Back

Short story

June 25, 2018

சிறுகதை

SHARE

சிறுகதை

கலகம் செய்யும் விழிகள் - மனதை
இளகச் செய்யும் மொழிகள்
இருட்டில் நூல் கிழித்த கூந்தல் - பலாச்சுளை
உருட்டிச் தேன் தெளித்த இதழ்கள்
என்னை மிரட்டும் விற்புருவம் - இளந்
தென்னை போன்ற பருவம்
மண்ணை நோக்கும் குலை வாழை தனங்கள் - எனது
எண்ணம் கலைக்கும் மிளிர்வான தொடைகள்
ஆலிழை போல் வயிறு - ஊசிநுழை
நூலிலை போல் இடை
ஏழிசை மீட்டும் வீணையென உடல் - இன்னும்
யாரும் படுத்திடா பாயெனவே இளமை!
அடியே! பிரம்மப் பிரமாதமே!
நித்தமென் நினைவாட் கொண்டு - சித்திரமே
சித்தம் கலங்க செய்தாய்!
மூத்தவளே! என் மூதுரையே - உன்னால்
பித்து கொண்டலையும் பைத்தியமென ஆனேன்!
வைத்தியம் நீ யே தான்!
வாலிப விருந்தே வா!
நெஞ்சினுள் இடம் கொடுத்து
பஞ்சனையின் மேல் படுத்து -தினம் மனதை
கிழிக்கும் நோய்க்கு மருந்தெழுதி தா.!

❣️ ❣️ ❣️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...