Back

Short story

December 23, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

#சிறுகதை

#இப்படியும்_உண்டு.

நானும் அவளும் ஒரே ஆபிஸ்(office) ல தான் ஒர்க் பண்றோம். நல்லா வாட்ட சாட்டமா இருப்பா(ள்) . அவளோட ட்ரெசிங் ஸ்டைல் (dressing style) எல்லோரும் புடிக்கும் னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு அவ உடுதுதுற
உடுப்ப பாத்தாலே பத்திகிட்டு வரும். இறுக்கமா மார் ரெண்டும் பிதுங்கறாப்லயும் ஏதோ லெகின்ஷ்(leggings) னு சொல்றாங்களே அதையும் தான் போடுவா(ள்) . மேல சால்(shawl) போட மாட்டா.
நானும் அவளும் அன்னைக்கு ஸ்கூட்டர்(scooter) ல போகறச்சே... ச்சீ அந்த பொறுக்கி என்ன சொல்லிட்டு போனான்.?
"ஏன்டி இப்படி மத்தவங்க பேசற மாதிரி நடந்துக்றே. பொம்பள புள்ள யா கொஞ்சம் நல்ல உடுப்பா போடக் கூடாதா" னு சொன்னா
"இதோ பாரு டி நான் இப்படி தான். ஏன்... நீ இப்படி இந்த சேலய இழுத்து போத்திகிட்டு வரியே உன்னை எத்தனை பேர் அம்மணமா பாக்றான் தெரியுமா? . எப்படி இருந்தாலும் பாக்றவன் பாத்துட்டு தான் டி
இருப்பான்." னு விதண்டாவாதம் பண்றா.

" எப்படி போனாலும் பாக்கத் தானே போறாங்க னு அம்மணமா போய்டுவியா" னு கேட்குறேன்
"எனக்கு புடிச்ச அப்படியும் போவேன்" னு சொல்றா(ள்) . என்ன பொண்ணோ? அவள நெனைச்சா எனக்கு சங்கடமாவும் பயமாவும் இருக்கு.

இத விடுங்க அன்னைக்கு புடவை கட்டி கிட்டு வந்திருந்தா அதுவும் இடுப்பு தெரியற மாதிரி. அவ போட்டிருந்த ரவிக்கை இன்னும் மோசம். கையும் இல்ல ஒன்னும் இல்ல. ச்சீ. அருவருப்பா இருக்கு.

