Back

Short story

August 4, 2019

சிறுகதை

SHARE

சிறுகதை

நான் எந்த கடவுளுக்கும் எதிரானவனோ அல்லது கடவுள் மறுப்பாளனோ இல்லை நீங்கள் கடவுளாக எதை வேண்டுமானாலும் வணங்கி கொள்ளுங்கள். அது பற்றி கவலை இல்லை. ஆனால் அது தேவை தானா? சரிதானா? பகுத்தறிவுக்கு
ஒத்துவருகிற காரியம் தானா? என்பதை கொஞ்சம் யோசித்து செய்யுங்கள். மேலும் உங்கள் கடவுள் பெயரை சொல்லி யாரையும் கீழ்மை படுத்தாதீர்கள். (அப்பறம் நீங்கள் கும்பிடுகிற கடவுளையும் சேர்த்து ஏத்த வேண்டி
வரும். கொஞ்சம் உங்கள் கடவுள்களின் பிறப்பை யோசித்து பாருங்கள். யார் யார் அப்பா அம்மா வுக்கு பிறந்தவர்கள் என்று யோசியுங்கள். அவதாரம் அது இது என்று வாயிலே எதாவது காரியம் செய்ய வேண்டாம்.)
பெரியார், அம்பேத்கர் என்று எத்தனையோ பேர் வந்து சொல்லியும் மாறாத நீங்கள் நான் சொல்லி மாறிவிடுவீர்கள் என்று நான் ஒருபோதும் நம்ப மாட்டேன். நம்பினால் அது என்னுடைய முட்டாள் தனம். நீங்கள் யாருடைய
பேச்சையும் கருத்தையும் கேட்க வேண்டாம். உங்களுக்கே சொந்தமாய் மூளை இருக்கிறது. யோசிக்கும் திறன் இருக்கிறது. கொஞ்சம் பகுத்தாயுங்கள். கடவுள் பெயரை சொல்லிக் கொண்டு வருசம் எவ்வளவு வீண் செலவு
செய்கிறீர்கள் என்று யோசியுங்கள். நீங்கள் கடை பிடிக்கிற தீண்டாமை சரிதானா? எந்த நாலு பேருக்காகவும் சாதியை கடை பிடிக்கவோ விட்டொழிக்கவோ வேண்டாம். மனிதாபிமானத்தின் அடிப்படையில் மனசாட்சியின்
அடிப்படையில் சிந்தித்து பாருங்கள். சக மனிதரோடு உட்கார்ந்து பேசுங்கள். மற்றவர்களின் வலியை களைய முற்படாவிட்டாலும் அவர்களின் வலியை புரிந்து கொள்ள வேணும் முற்படுங்கள். ஒரு நாள் உங்களை வீட்டுக்கு
வெளியில் வைத்து சோறு போட்டால் எவ்வளவு வேதனையை உணர்வீர்கள் என்று யோசியுங்கள். ஒரு சமூகத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறீர்களே அது சரியா என்று யோசியுங்கள். தீண்டாமை இந்திய சமூகத்தில் பரவி
கிடக்கும் எய்ட்ஸை விட மோசமான வியாதி. இந்தியாவில் 429 சாதிகள் இந்துகளால் தீண்டத்தகாதவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மாட்டுக்கறி தின்பவர்கள், சிதறுண்ட குடியினர், இனவேறுபாடு என
பட்டியல் நீள்கிறது. காலம் காலமாய் ஒருத்தரை புறக்கணிப்பது, நிராகரிப்பது சரியா? பிறந்ததிலிருந்தே புறக்கணிக்கபட்டு ஒதுக்கிவைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழும் அவர்களின் வலியை பற்றி யோசியுங்கள்.
பார்ப்பனியர்களுக்கும் பார்பனியத்துக்கும் சூத்து கழுவுவதை விடுத்து கொஞ்சம் வெளியே வாருங்கள். இந்து மத சாஸ்திரங்கள் யாரோ சில முட்டாள்களின் படைப்புகள். நீங்கள் நினைக்கிற படி யாரும் கடவுளின்
மயிரு, குண்டி, குழாயில் இருந்து பிறக்கவில்லை. அப்படித்தான் பிறந்தேன் என்று சொல்வீர்களானால் உங்கள் அப்பனும் ஆத்தாளும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.? (மன்னிக்கவும்) எல்லாரும் குறியிலிருந்து
யோனியிலொழுகி யோனியிலிருந்து வெளித்தள்ப்பட்டவர்கள். இன்னும் சுருங்கச் சொன்னால் நாமெல்லாம் யாரோ செய்த காமத்தின் எச்சங்கள் அவ்வளவே. இப்படி இருக்கையில் ஏன் கேவலமான பாகுபாடுகள். கிறுக்குப்
புன்னகைத் தனமாக இருக்காதீர்கள்.. அன்பே சிவம் அன்பே கடவுள் என்று வசனம் பேசுவதை விட்டு அன்பு செய்ய பழக்கபடுங்கள். அன்புக்கு பழக்கப்படுங்கள். பாடங்களை மதிப்பெண்க்காக படிக்காமல் கொஞ்சம் அறிவை
வளர்த்துக் கொள்ளவும் படியுங்கள். பகுத்தறியுங்கள். எதார்த்தம், சாமி, பூதம், சாஸ்திரம் எல்லாம் அழுக்கு முட்டைகளையும் கட்டிக் கொண்டு திரியாதீர்கள். சக உயிர்களிடத்தில் அன்பு செய்ய தெரிந்தவன் எவனோ
அவனே மனிதன். முதலில் மனிதனாய் இருக்க பழகுங்கள். பிறகு கடவுளை பற்றி யோசிக்கலாம்.
நன்றி

  • மேலும் உரையாடுவோம்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...