Back

Poem

January 24, 2016

கவிதை

SHARE

கவிதை

¤அழுகின்ற கவிகளுக்கு
ஆறுதல் சொல்வது
எப்படியடி
என் கண்ணே????

¤செப்படி வித்தை
செய்தாயா என்ன?????
இப்படி
வாய் வறண்டு
போனபின்னும்
என் எழுதுகோல்
உன் பெயரையே
உச்சரிக்கின்றது.

¤அடியே
அன்புடைய ராட்சசியே
என் எழுதுகோல்
நீலமாய்
வெகு நீளமாய்
அழுகின்றது
அமைதியாய்.

¤போதும்
போதும்
இனியும்
அழுவதற்கு
அதனிடம்
ஆற்றல் இல்லை.

¤என் மாயமோகினியே
மௌனம் உடை
மனதின் உணர்வுகளை வார்த்தையால் கடை
உள்ளதைச் சொல்;

¤எதுவாயினும்
ஏற்கின்ற
தைரியம்
எனக்கும்
என் எழுதுகோலுக்கும்
இருக்குமென்று நினைக்கிறேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...