இந்த ரியான் வேற என்னாண்ட வந்து அடிக்கடி பொலம்புவான். பாக்கவே பாவமா இருக்கும்.
அந்த ரியான் அவள லவ்(Love) பண்றானாம்.
"ஏன் கீதா நீயாவது அவட்ட எடுத்து சொல்லக் கூடாதா. எப்பிடி லாம் ட்ரெஸ்(dress) பண்ணிட்டு வரா பாரு. அவள லவ் (Love) பண்ணாத நெனைச்சா கேவலமா இருக்கு. அந்த ஜெகதீஷ் இவள மேனு னு கூப்டுறான்.. இவ அவன
சொல்லு ஜாக் னு குழயறா. ஐய்யோ தலையே வெடிச்சிடும் போல இருக்கு. அந்த ஜெகதீஷ் இதுவரைக்கும் நாலு தடவ இவகிட்ட தப்பா நடந்துக்க ட்ரை(try) பண்ணிருக்கான்.உனக்கும் தெரியும் ல அப்பறமும் இவளால எப்படி அவன்
கூட சிரிச்சு சிரிச்சு பேச முடியுது. நீயும் பொண்ணு தான. நீ எப்படி இருக்க. ஏன் அவ மட்டும் இப்படி அசிங்கமா நடந்துக்றா.அவன் என்னை லவ் பண்ணலனா கூட பரவாயில்ல.... ஒழுக்கமாவாச்சும் இருக்கலாம் இல்ல
" னு அவள விமர்சனம் பண்ணிட்டே அழ ஆரம்பிச்சிடுவான்.
சில சமயம் அவன் அழறத பாத்த எனக்கும் அழுகை வந்திடும்.
அந்த ஜெகதீஷ் இவ கிட்ட இது வரைக்கும் நாலு தடவ தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சிருக்கான்.பண்றதையும் பண்ணின்டு கொஞ்சம் கூட கூச்சம் ன்றதே இல்லாம அழுதுட்டு கால் ல விழுந்து கெஞ்சுவான் அதுவும்
பொம்மனாட்டி கால் ல.அதுக்கு இவளும் "சரி விடு ஜாக் இனி இப்படி நடந்துக்காம இரு. Nothing to worry" னு ஆறுதல் சொல்லுவா.
அந்த ஜெகதீஷ் விசயமா நானும் அவள எத்தனையோ தடவ வார்ன்(warn) பண்ணிட்டேன் . சொல்றச்சேலாம்
" நீ தயிர் சாதம் டி. உன்ன மாதிரி என்னால இருக்க முடியாது. அப்பா னா இருந்தாலும் மகனா இருந்தாலும் சபலம் ன்றது சரி சமமாகிடுச்சு. இதுல இவன் மட்டும் என்ன விதி விலக்கா." னு பேசி
சங்கடப்படுத்றா.
அதுவும் அப்பா வையும் உடன் பொறப்புகளையுமே அந்த ஜெகதீஷோட ஒப்பிட்டு பேசறா. வ்வேக். எனக்கு நெனச்சாலே வயிறெல்லாம் கொமட்டுது . இதையெல்லாம் நான் ரியானாண்ட சொல்லல.
"நான் வளர்ந்த சூழ்நிலை அப்படி. எல்லோரும் ஒரே போல இருந்திட முடியுமா என்ன? நீ அவ எல்லா குணத்தை யும் தெரிஞ்சு தான லவ்(love) பண்ண. அப்பறம் என்ன " னு திட்டிடுவேன். திட்டினா உடனே அவன் அழறத
நிறுத்திட்டு வாக்கு வாதம் பண்ண ஆரம்பிச்சிடுவான். எனக்கும் அப்பாடா னு இருக்கும். நம்ம கண்ணெதிர்ல யாராவது அழுதா நம்மலும் உடைஞ்சு போய்டுறோம்.

இப்படி உடம்ப காட்டிட்டு தொடையும் இடுப்பும் தெரியற மாதிரி உடுப்பு போட்டுட்டு இருந்தா தான் இந்த ஆம்பளைகளுக்கு புடிக்குமா. என்னை மாதிரி இருந்தா பிடிக்காதா?

