எத்தனை கொடுஞ் சம்பவங்கள்.
இதிலும் கணவன் மனைவிக்கிடையில் சண்டை வர நேர்ந்தால் அடிவயிற்றில் உதைக்கிற, முடியை பிடித்து வளைத்திழுத்து முதுகில் குத்துகிற, நடு நிசியாயினும் "கெளம்புடி உன்ன வீட்டுக்கு" என்று சொல்கிற
ஆண்கள் எல்லாம் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இதில் சிலது படிக்காத பட்டிக் காடுகள். விடுங்கள்.
மெத்த படித்த சில மீசை வைத்த இளைய தலைமுறைகள் பண்ணுகிற அட்டூழிய அழிச்சாட்டியங்கள் இருக்கே.. பேருந்தில் இருக்கிற பெண்ணின் சடையை இழுத்தல், இடையை வருடுதல், எவ்வளவு இடம் இருந்தாலும் உருசி கொண்டே
போதல், தனியாக போகிற பெண்ணிடத்தில் வம்பிழுத்தல், அவளை வசைபாடுதல்... இதெல்லாம் கேவலம்.
இன்னும் சிலர் ஒரு குறி்ப்பிட்ட காலம் வரை காதல் என்ற பெயரில் கணவன் மனைவியை போல குடித்தனம் செய்து விட்டு வெகு இயல்பாக "let's break-up" என்று சொல்லு வார்கள். அதற்கு சில பொய்க்
காரணங்களும் சொல்வார்கள். பெரும்பாலும் ஆண்களுக்கு ஆசை சற்று அதிகம். எதிலும் ஒன்றோடு நின்று விடுவதில்லை. ஒரே நேரத்தில் எழெட்டு தேவைப்படுகிறது..
அதை விட்டொழிக. ஆண்கள் பற்றிய பேச்சுத் தேவையில்லை. அவர்கள் சுதந்திர புலிகள். பெண்களுக்கு வருவோம். பெண்மையின் வலி உண்மையிலே கொடுமையானது.இதில் ஆண்களின் தொல்லைகள் அவசியம் தானா? .
வலி பொறுத்து சிலை ஈனும் கல்லென வலி பொறுத்து வர்க்க விருத்திக்கு வழி செய்பவள் பெண் . சுருங்க சொன்னால் ஒரு முகமுடைய பிரம்ம அவதாரம் அவள். நாம் தொழுதற்குரிய பெரும்பாலான விசயங்களுக்கு பெண் பெயர்
தான் வைத்திருப்போம். ஏனெனில் பெண் போற்றுதற்குரியள். புரிந்து கொள்ளுங்கள். உங்கள் காதலுணர்விற்கும் காம உயர்விற்கும் அவளை பலி கொடுக்காதீர்கள். பால் ஈர்ப்பு என்பது பரமகாலம் தொட்டே இருந்து வருவ
தாயினும்,நிகழ் காலத்தில் அந்த ஈர்ப்பின் விளைவால் ஈடு செய்ய வியாலாத இழப்புக்கள் தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
காலிடுக்கில் பிசு பிசுக்கிற ரத்தம் மட்டும் அல்ல கண்டவுடன் கண் கவர்கிற கழுத்தடி கனத்திருக்கும் தொங்கு சதையிலும் அவளுக்கு தொந்தரவு உண்டு.இப்படி பெண்ணுக்கு இயல்பாகவே உபாதைகள் அதிகம். இதில் நாம்
வேறு தொல்லைகள் தர வேண்டுமா என யோசியுங்கள்.பெண் போற்றுதற்குரியள் தான். ஆனால் போற்றப்பபடமால் போவதொரு குறையுமில்லை. ஆனால் அவளை அவமதிப்போ அனாவசிய தொல்லையோ அச்சுறுத்தலோ செய்யாமல் இருங்கள். அது
போதும்.
நன்றி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...