Back

Short story

April 19, 2019

சிறுகதை

SHARE

சிறுகதை

சாதிய ஒடுக்கு முறைய ஒழிக்கனும் அப்படினா அதற்கு சரியான தீர்வு தரமான, பொதுவான கல்வியும், பொற்றோர்களோட சரியான வளர்ப்பு முறையுமே.

முகநூல் பக்கத்துல ரெண்டு குழந்தைங்க போட்டோ வலம் வந்துட்டு இருக்கு. ஒன்னு அரியலூர் பிரச்சனைல வன்முறையாளர்களோட நின்னுட்டு இருக்கு. இன்னொரு குழந்தை அப்பாவியா இடிந்து போன வீட்டுக்கு நடுவுல
நின்னுட்டு இருக்கு.
இந்த ரெண்டு குழந்தைகளுக்குமே தேவையானது என்னனா..? தரமான, பகுத்தறவு பூர்வமனா கல்வி. இந்த ரெண்டு குழந்தைகளுமே அம்பேத்கரையும் பெரியாரையும் தெளிவுர ஆழ்ந்து வாசிக்க வேண்டியவர்கள்.

முறையான கல்வி தரப்படலான ரெண்டுமே பிற்காலத்துல வன்முறைய தான் கைல தூக்கிட்டு திரியும்.

இந்த சாதிங்றத சின்ன வயசிலிருந்தே ஊட்டி ஊட்டி வளர்த்துட்டு வறாங்க.வன்னியன், சத்தியரின்,கவுன்டன் னு பேருக்கு பின்னாடியும் முன்னாடியும் தன்னோட சாதி பேர போட்டுக்றத விட, தன் பேருக்கு பின்னாடி போடப்
படுற அந்த ரெண்டு எழுத்து படிப்பு தான் வலிமையானதும் கௌரவமானதும் னு பெற்றவர்கள் சொல்லி தரனும். கற்றோர்க்கு கட்டுச் சோறு தேவை இல்லை ன்ற விட கற்றோர்க்கு சாதிய பாகுபாடு கிடையாது ன்றத சொல்லித்
தரனும். பிடிக்குதோ பிடிக்கலயோ இப்போ எல்லோ சாதி இன குழந்தை களும் அம்பேத்கர படிச்சாகனும். அவர பத்தி தெரிஞ்சி கிட்டாகனும். சமூதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு, சாக்குப்பை மேல உட்கார்ந்து படிச்ச ஒரு
பிள்ளையோட வாழ்க்கை இப்போ எல்லோ பிள்ளைகளும் படிச்சு தெரிஞ்சிக்க வேண்டிய பாடமாகிருக்கு னா அதுக்கு காரணம் என்ன.? அவரோட படிப்பு. அறிவு.இத எல்லா குழந்தைகளும் பெற்றோர்களும் புரிஞ்சினும்.

எல்லா பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்கு இத தான் சொல்லி வளர்க்கனும். சாதிகள் இல்லையடி பாப்பா னு பள்ளி கூடத்துல வாத்தியார் சொல்லி தரது மட்டும் போதாது. பெற்றவர்களும் சொல்லி தரனும். சொல்லி சொல்லி
வளர்க்கனும். அப்போ தான் சாதிய அடக்கு முறை ஒழியும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...