இல்லையே. அவனுக்கு என்னைய புடிக்குமே.ஆனா நான் தான் அவன் கிட்ட முதல் ல புரபோஸ் பண்ணேன். ரொம்ப ஈகோ புடிச்சவன். ஆனா நான் என்ன பண்ணாலும் ஏன் னு கேட்க மாட்டான். இந்த மேனகாவா பத்தி சொன்னா.. அவ பண்றது
தப்பு இல்ல னு தர்க்கம் பண்ணுவான். அவ செய்யறத நியாயப் படுத்துவான்.
" நான் அந்த மாதிரி லாம் ஏசல் கோசலா உடுப்பு போட்டுட்டு அவள மாதிரி எல்லா ஆம்பளைங்க கிட்டயும் சிரிச்சு சிரிச்சு பேசினா பரவாலயா"
" உனக்கு அது தான் புடிச்சிருக்குனா நான் என்ன பண்ண முடியும்? "
"என்னை எல்லாரும் கேவலமா பாப்பாங்களே?"
" அதான் ஏற்கனவே அவளே சொல்லி இருக்காளே? எப்படி இருந்தாலும் பாக்றவன் பாத்துட்டு தான் இருப்பான். அதுக்கு னு நம்ம இயல்ப மாத்திக்க முடியுமா? என்ன."
"சரி உனக்கு நான் எப்படி இருந்தா புடிக்கும்.? உனக்கும் அந்த மாதிரி இருந்தா தான் புடிக்குமா?"
"இங்க பாருங்க என் வருங்கால பொண்டாட்டியே ஃபேக்(pack) பண்ணி வர கிப்ட்(gift) அ தான் ஆர்வமா பிரிச்சு பாக்கலாம் னு தோனும். ஓபனா இருந்தா ஒரு இன்ட்ரெஷ்டும் இருக்காது."
" பேச்ச மாத்தத... பாவம் டா அந்த ரியான் எவ்வளவு அழறான் தெரியுமா? நீயே சொல்லு என் கிட்ட யாரவது அந்த மாதிரி தப்பா நடக்க முயற்சி பண்ணிருந்து நான் எதும் நடக்காதத போல பழைய படி பேசிட்டு இருந்தா
உனக்கு கஷ்டமா இருக்காதா?"
"இங்க பாரு கீதா... ஒரு உதாரணத்திற்கு சொல்றேன், எனக்கு பொண்டாட்டியா வரப் போறவள நாலு பேரு கற்பழிச்சிருந்தாலும்... ஏத்துக்க தயார்.... ஏன்னா அது அவ உடன்பாடில்லாம நடந்தது."
"லூசு மாதிரி பேசாதடா... சரி... அப்படி கற்பழிச்சவங்களோட எதும் நடக்காதத போல பேசிட்டு பழகிட்டு இருந்தாலும்
ஏத்துப்பியா?"
" தன்னோட தப்பா உணர்ந்து மன்னிப்பு கேட்க்ற சமயத்தில ஏத்துக்கலாம் தப்பில்ல டி. இப்போ நான் கோவத்துல உன்ன அறைஞ்சிட்டு.. அப்பறமா வந்து மன்னிப்பு கேட்டா ஏத்துக்க மாட்டியா?"
"கிறுக்குத் தனமா வாதம் பண்ணாதடா. நீயும் அவங்களுக்கும் ஒன்னா. இல்ல அறையறதும் அப்படி நடந்துக்றதும் ஒன்னா?"
"இப்போ என்ன சொல்ல வர?"
"அந்த மேனகா அப்படி நடத்துக்றது தப்பு தான்"
"ம்ம் ஆமா உன்னோட பார்வை ல தப்பு தான். அவள பொறுத்த வரைக்கும் அது அவளோட சுதந்திரம்" னு பெருசா தர்க்கம் பண்ணுவான்.
ஆனா "நான் அந்த மாதிரி உடுப்பு போடவா" னு கேட்டா போட்டுட்டு போ னு சொல்ல மாட்டான். "உன் விருப்பம்" னு ஒட்டாம பதில் சொல்லுவான். அவனுக்கு நான் இப்படி இருக்றது தான் பிடிக்கும்
ஆனா அதை வெளில சொல்ல மாட்டான். அமுங்குனி. இதனால தான் அவன எனக்கு புடிச்சதோ என்னமோ. அவன மொத மொத பாக்றச்சயே திட்டிட்டேன்.
ஒரு நாள் சாயந்தரம் நான் வாக்கிங் (walking) போய்ட்டு இருந்தேன் . இன்னும் நெறய பேர் அங்க நடந்துட்டும் ஓடிட்டும் இருந்தாங்க. அப்போ தான் அவன பார்த்தேன்.
அவனும் அவன் கூட இன்னொருத்தரும் எனக்கு எதிர்ல வந்துட்டு இருந்தாங்க. ரெண்டு பேரும் எதோ பேசிட்டே வந்தாங்க. கை ல ஏதோ பை இருந்தது. அது என்ன னு நான் சரியா கவனிக்கல. என்னைய ஓவர்டேக் பண்ணிட்டு ஒரு
