Back

Short story

August 4, 2019

சிறுகதை

SHARE

சிறுகதை

இடம் :கொடிசியா - கோவை. நாள் : 20/07/2019 நானும் என் தோழமை யும் கடந்த மாதம் மேற் சொன்ன தேதியில், மேற் சொன்ன இடத்தில் நடந்த புத்தகத் திருவிழாவிற்கு போயிருந்தோம். முற்பகல்
11 மணிக்கு நுழைந்தவர்கள் ஒரு 2 மணி வரை புத்தகங்களை பார்த்தோம். நான் பார்த்து கொண்டே இருந்தேன். உடன் வந்தவர் பசிக்கிறது என்றார். சரி என்று சொல்லி பக்கத்து ஹாலில் இருந்த
சிற்றுண்டிக்கு போனோம். நான் போய் நாற்காலியில் அமர்ந்து கொண்டு வருவோர் போவோரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். அவர் போய் எனக்கு காபியும் ரெண்டு மெதுவடையும் அவருக்கு ஒரு
கரும்பு ஜூஸையும் ஒரு பொட்டட்டோ ரோலையும் வாங்கிக் கொண்டு வந்தமர்ந்தார். நான் எதையோ சிந்தித்தபடி சிரித்து கொண்டிருந்தேன். "என்ன யோசனை என்ன சிரிப்பு?" "இல்ல
ஒரு கவிதை தோனுச்சு அதான்" "என்ன கவிதை" "வேணாம் விடுங்க.." "சொல்லு டா" "சரி சொல்றேன்.. கொடிசியா அரங்கின் ஒரு கோடியில் நான் மறு
கோடியில் புத்தகத்தை மார்போடு அழுந்த அணைத்த படி நீ மெல்ல கை தாழ்த்துகிறாய்.. உன் கருப்பு வண்ண டீ சர்ட்டில் மார்புக்கு மேலாக மஞ்சள் நிறத்தில் யானை முகம் தந்தத்தோடு
அசைகிறது நான் உன் டீ சர்ட்டை டிசைன் செய்தவன் திருக்குறளை ஆழப்படித்தவன் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டு உன்னை பார்கிறேன் மீண்டும் யானையின் தந்தம் என்னை குத்தும்
பாவனையில் அசைகிறது . " " எனக்கு புரியல டிசர்ட்டுக்கும் வள்ளுவருக்கும் என்ன தொடர்பு " " காமத்துப்பால் ல ஒரு குறள் வரும் " " என்ன குறள்
"கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில்." " அப்படினா?" " ஒரு பெண்ணோட நேரா கூம்பி நிற்கிற சாயாத மார் மேல் அசைந்தாடுற துணிய
பார்த்தேன். அது மதங்கொண்ட யானையோட நெற்றி மேல போட்டிருந்த துணிய போல இருக்கு னு சொல்றார்" " அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் " " புரியலயா? "
" நெசமா புரியல" " ரெண்டையும் ஒன்னாக்கி வச்சிருக்கான். அவள் நடந்தா மார்பும் அசையுது. அதே சமயம் அந்த யானையும் அசையுது. அவ மார்பு அசையும் போது ஒரு யானை
என்னை தாக்க வர மாதிரி இருக்கு ". " எங்க அந்த பொண்ணு " " அதோ அங்க சேர் ல உட்கார்ந்து குல்பி சாப்டுட்டு இருக்கா" " முடிய அள்ளி உயரமா கொண்டை
போட்டிருக்காளே அவளா? " " ம் ஆமா சைடு ல இருந்து பார்த்தாலும் யானை தெரியும் " " ஒன்னும் சைடுல பார்க்க வேணாம்.. நீ போய் எனக்கு ஒரு ஜிகிர்தண்டா வாங்கிய
வா " இப்போது நீங்கள் ஊகித்திருப்பது சரி யே. என்னோடு வந்த தோழமை பெண்பால் தான். ஆனால் இந்த பெண்கள் எப்படி இருந்தாலும் அழகா இருக்கிறார்கள். ஆமாம் அவளின் இந்த பொறாமை
கூட அழகாய் இருந்தது. (கடைசி வாக்கியத்தின் போது தன் சுடிதாரின் சாலை இழுத்து மார்மேல் சரியாக படர விட்டு கொண்டாள்.) ஆனால் அந்த t-shirt designer ஐ பாராட்டியே ஆக வேண்டும்.
என்ன குறள் அது.. கடாஅக் களிற்றின்மேற்... செம ல்ல.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...