Back

Short story

December 6, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

உள்ளிருந்து நீ உதைக்கும் வலி எப்படி இருக்கும் அடிக்கடி அடிவயிறு தட்டி பார்க்கிறேன். நிறைமாசத்தில் உன்னை சுமந்திருக்கும் என் வயிறு எப்படி இருக்கும்? துணிகளை மூட்டைகட்டி
ஆடை க்குள் துருத்தி அழகு பார்க்கிறேன். பிறந்த பின் ஆண்பிள்ளையா பெண் பிள்ளையா என கேட்போரிடம் என் பிள்ளை என சொல்ல காத்திருக்கிறேன். உன்னை எப்படி உறங்க வைக்கலாம் உண்ணும்
போதும் தாலாட்டு கேட்கிறேன். உன்னோடு எப்படி உறங்கலாம் தலையணையோடு தினம் ஒத்திகை பார்க்கிறேன். உறக்கத்தில் உன் கைகால்கள் என் மேல் விழுந்தால் உன் உறக்கம் கலையாமல் எப்படி
ஒதுக்கி விடுவது ஆடை விலகியதும் தெரியாமல் ஆழ்ந்து யோசிக்கிறேன். எச்சில் படாமல் எப்படி உன்னை முத்தமிடலாம் கண்ணாடியை முத்தமிட்டு கற்கிறேன். எதிர்பார நேரத்தில் என்னை நீ
முத்தமிட்டால் எப்படி இருக்கும் எண்ணி எண்ணி வெட்கப்படுகிறேன். இறுக்கமில்லாமல் உன்னை அணைப்பதெப்படி என்னை நானே அணைத்து பார்க்கிறேன். உன்னை எப்படியெல்லாம் செல்லம் கொஞ்சலாம்
உலகிலக்கியங்களை புரட்டி பார்க்கிறேன். உன் சின்னவாய் திறந்து சிநேகத்தோடு எப்படி என்னை அழைப்பாய் குயிலை கூவச் சொல்லி கேட்கிறேன். இப்படி ஏகபோக எதிர்பார்ப்புகளோடு என்
மலட்டு மார்களில் பால் சுரக்க காத்திருக்கும் இந்த வெத்து சிப்பியை முத்து சிப்பியாக்கி என்னோடு முத்தாட வருவாயா என் முத்தாரமே.

காற்றோடு கலந்த பூந்தேனும் ஆற்றோடு போகும் கருவாட்டு மீனும் நேற்றோடு இறந்த வெறுங்கூடு நானும் இன்னும் கண்டு கொள்ளப்படாமல்.

என் தகப்பனுக்காய் நானெழுதும் முதல் கவிதை இது. கண்டு பூத்து காணாது காய்க்கின்ற கள்ளச்செடியன்ன உள்ளுக்குள் காதல் வைத்து கண்பார்க்க கடிந்து பேசி காணாத நேரம் காதல் செய்யும்
கள்ள நேசனே.....! என் ஆகாயம் ஆதாயம் எல்லாமும் நீயானாய். "எனக்கு சொத்து பத்தெல்லாம் எம்மக்க குட்டிக தானு மார் தட்டி சொன்னவனே" என் உள்ளும் புறமும் சொல்லும்
செயலும் கருவும் கவியும் குருவும் திருவும் யாதும் நீயானாய்.... எனை ஈனாத தாயானாய்...

யுத்தப் பொழுதில்லை ரத்தம் கசிகிறேன். சத்தம் வரவில்லை கத்தி அழுகிறேன். சித்தத் தெளிவில்லை சிரித்தெழுகிறேன். தத்தத்தனனனா தத்தத்தனனனா....................

கோல மயிலாட கோபுர நிழலாட நினைவு நீண்டோட நிற்க நிழல் தேட நீலக் குயில் பாட மலராய் மனம் வாட அடி நெஞ்சில் சுமை கூட அது அன்பின் துணை நாட துணைக்கு யாருமில்லை துயர் வடிக்க
கண்ணில் நீருமில்லை. என் வலிக்கு மருந்துமில்லை இந்த வரியை மிஞ்சும் விருந்துமில்லை. துயரக் கண்களுக்கு துளிகள் பாரமில்லை. அயர்ந்து தூங்கினேன் அந்தக் கனவுகளும் தூரமில்லை.
உயர்ந்து பறக்காத்தான் எனக்கொரு சிறகுமில்லை. உயிர் பிரிந்து கிடக்கிறேன் எனை எரிக்க விறகுமில்லை.

Ajithkumar இன் இடுகைகள், 41,000 முறை விரும்பப்பட்டுள்ளன

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...