பொண்ணு வேகாம அவங்கள கிராஸ் பண்ணிட்டு எங்கயே நடந்து போய்ட்டு இருந்தா.
அவள அவன் குறுகுறு னு அதுவும் கழுத்தடியவே பார்த்தான்.எனக்கு அன்னைக்கு எங்க இருந்து அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியல.
"ஒரு பொண்ணு எப்படி இருந்தாலும் இப்படி தான் பாப்பிங்களா. ஆம்பளைகளே இப்படி தான் போல ச்சீ. உன் வீட்லயும் பொம்பளங்க இருக்காங்க தான" னு பெருசா திட்ட ஆரம்பிச்சிட்டேன்.
அவன் சுத்தி முத்தியும் பார்த்துட்டு "ஹலோ.... ஹலோ... கூள் டவுன்... நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க"
"என்ன கேட்கனும்? நீ பாத்தது தப்பு இல்ல னு சொல்லப்போறியா.. அந்த பொண்ணு நல்லா தான ட்ரெஸ்(dress) பண்ணிட்டு போன. அவ மேல தப்பு சொல்ல பார்க்காத " னு முன்ன பின்ன தெரியாத புது மனுசனு கூட
பாக்காம மரியாதை இல்ல மூச்சுவாங்க திட்டிட்டேன்.
நான் பேசற எல்லாத்தையும் அவன் கைய கட்டியும் அவன் கூட வந்த ஆளு வாய பொத்தியும் கேட்டுட்டு இருந்துட்டு நான் பேசி முடிச்சதும் அப்பாடா பேசி முடிச்சிட்டிங்களா. மூச்சு வாங்கிட்டு அப்படியே நான்
சொல்றதையும் கேளுங்க. இப்போ நான் அந்த பொண்ண தப்பா தான் பார்த்தேன். இல்ல னு சொல்லல.இதோ இங்க நிக்றானே இவன் அந்த பொண்ணோட அந்த ரெண்டையும் நரசமா வர்ணிச்சான். நானும் அத ரசிச்சேன். ஆனா கொஞ்சம் ஏதோ
உறுத்தலா இருந்தது. நம்ம விட்டு பொண்ண இப்படி பேசினா கம்னு இருப்போமா? பேசின வாய உடைச்சிருப்போம். இல்ல நம்ம பொண்ண திட்டி நல்லா ட்ரெஸ்(dress) பண்ணா சொல்லுவோம்.
இத தான் நானும் பண்ணேன். அந்த பொண்ணு யாரு என்னனு தெரியாது. சோ(so) நான் அவ கிட்ட போய் சால்(shawl) அ சரியா போட்டு போமா னு சொல்ல முடியாது. இவன் கிட்ட அப்படி பார்க்காதடானும் சொல்ல முடியாது.
சொன்னாலும் நீயும் தான பார்த்த ஏதோ யோக்கியன் மாதிரி பேசுறியே னு சொல்வேன். இல்லாட்டி, ஏன் இவள வேற எவனும் பார்க்க மாட்டானாடா னு கேட்பான்.
அதனால தான் நான் அந்த பொண்ண வச்ச கண்ணு வாங்கமா அவளோட கழுத்தடியவே பார்த்தேன். அவளும் நான் பாக்றத கவனிச்சிட்டு வாய்க்குள்ளயே கேவலமா திட்டினா. இவனும் அதுக்கு வாய பொத்திட்டு சிரிச்சான்.
ஆனா அந்த பொண்ண என்னைய திட்டினாலும் என்னைய கடந்து போனதும் கழுத்த ஒட்டி கிடந்த அந்த சால்(shawl)அ இறக்கி இருக்க வேண்டிய இடத்துல போட்டுட்டு போறா. இனி அவள யாரும் அப்படி பார்க்கப் மாட்டான்.
பாக்கனும் னு நெனைச்சாலும் பாக்க முடியாது....... " னு அவன் கொடுத்த விளக்கத்துல ஆடி போய்ட்டேன்.
இப்படியும் உண்டா னு யோசிச்சேன்.
இது தான், இப்படி தன்னை கெட்டவனாக்கிட்டு அவளுக்கு நல்லது பண்ண அந்த.... என்ன சொல்றது..... ம்.. அந்த ஸ்டைல் தான் என்னைய இம்ப்ரஸ் பண்ணினது . அதானால தான் நான் அவன லவ் பண்ணேன். இதனால தான் ஒரு பொண்ணு
நானே தைரியமா போய் அவன்ட்ட ப்ரபோஸ் பண்ணேன்.எங்க எப்படி னு கேட்காதீங்க. அது இத விட பெரிய கதை.

முற்றும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...